Home Tamil இசிபதன கல்லூரியை ஒருநாள் போட்டியிலும் வீழ்த்திய தர்ஸ்டன் கல்லூரி

இசிபதன கல்லூரியை ஒருநாள் போட்டியிலும் வீழ்த்திய தர்ஸ்டன் கல்லூரி

247

தர்ஸ்டன் மற்றும் இசிபதன கல்லூரிகளுக்கு இடையிலான W A De Silva கிண்ணத்துக்கான 39 ஆவது சகோதரர்களின் சமர் 50 ஓவர்கள் கொண்ட மாபெரும் வருடாந்த கிரிக்கெட் போட்டியில் தர்ஸ்டன் கல்லூரி அணி, 139 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

Photos: Thurstan College vs Isipathana College – 39th One Day Encounter

பி. சரவணமுத்து மைதானத்தில் இன்று (03) நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தர்ஸ்டன் கல்லூரி அணியின் தலைவர் சந்தரு டயஸ் முதலில் துடுப்பாட தீர்மானித்தார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யொஹான் லியனகே 24 ஓட்டங்களுடன் வெளியேறிய நிலையில், 2 ஆவது விக்கெட்டுக்காக ஜயவிஹான் மஹவிதான மற்றும் ப்ருத்வி தருக்ஷய ஆகியோர் 60 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து மத்திய வரிசையில் களமிறங்கிய வீரர்கள் குறைந்தளவு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தாலும், அவ்வணிக்காக 5 ஆவது இலக்கத்தில் களமிறங்கி அதிரடியாக துடுப்பெடுத்தாடிய, ரனேஷ் சில்வா, 44 பந்துகளில் 65 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்று மேலும் வலுச்சேர்க்க, அந்த அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 256 ஓட்டங்களைப் பெற்றது.

இதன் போது தர்ஸ்டன் கல்லூரி அணிக்காக சிறப்பாக துடுப்பாடிய ஜயவிஹான் மஹவிதான 119 பந்துகளில் 83 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் இசிபதன கல்லூரி அணிக்காக வலதுகை சுழல் பந்துவீச்சாளரான தெவிந்து டிக்வெல்ல, 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

சகோதரர் சமரில் தர்ஸ்டன் கல்லூரி 27 ஆண்டுகளின் பின் வெற்றி

இசிபத்தன கல்லூரிக்கு எதிராக 56 ஆவது சகோதரர்கள் சமரில் ரனேஷ் சில்வாவின் சதம்…

பின்னர், 257 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இசிபதன கல்லூரி அணி, எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 36 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களினை மாத்திரமே பெற்று 139 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இதன்படி, இந்த வருடத்துக்கான மாபெரும் கிரிக்கெட் சமரின் ஒருநாள் போட்டியையும் தொடர்ச்சியாக 3 ஆவது தடவையாக தர்ஸ்டன் கல்லூரி அணி வெற்றி கொண்டது.

இசிபதன கல்லூரியின் துடுப்பாட்டத்தில் எந்தவொரு வீரரும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதில் எஷான் பெர்னாண்டோ (27), லெஷான் அமரசிங்க (18) அந்த அணி சார்பாக அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்திருந்தனர்.

பந்துவீச்சில், தர்ஸ்டன் கல்லூரியின் சந்தரு அவிஷ்க கௌஷல்ய 37 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுகளினை கைப்பற்றியதோடு, மறுமுனையில் சாலக பண்டார 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

இந்த நிலையில், போட்டியின் சிறந்த களத்தடுப்பாளருக்கான விருதை இசிபத கல்லூரியின் லெஷான் அமரசிங்கவும், சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை தர்ஸ்டன் கல்லூரியின் ரனேஷ் சில்வாவும், சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை அதே கல்லூரியைச் சேர்ந்த அவிஷ்க கௌஷல்யவும் பெற்றுக்கொண்டனர்.

ஐ.சி.சியின் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கிறேன்: நுவன் சொய்ஸா

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் மோசடிக்கெதிரான கோவையின் மூன்று…

இதேநேரம், போட்டியின் ஆட்டநாயகன் விருதை தர்ஸ்டன் கல்லூரியின் ஜயவிஹான் மஹவிதான பெற்றுக்கொண்டார்.

முன்னதாக இசிபத்தன கல்லூரிக்கு எதிராக கடந்த வாரம் நடைபெற்ற 56 ஆவது சகோதரர்கள் சமரில் சகலதுறையிலும் பிரகாசித்த தர்ஸ்டன் கல்லூரி 27 ஆண்டுகளுக்கப் பிறகு மாபெரும் கிரக்கெட் சமரை வெற்றி கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

போட்டியின் சுருக்கம்

தர்ஸ்டன் கல்லூரி – 256/5 (50) – ஜயவிஹான் மஹவிதான 83, ரனேஷ; சில்வா 65*, பவன்த ஜயசிங்க 27*, யொஹான் லியனகே 24, 5/36, தெவிந்து டிக்வெல்ல 3/55

இசிபதன கல்லூரி – 117/10 (36) – எஷான் பெர்னாண்டோ 27, லெஷான் அமரசிங்க 18, காலிக் அமாத் 13, அவிஷ; கௌஷலய் 3/37, சாலக பண்டார 2/08

போட்டி முடிவு – தர்ஸ்டன் கல்லூரி 139 ஓட்டங்களால் வெற்றி

A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: controllers/Embed.php

Line Number: 86

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 86
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once


A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: embed/match_result.php

Line Number: 115

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/views/embed/match_result.php
Line: 115
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 92
Function: view

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once



 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<