இலங்கை வேகப் பந்துவீச்சாளர்களுக்கு மோசமான நாடு அல்ல – அண்டர்சன்

476

காலி கிரிக்கெட் மைதானமானது சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான மைதானம் என சொல்லப்பட்டாலும், காலி மைதானம் வேகப் பந்துவீச்சாளர்கள் நினைப்பது போல் மோசமான மைதானம் இல்லை எனவும், தான் இதற்கு முன் காலி மைதானத்தில் விக்கெட்டுக்களை எடுத்திருந்ததாகவும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் தெரிவித்துள்ளார். 

கொவிட் – 19 வைரஸினால் கடந்த வருடம் தடைப்பட்ட இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மீண்டும் விளையாடுவதற்காக ஜோ ரூட் தலைமையிலான 40 பேர் கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடந்த திங்கட்கிழமை காலை இலங்கையை வந்தடைந்தது.

இலங்கை வரும் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு கொரோனா இல்லை

இந்த நிலையில் இலங்கை வருவதற்கு முன் கடந்த வாரம், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் காலியில் காணப்படுகின்ற அதிக ஈரப்பதம் மற்றும் வெப்பத்தை சமாளிக்க இங்கிலாந்தின் Loughborough  என்ற மிகவும் வெப்பமான பகுதியில் பயிற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.

அதுமாத்திரமின்றி, இந்தக் காலப்பகுதியில் இங்கிலாந்தில் குறைந்த வெப்பநிலை காணப்படுவதால், அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர்களுக்கும், அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கும் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள தடையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான இலங்கை வந்துள்ள இங்கிலாந்து அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் க்ரிக் பஸ் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவிக்கையில்,

”இலங்கையில் மிகக் குறைவான கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இலங்கை மக்களின் பாதுகாப்புக்காக அந்நாட்டு அரசாங்கம் முக்கிய கட்டுப்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். உண்மையில் இது வித்தியாசமாக தெரிந்தது. 

Video – இலங்கைக்கு வருகை தந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அண

ஆனால் நாங்கள் அதைப் பற்றி சிறிது நேரம் பேசியபோது, நாங்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தோம். குறிப்பாக விமான நிலையத்தில் வைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பார்த்தால் எமக்கு இங்குள்ள கட்டுப்பாடுகளை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது” என தெரிவித்தார்

முன்னதாக ஜேம்ஸ் அண்டர்சனின் 2003 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் இலங்கைக்கு வந்து விளையாடியிருந்தார். ஆனாலும் குறித்த இரண்டு சுற்றுப்பயணங்களிலும் அவரால் எதிர்பார்த்தளவு சோப்பிக்க முடியாமல் போனது.

எனினும், சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இலங்கை வந்த அவர், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் தலைவராக முன்நின்று செயற்பட்டு காலி டெஸ்டில் 72 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த நிலையில், 2018இல் இடம்பெற்ற சுற்றுப்பயணத்தில், அண்டர்சன் மீண்டும் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டார், அவர் இரண்டு போட்டிகளில் 41 ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தார்.

இலங்கை வந்துள்ள மொயீன் அலிக்கு கொவிட்-19 தொற்று! 

எனவே, இலங்கை ஆடுகளங்களில் விக்கெட்டுக்களைக் கைப்பற்றுவது தொடர்பில் அண்டர்சன் கருத்து தெரிவிக்கையில்

”இறுதியாக நடைபெற்ற இரண்டு சுற்றுப்பயணங்களில், சுழல்பந்து வீச்சாளர்கள் தான் சிறப்பாக செயல்பட்டனர்ஆடுகளங்கள் அவர்களுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் எங்களிடம் நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதனால் அவர்களுக்கு விக்கெட்டுக்களைக் கைப்பற்றுகின்ற வாய்ப்பு உள்ளது. பின்னர் பந்து ஸ்விங் ஆவதற்கான வாய்ப்பும் உள்ளது. புதிய பந்தில் நேர்த்தியாக பந்துவீசினால் விக்கெட்டுக்களை எடுக்கலாம்

இதற்கு முன்பு நான் காலியில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுக்களை எடுத்துள்ளேன். என்னைப் போலவே, மற்ற வேகப் பந்துவீச்சாளர்களும் காலியில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். எனவே, காலி மைதானம் வேகப் பந்துவீச்சாளர்கள் நினைப்பது போல் மோசமாக இல்லை

இலங்கை அணியுடன் விளையாடவுள்ள அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நிறைய வேலை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். குறுகிய காலத்தில் ஒரு சில ஓவர்களை மட்டுமே பந்துவீச வேண்டிவரும். ஆனால் அந்த குறுகிய காலத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான வாய்ப்பு உள்ளது” என குறிப்பிட்டார்.

டெஸ்ட் தொடரினை முழுமையாக இழந்த இலங்கை அணி

டெஸ்ட் விளையாடுகின்ற நாடுகளில், இங்கிலாந்து அணியானது தற்போது மிகவும் வலுவான டெஸ்ட் பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளது. மார்க் வூட், ஒல்லி ஸ்டோன் மற்றும் ஜொப்ரா ஆர்ச்சர் ஆகிய மூவரும் மிகவும் வேகமாக பந்துவீசுகின்ற வீரர்களாகவும், இடதுகை வேகப் பந்துவீச்சாளராக சாம் கரனும் அணியின் வேகப் பந்துவீச்சை பலப்படுத்தி வருகின்றார்.

ஜேம்ஸ் அண்டர்சன், ஸ்டுவர்ட் ப்ரோட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் விக்கெட்டை இலக்கு வைத்து பந்துவீசி இங்கிலாந்து அணிக்கு தமது அனுபவத்தைக் கொடுத்து வருவதுடன், சகீப் மஹ்மூத், க்ரைக் ஒவர்டன் மற்றும் ஒல்லி ரொபின்சன் ஆகிய வீரர்கள் மிகவும் நம்பகமான மேலதிக வேகப் பந்துவீச்சாளர்களாக உள்ளனர்.

இதனிடையே, இங்கிலாந்து அணியில் அதிகளவு வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பது தொடர்பில் ஜேம்ஸ் அண்டர்சன் கருத்து வெளியிடுகையில்,

”எமது அணியில் நிறைய வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பது மிகவும் நல்லது. ஒரு வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஒன்று சென்றால் ஒரு நல்ல பந்துவீச்சு அணியொன்று இருப்பது அந்த அணியின் வெற்றிக்கு சாதகத்தைக் கொடுக்கும் என்பதை நாங்கள் கண்டோம்.

பல வீரர்கள் நீக்கம்; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு

எனவே, இவர்களில் எவருக்கும் அணியில் உள்ள இடைவெளியை நிரப்பவும், அணிக்காக சிறப்பாக விளையாடவும் திறன் இருக்க வேண்டும். வீரர்களுக்கு காயங்கள் மற்றும்ய்வளிப்பது இருக்கலாம். எங்களுக்கு நிறைய பந்து வீச்சாளர்கள் இருக்க வேண்டும். இதனால் அவர்கள் சிறப்பாக விளையாடுகின்ற அந்த நன்மை இருக்கிறது” என அவர் தெரிவித்தார்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<