லண்டனில் நடைபெற்றுவரும் உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பொட்ஸ்வானாவைச் சேர்ந்த ஐசாக் மக்வாலா தனிச் சுவட்டில் ஓடி போட்டியை நிறைவு செய்து மெய்வல்லுனர் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டினார்.

Isaac Makwala16ஆவது உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் லண்டன் ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வருகின்றது. இதில் பங்கேற்றிருந்த ஒரு சில வீரர்கள் உணவு நஞ்சானமையினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். இதன் காரணமாக லண்டனின் டவர் ஹோட்டலில் தங்கியிருந்த ஜேர்மனியைச் சேர்ந்த 30 மெய்வல்லுனர்களை வேறு ஹோட்டலில் தங்கவைக்கவும் ஏற்பாட்டுக் குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இது இவ்வாறிருக்க உணவு நஞ்சானமையினால் இரைப்பை குடல் அழற்சிக்கு உள்ளாகி வாந்தியுடனான ஒரு வகை வைரஸினால் பாதிக்கப்பட்ட பொட்ஸ்வானா நாட்டைச் சேர்ந்த குறுந்தூர வீரர் ஐசாக் மக்வாலாவுக்கு 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிப் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டமை மெய்வல்லுனர் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

தனது இறுதி 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தோல்வியை சந்தித்த போல்ட்

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கங்களை அள்ளியவரும்…

மெய்வல்லுனர் அரங்கில் 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தை 44இற்கு குறைவான செக்கன்களிலும், 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தை 20இற்கு குறைவான செக்கன்களிலும் நிறைவு செய்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை தன்னகத்தே கொண்டுள்ள 30 வயதான மக்வாலா, குறித்த போட்டியில் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த காலத்தையும் பதிவு செய்த வீரராக விளங்கினார்.

Isaac Makwala-2இந்நிலையில், ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக் சம்பியனும், உலக சாதனையாளருமான தென்னாபிரிக்க வீரர் வேன் நீகெர்க்குக்கு சவால் அளிக்கக்கூடிய வீரராகக் கருதப்பட்ட ஐசாக் மக்வாலா, உணவு நஞ்சான திங்களன்று நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் திறன்காண் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.

தோடர்ந்து ஒரு வகை வைரஸ் காய்ச்சல் மற்றும் வாந்தி பேதியினால் பாதிக்கப்பட்ட மக்வாலா, அதே தினத்தன்று மாலை 400 மீற்றர் இறுதிப் போட்டிக்கு தயாராக இருந்த போதிலும், சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படவில்லை எனவும், மருத்துவ அறிக்கை ஏற்பாட்டுக் குழுவினரிடம் சமர்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு அவருக்கு போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு தட்டிப்பறிக்கப்பட்டதுடன், போட்டியின் ஏற்பாட்டுக்கு குழுவினால் மைதானத்திலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். அத்துடன், 48 மணி நேரம் தனது அறையில் இருக்க வேண்டும் என்று சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் உத்தரவிட்டதால் மக்வாலாவின் 400 மீற்றர் பதக்க கனவு தகர்ந்தது.

Isaac Makwala-3இந்நிலையில், அதே தினத்தன்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் மக்வாலாவின் பங்குபற்றலின்றி, ஒலிம்பிக் சம்பியனான தென்னாபிரிக்காவின் வேன் நீர்கெர்க் எளிதாக தங்கப்பதக்கம் வென்றார். இதனையடுத்து மக்வாலாவுக்கு விதிக்கப்பட்ட தடை ஊடகங்களில் வைரலாக பரவியதுடன், பொட்ஸ்வானா மற்றும் ஆபிரிக்க மெய்வல்லுனர் சம்மேளனங்களின் வைத்தியர்கள் மற்றும் நிர்வாகிகள் இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

உலக மெய்வல்லுனர் தொடரில் தொடரும் அமெரிக்காவின் ஆதிக்கம்

லண்டனில் நடைபெற்றுவருகின்ற 16ஆவது உலக …

இதனையடுத்து மக்வாலாவின் தடை குறித்து சர்வதேச தடகள சம்மேளனம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், னது கடின உழைப்பையும், திறமையையும் ஐசக் மக்வாலா இந்த போட்டியில் வெளிப்படுத்த வாய்ப்பு இல்லாமல் போனதற்கு சர்வதேச தடகள சம்மேளனம் மிகவும் வருந்துகிறது. எல்லா வீரர்களின் நலனையும் கருத்தில் கொண்டு நாங்கள் முடிவு எடுத்தோம்” என்று தெரிவிக்கப்பட்டது.

Isaac Makwala-4எனினும், குறித்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வான் நீகெர்க் கருத்து தெரிவிக்கையில், மக்வாலா போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனது மிகுந்த வேதனைக்குரிய விடயமாகும். 200 மீற்றர் ஓட்டப் பந்தய தகுதி சுற்றுக்கு முன்பாக நான் அவரை பார்த்தேன். அப்போது அவரது தோளில் கைபோட்டு விரைவில் நீ குணமடைவாய் என்று சொல்ல விரும்பினேன். உண்மையை சொல்லப்போனால் எனது பதக்கத்தை கூட அவருக்கு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் விளையாட்டில் இது மாதிரி நடப்பது சகஜம் என்றார்.

Isaac Makwala-5இதனையடுத்து புதன்கிழமை மாலை சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் மக்வாலா தொடர்பில் மற்றுமொரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. இதில் ”20.53 செக்கன்களில் 200 மீற்றர் போட்டியை 7ஆவது இலக்க சுவட்டில் தனியாக ஓடி வெற்றி பெற்றால் மாத்திரமே இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அன்றைய தினம் மாலை 6.40க்கு மழைக்கும் மத்தியில் 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தனியொரு நபராகக் கலந்துகொண்ட மக்வாலா, ரசிகர்களின் உற்சாகத்துக்கு மத்தியில் 20.20 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து அரையிறுதிக்குத் தகுதிபெற்றார்.

இளையோர் ஆசியக் கிண்ணத்தை இந்தியாவில் நடத்த பாகிஸ்தான் எதிர்ப்பு

இம்முறை பெங்களூரில் நடைபெறவுள்ள 19…

இதனையடுத்து 2 மணி நேரத்திற்குப் பிறகு அரையிறுதிச் சுற்றில் மீண்டும் களமிறங்கிய மக்வாலா, 20.14 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 2ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். இதன்படி 400 மீற்றரில் பங்குபற்றும் வாய்ப்பை இழந்த அவர், 200 மீற்றர் இறுதிப் போட்டியில் களமிறங்கி தனது பதக்க கனவை நிறைவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Isaac Makwala-6போட்டியின் பிறகு மக்வாலா ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில், நான் மிகவும் கோபத்துடன் இப்போட்டியில் பங்குபற்றினேன். 400 மீற்றரில் ஓடுவதற்கு நான் எதிர்பார்த்துள்ளேன். அதுதான் நான் விரும்புகின்ற போட்டி. எனவே 400 மீற்றர் போட்டியை மீண்டும் நடத்துமாறு நான் சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன்” என கவலையுடன் தெரிவித்தார்.

மெய்வல்லுனர் அரங்கில் முதற்தடவையாக இடம்பெற்ற சம்பவமாக கருதப்படுகின்ற மக்வாலாவின் போட்டித் தடையானது, திட்டமிடப்பட்ட சதி என விளையாட்டு ஆர்வலர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். எனினும், திறமைகளுக்கு எதுவும் தடையல்ல, மன உறுதியும் விடா முயற்சியும் தான் வீரனொருவரை வெற்றியின் உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்பதை மக்வாலா நிரூபித்துள்ளார். இது அனைத்து வீரர்களுக்கும் மிகப் பெரிய முன்மாதிரியாகும்.