சுராஜ் ரன்திவின் மிரட்டும் பந்துவீச்சில் தப்பிய புளூம்பீல்ட்

304

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இடம்பெறும் ப்ரீமியர் லீக் தொடரின் B பிரிவுக்கான மூன்று போட்டிகள் இன்று (24) நிறைவடைந்தன. மூன்று நாட்கள் கொண்ட இந்த போட்டிகள் மூன்றும் வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றன.  

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்

பனாகொட, இராணுவ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் சரிசமமான திறமையை வெளிக்காட்டிய நிலையில் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

மும்பை இந்தியன்ஸ்: இலங்கை ரசிகர்களின் ஒரு தசாப்த காதல்

அது 2007 கிரிக்கெட் உலகக் கிண்ணம் என்ற புயல் வீசி….

புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லங்கன் அணி பாணந்துறை விளையாட்டுக் கழகத்திற்கு 284 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. எனினும் பாணந்துறை அணி கடைசி நாள் ஆட்டநேர முடிவின்போது 4 விக்கெட் இழப்பிற்கு 117 ஓட்டங்களை எடுத்திருந்தது.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 295 (75.2) – ஷிப்ரான் முத்தலிப் 58, லஹிரு டில்ஷான் 50, கீத் குமார 50, ராஜு கயாஷன் 36, சன்ஜுல அபேவிக்ரம 30 வினோத் பெரேரா 3/72, தரூஷ பெர்னாண்டோ 2/29, அமித் கௌஷல்ய 2/39, மிஷேன் சில்வா 2/46

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 267 (82.4) – மிஷேன் சில்வா 72, திமிர ஜயசிங்க 57, செஹான் வீரசிங்க 45, கீத் குமார 3/45, அயன்த டி சில்வா 3/66, துலஞ்சன மெண்டிஸ் 2/74

லங்கன் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 255/7d (62) – உஸாமா மிர் 77*, ஷிப்ரான் முத்தலிப் 48, சானக்க ருவன்சிறி 42, சஞ்சுல அபேவிக்ரம 26, செஹான் வீரசிங்க 2/68, இம்ரானுல்லாஹ் அஸ்லம் 3/28

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 117/4 (28) – இம்ருல் அஸ்லம் 64, மதுரங்க சொய்ஸா 1/9  

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவு

Photos: Lankan CC vs Panadura SC | SLC Major League 2018/19 – Tier “B”


கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

இரு படை அணிகளுக்கும் இடையில் கட்டுநாயக்க விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் கடைசிவரை வெற்றி வாய்ப்புக்காக போராடிய நிலையில் ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.

விமானப்படை விளையாட்டுக் கழகத்திற்கு 238 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கடைசி நாள் ஆட்ட நேர முடிவின்போது அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 183  ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதன்போது கடற்படை விளையாட்டுக் கழகத்தின் அணித் தலைவர் சுபுன் லீலரத்ன சதம் ஒன்றை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Photos: Air Force SC vs Navy SC | SLC Major League 2018/19 – Tier “B”

போட்டியின் சுருக்கம்

கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 190 (64.4) – தரூஷன் இத்தமல்கொட 91,  துஷான் ஹேமன்த 53, ரொஸ்கோ தட்டில் 4/17, சுமிந்த லக்ஷான் 2/34, உமேக சதுரங்க 2/37

விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 269 (66.5) – ரொஸ்கோ தட்டில் 59*, சச்சிக்க உதார 51, கௌஷல்ய கஜசிங்க 45, உதயவன்ஷ பராக்கிரம 32, ஹசின் டில்மான் 4/40, புத்திக்க மதுஷான் 2/31, சவிந்து பீரிஸ் 2/26

கடற்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 316/8d (76) – சுபுன் லீலரத்ன 124, கௌஷல்ய கஜசிங்க 45, சலித்த பெர்னாண்டோ 40, சுமிந்த லக்ஷான் 3/80, உமேக சத்துரங்க 2/110, திலிப் தாரக்க 2/23

விமானப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 183/7 (46) – திலிப் தாரக்க 84, துலேஷ் உதயங்க 30, சவிந்து பீரிஸ் 3/33, துஷான் ஹேமன்த 2/35

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவு


காலி கிரிக்கெட் கழகம் எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்

காலி கிரிக்கெட் கழகத்துடனான போட்டியில் புளூம்பீல்ட் அணி கடைசி விக்கெட்டை தக்கவைத்துக் கொண்டு போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கும் தினத்தை அறிவித்த மாலிங்க

இங்கிலாந்தில் இவ்வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண…..

கொழும்பு, புளூம்பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் புளூம்பீல்ட் அணிக்கு 308 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும், இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான சுராஜ் ரன்தீவ் காலி அணிக்காக அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த புளூம்பீல்ட் 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதும் கடைசி பத்து ஓவர்களுக்கும் கடைசி விக்கெட்டை தக்கவைத்துக் கொண்டு போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

Photos: Galle CC vs Bloomfield C & AC | SLC Major League 2018/19 – Tier “B”

அபாரமாக பந்துவீசிய சுராஜ் ரன்தீவ் 8 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். ரன்திவ் முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரன்தீவ் 2012 நவம்பர் மாதமே இலங்கை டெஸ்ட் அணிக்கு டைசியாக ஆடினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்  

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 219 (65.5) – ஹர்ஷ விதானகே 98, சமீன் கந்தனாரச்சி 33, அகலங்க கனேகம 23, திலான் துஷார 3/39, மதூஷன் ரவிச்சந்திரகுமார் 3/51, இம்ரான் கான் 2/33, திலீப் ஜயலத் 2/64

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 128 (72.4) – அசன்த சிங்கப்புலி 46*, கயான் சிறிசோம 3/49, அகலங்க கனேகம 2/21, சுராஜ் ரன்திவ் 2/24, ரஜீவ வீரசிங்க 2/26

காலி கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 216 (53.5) – சமீன் கந்தனாரச்சி 51, சுராஜ் ரன்திவ் 45, அரவிந்த பிரேமரத்ன 5/43, சனொஜ் தர்சிக்க 2/25

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 205/9 (72) – சச்சின் ஜயவர்தன 55, கசுன் அபேரத்ன 42, சுராஜ் ரந்திவ் 8/80

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவு

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<