சகோதரர் சமரில் தர்ஸ்டன் கல்லூரி 27 ஆண்டுகளின் பின் வெற்றி

44
56th Battle of the Brothers

இசிபத்தன கல்லூரிக்கு எதிராக 56 ஆவது சகோதரர்கள் சமரில் ரனேஷ் சில்வாவின் சதம் மற்றும் சந்தரு டயஸின் அதிரடி பந்துவீச்சு மூலம் தர்ஸ்டன் கல்லூரி 27 ஆண்டுகளின் பின் வெற்றியை சுவைத்துள்ளது.

கொழும்பு, SSC மைதானத்தில் இன்று (23) நிறைவுற்ற இரண்டு நாள் கொண்ட போட்டியில் சகல துறையிலும் சோபித்த தர்ஸ்டன் கல்லூரி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இசிபத்தன கல்லூரியின் ஆதிக்கத்தை முறியடித்தது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான சகோதரர் சமரில் முடிவொன்று கிடைத்திருப்பது 20 ஆண்டுகளில் இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க மண்ணில் வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ள இலங்கை

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையே இன்று…

இதில் இரண்டாவது நாளான இன்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி சார்பில் ரனேஷ் சில்வா 109 ஓட்டங்களை பெற்றதோடு அன்ஜு கருணாநாயக்க 70 ஓட்டங்களை பெற்றார். இதன் மூலம் தர்ஸ்டன் கல்லூரி முதல் இன்னிங்ஸில் 276 ஓட்டங்களை பெற்றது.

இசிபத்தன கல்லூரி முதல் இன்னிங்ஸில் 169 ஓட்டங்களை பெற்ற நிலையில் 107 ஓட்டங்கள் பின்தங்கியே இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. எனினும் அந்த அணி வீரர்கள் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் 144 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இசிபத்தன கல்லூரி சார்பில் மத்திய வரிசையில் ரவிந்து ரத்னாயக்க 49 ஓட்டங்களை பெற்று அரைச் சதத்தை ஒரு ஓட்டத்தால் தவறவிட்டார்.

குறிப்பாக தர்ஸ்டன் கல்லூரியின் சந்தரு டயஸ் 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதன் மூலம் அவர் இந்தப் போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தர்ஸ்டன் கல்லூரி நிர்ணயிக்கப்பட்ட 38 ஓட்ட வெற்றி இலக்கையும் விக்கெட் இழப்பின்றி இலகுவாக எட்டியது.

Photos: Thurstan College vs Isipathana College | 56th Battle of the Brothers – Day 2 

ஸ்கோர் விபரம்

Title

Full Scorecard

Isipathana College

169/10 & 144/10

(50.2 overs)

Result

Thurstan College

276/10 & 41/0

(7.5 overs)

Thurstan won by 10 wickets

Isipathana College’s 1st Innings

BattingRB
Mandeepa Gunasekara c Nimesh b Sandaru1578
Thevindu Dickwella c Ayesh b Bawantha4070
Ravindu Rathnayake c Sandaru b Ayesh2048
Isuru Sandamal c Anju b Bawantha2653
Leshan Amarasinghe lbw by Sandaru35
Savindu Uthsara c Ayesh b Bawantha3042
Saveen Dhantha st Ranesh b Sandaru1928
Yasiru Kasthuriarachchi c Anju b Sandaru616
Madushika Sandaruwan c Ranesh b Bawantha04
Khaliq Amath b Bawantha02
Dinath Dissanayake not out00
Extras
10
Total
169/10 (57.1 overs)
Fall of Wickets:
1-30 (M Gunasekara, 17.6 ov), 2-68 (T Dickwella, 29.1 ov), 3-87 (R Rathnayake, 38.2 ov), 4-94 (L Amarasinghe, 39.3 ov), 5-115 (I Sandamal, 45.1 ov), 6-151 (S Uthsara, 51.3 ov), 7-168 (S Dhantha, 55.5 ov), 8-169 (M Sandaruwan, 56.4 ov), 9-169 (K Amath, 56.6 ov), 10-169 (Y Kasthuriarachchi, 57.1 ov)
BowlingOMRWE
Bawantha Jayasinghe143375 2.64
Avishka Kaushalya51140 2.80
Ayesh Harshana203661 3.30
Sandaru Dias15.11414 2.72
Shalaka Bandara3060 2.00

Thurstan College’s 1st Innings

BattingRB
Yohan Liyanage b Dinath1214
Jayavihan Mahavithana c Leshan b Khaliq717
Avishka Kaushalya c Leshan b Yasiru931
Anju Karunanayake b Dinath7080
Nimesh Perera c Isuru b Madushika1627
Ranesh Silva c Isuru b Ravindu109116
Rashmika Hiripitiya c Khaliq b Ravindu011
Bawantha Jayasinghe b Ravindu01
Shalaka Bandara (runout) Saveen1232
Ayesh Harshana b Khaliq1825
Sandaru Dias not out24
Extras
21
Total
276/10 (58.4 overs)
Fall of Wickets:
1-20 (Y Liyanage, 4.3 ov), 2-20 (J Mahavithana, 5.5 ov), 3-59 (A Kaushalya, 13.4 ov), 4-106 (N Perera, 23.2 ov), 5-154 (R Silva, 34.2 ov), 6-157 (R Hiripitiya, 36.4 ov), 7-157 (B Jayasinghe, 36.5 ov), 8-191 (S Bandara, 46.3 ov), 9-247 (A Harshana, 55.2 ov), 10-276 (R Silva, 58.4 ov)
BowlingOMRWE
Dinath Dissanayake11.22372 3.30
Khaliq Amath60432 7.17
Yasiru Kasthuriarachchi142471 3.36
Thevindu Dickwella100450 4.50
Madushika Sandaruwan112411 3.73
Ravindu Rathnayake5.21343 6.54
Savindu Uthsara10150 15.00

Isipathana College’s 2nd Innings

BattingRB
Mandeepa Gunasekara lbw by Sandaru2354
Thevindu Dickwella c Yohan b Sandaru3938
Ravindu Rathnayake c Nimesh b Sandaru4981
Isuru Sandamal c Rashmika b Yohan017
Leshan Amarasinghe c Jayavihan b Bawantha1138
Savindu Uthsara lbw by Sandaru010
Saveen Dhantha lbw by Ayesh1334
Madushika Sandaruwan c Rashmika b Ayesh415
Yasiru Kasthuriarachchi c Shalaka b Sandaru04
Khaliq Amath b Sandaru18
Dinath Dissanayake not out05
Extras
4
Total
144/10 (50.2 overs)
Fall of Wickets:
1-54 (M Gunasekara, 14.4 ov), 2-67 (T Dickwella, 18.2 ov), 3-79 (I Sandamal, 23.5 ov), 4-96 (L Amarasinghe, 30.6 ov), 5-104 (S Uthsara, 34.5 ov), 6-128 (S Dhantha, 41.6 ov), 7-140 (R Rathnayake, 46.3 ov), 8-143 (M Sandaruwan, 47.6 ov), 9-143 (Y Kasthuriarachchi, 48.1 ov), 10-144 (K Amath, 50.2 ov)
BowlingOMRWE
Ayesh Harshana163392 2.44
Sandaru Dias17.21546 3.14
Bawantha Jayasinghe80271 3.38
Yohan Liyanage80171 2.13
Shalaka Bandara1070 7.00

Thurstan College’s 2nd Innings

BattingRB
Yohan Liyanage not out1619
Jayavihan Mahavithana not out2128
Extras
4
Total
41/0 (7.5 overs)
Fall of Wickets:
BowlingOMRWE
Ravindu Rathnayake20120 6.00
Yasiru Kasthuriarachchi3.50150 4.29
Khaliq Amath21100 5.00

முடிவு – தர்ஸ்டன் கல்லூரி 10 விக்கெட்டுகளால் வெற்றி