உலகக் கிண்ணத்தில் புதிய சாதனை படைத்த ஸ்டாக்

620
©Getty Images

12 ஆவது ஐ.சி.சி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) லோர்ட்ஸ் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. குறித்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறினாலும் அவ்வணி வீரரினால் சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.

224 என்ற இலகு வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலிருந்து நிலையான இணைப்பாட்டத்தை பகிர்ந்து கொண்டது. ஜேசன் ரோய் மற்றும் ஜொனி பெயர்ஸ்டோவ் ஜோடி இன்றைய போட்டியில் அபாரமாக துடுப்பாடி 124 ஓட்டங்களை குவித்தது. 

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக ஜொலித்த வீரர்கள்

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் யார் என்பதை தீர்மானிக்கும்…..

இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடும் போது அவுஸ்திரேலிய அணியின் 18 ஆவது ஓவரை வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டாக் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்துவீச்சில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜொனி பெயர்ஸ்டோவ் LBW முறையில் ஆட்டமிழந்தார். 

மிட்செட் ஸ்டாக் குறித்த விக்கெட்டை வீழ்த்தியதும் உலகக்கிண்ண சாதனை ஒன்றை படைத்துள்ளார். உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியே மிட்செல் ஸ்டாக் இவ்வாறு சாதனை படைத்துள்ளார். 

இந்த ஆண்டு உலகக்கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தான் அணியுடன் 1 விக்கெட், மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 5 விக்கெட்டுக்கள், இந்திய அணியுடன் 1 விக்கெட், பாகிஸ்தான் அணியுடன் 2 விக்கெட்டுக்கள், இலங்கை அணியுடன் 4 விக்கெட்டுக்கள், பங்களாதேஷ் அணியுடன் 2 விக்கெட்டுக்கள், இங்கிலாந்து அணியுடன் 4 விக்கெட்டுக்கள், நியூசிலாந்து அணியுடன் 5 விக்கெட்டுக்கள், தென்னாபிரிக்க அணியுடன் 2 விக்கெட்டுக்கள் மற்றும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் 1 விக்கெட் என்றவாறு மொத்தமாக 27 விக்கெட்டுக்களை வீழ்த்தி இவ்வாறு சாதனை படைத்துள்ளார். 

இதற்கு முன்னர் அதே அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில் மொத்தமாக 26 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். தற்போது அவுஸ்திரேலிய வீரரின் சாதனையை அவுஸ்திரேலிய வீரரே முறியடித்துள்ளார். 

2010 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் அறிமுகம் பெற்ற 29 வயதாகும் மிட்செல் ஸ்டாக் அவுஸ்திரேலிய அணிக்காக 84 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 171 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 

இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில்……

ஒரு உலகக்கிண்ண தொடரில் அதிக விக்கெட்டுக்களை  வீழ்த்தியவர்கள்

  • மிட்செல் ஸ்டாக் (அவுஸ்திரேலியா) – 27 விக்கெட்டுக்கள் (2019)
  • கிளென் மெக்ராத் (அவுஸ்திரேலியா) – 26 விக்கெட்டுக்கள் (2007)
  • சமிந்த வாஸ் (இலங்கை) – 23 விக்கெட்டுக்கள் (2003)
  • ஷோன் டைட் (அவுஸ்திரேலியா) – 23 விக்கெட்டுக்கள் (2007)
  • முத்தையா முரளிதரன் (இலங்கை) – 23 விக்கெட்டுக்கள் (2007)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<