கடந்த இரண்டரை ஆண்டுகளில், கிட்டத்தட்ட 800 கால்பந்துப் போட்டிகளில், 2,177 கோல்கள் போடப்பட்டிருக்கும் நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள 2018 உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகள் நிறைவடையும் தறுவாயை எட்டியுள்ளது.
ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் 2018 உலகக் கிண்ணத்திற்கு 32 நாடுகளே பங்கேற்க முடியும் என்ற நிலையில் அதற்கு தகுதி பெறுவதற்கு உலகெங்கும் 200க்கும் அதிகமான நாடுகள் போட்டியில் குதித்தன.
பிபா உலகக் கிண்ணத்திற்கு ஐந்தாவது முறையாகவும் தகுதி பெற்ற சவூதி அரேபியா
எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிபா (FIFA) உலகக் கிண்ணத்திற்கு சவூதி…
ஏற்கனவே, போட்டியை நடத்தும் ரஷ்யா உட்பட எட்டு அணிகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளன. இன்னும் 15 நாடுகளை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள் இன்று (05) தொடக்கம் வரும் செவ்வாய்க்கிழமை (10) வரை உலகெங்கும் நடைபெறவுள்ளன.
ஏற்கனவே பல அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்திருக்கும் நிலையில் ஐரோப்பா, தென் அமெரிக்கா, வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க மண்டலங்களின் தகுதிகாண் போட்டிகள் இந்த வாரம் விறுவிறுப்பை ஏற்படுத்த காத்துள்ளன.
ஐரோப்பா
உலகக் கிண்ணத்தில் அதிகபட்சமாக 13 அணிகளை தேர்வு செய்யும் ஐரோப்பிய மண்டலத்தில், அதற்கான போட்டியில் பலம் மிக்க பல டஜன் அணிகள் போட்டியிடுகின்றன.
இந்த மண்டலத்தில் ரஷ்யா போட்டியை நடாத்துவதால், அவ்வணி தகுதிகாண் போட்டி இன்றி உலகக் கிண்ணத்தில் தனது இடத்தை உறுதி செய்தது. தவிர, பெல்ஜியம் அணி கடந்த மாதம் நடந்த தகுதிகாண் போட்டிகளை அடுத்து தனது இடத்தை உறுதி செய்து கொண்டுள்ளது.
இந்நிலையில் ஐரோப்பிய மண்டலத்தில் இன்னும் 12 அணிகள் தகுதிபெறவுள்ளன.
ஐரோப்பா மண்டலத்தின் முதல் சுற்று தகுதிகாண் போட்டிகளில் 52 அணிகள் ஒன்பது குழுக்களாக பிரிந்து பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு குழுவிலும் முதலிடத்தை பெறும் அணிகள் உலகக் கிண்ணத்திற்கு நேரடியாக தகுதி பெறும். இரண்டாவது இடத்தை பெறும் சிறந்த எட்டு அணிகள் இரண்டாவது சுற்றான பிளே ஓப் (Play off) போட்டிகளில் விளையாடும்.
Interview with Popular football player Mohamed Issadeen
Interview with Mohamed Issadeen, Former Sri Lanka National football team player and current SL army football team player.
இதில் A குழுவை அதிக நெருக்கடி கொண்ட குழுவாக பார்க்கலாம். இக்குழுவில் பிரான்ஸ் முதலிடத்தில் இருப்பதோடு ஸ்வீடன் அதிக நெருக்கத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த குழுவில் அனைவரது பார்வையும் நெதர்லாந்து அணியின் பக்கம் சென்றுள்ளது. 2014 உலகக் கிண்ண அரையிறுதியில் ஆடிய அந்த அணி அடுத்த ஆண்டு இடம்பெறும் உலகக் கிண்ண பங்கெடுப்பை இழக்கும் வாய்ப்புகள் தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றன.
நெதர்லாந்து வரும் சனிக்கிழமை (07) பெலாரஸ் அணியையும், செவ்வாய்க்கிழமை (10) ஸ்வீடனையும் எதிர்கொள்கிறது. தனது உலகக் கிண்ண கனவை தக்கவைக்க அந்த அணிக்கு இந்த இரு போட்டிகளும் தீர்க்கமாக இருக்கும்.
B குழுவை பொறுத்தவரை சுவிட்சர்லாந்து மற்றும் போர்த்துக்கல் ஆகிய அணிகள் முதல் இரு இடங்களையும் ஆக்கிரமித்துள்ளன. ஏனைய அணிகளால் இரு அணிகளையும் நெருங்குவது கடினம். இந்நிலையில் யார் நேரடி தகுதிபெறப்போவது, யார் பிளே ஓப் சுற்றுக்கு தள்ளப்படப்போகிறது என்று இரு அணிகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
சனிக்கிழமை சுவிட்சர்லாந்து ஹங்கேரியையும் போர்த்துக்கல் அன்டொர்ராவையும் எதிர்கொள்கின்றன. ஆனால் வரும் செவ்வாய்க்கிழமை இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதும் விறுவிறுப்பான போட்டி நடைபெறும்.
உலகக் கிண்ணத்தை வென்ற அணிக்கு நேரடி தகுதி இல்லை என்ற நிலையில் நடப்புச் சம்பியன் ஜெர்மனி C குழுவில் ஆடுகிறது. என்றாலும் அந்த அணி இதுவரையான 8 போட்டிகளிலும் வென்று யாரும் நெருங்க முடியாமல் முதலிடத்தை உறுதிசெய்துள்ளது. இந்த நிலையில் ஜெர்மனி அணி தனது குழுவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் வட அயர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது. யார் உலகக் கிண்ணத்திற்கு நேரடியாக தகுதி பெறப்போகிறது என்பதை பார்க்க இந்த போட்டி முக்கியமாக இருக்கும்.
D குழுவில் அதிக நெருக்கமான போட்டி நிலவுகிறது. முதலிடத்தில் இருக்கும் செர்பியா குறைந்தது பிளே ஓப் சுற்றுக்கு தகுதிபெறுவது உறுதியாகியுள்ளது. அடுத்த இடங்களில் இருக்கும் வேல்ஸ், அயர்லாந்து மற்றும் ஆஸ்திரிய அணிகளுக்கு தொடர்ந்து முதலிரு இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கை ஒருநாள் குழாம் இதுதான்
தேசிய அணியின் தெரிவாளர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள …
போலந்து, மொன்டினிக்ரோ மற்றும் டென்மார்க் அணிகளுக்கு இடையில் வெறுமனே 3 புள்ளிகள் மாத்திரம் இடைவெளி இருக்கும் நிலையில் E குழுவில் இந்த மூன்று அணிகளும் உலகக் கிண்ண வாய்ப்பை தக்கவைத்துள்ளன.
F குழுவில் இங்கிலாந்து முதலிடத்தில் இருந்த போதும் அடுத்த இடங்களில் இருக்கும் ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு வாய்ப்பு திறந்தே உள்ளன.
எந்த போட்டியிலும் தோற்காத இங்கிலாந்து ஒரு வெற்றி அல்லது இரு சமநிலைகளை பெற்றாலோ அல்லது ஸ்லோவாக்கியா தனது இரண்டு போட்டிகளிலும் ஒரு புள்ளியையேனும் பெறாதபட்சத்திலோ உலகக் கிண்ணத்திற்கு இங்கிலாந்து நேரடியாக தகுதிபெற்றுவிடும். இங்கிலாந்து இன்று ஸ்லோவேனியாவையும் ஞாயிற்றுக்கிழமை (08) லிதுவேனியாவையும் எதிர்கொள்கிறது.
22 புள்ளிகளுடன் G குழுவில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயின் அணி நேரடித் தகுதியை நெருங்கி இருப்பதோடு 19 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் இத்தாலி பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறலாம்.
H குழுவில் 8 போட்டிகளில் ஏழை வென்று ஒன்றை சமன் செய்த பெல்ஜியம் அந்த குழுவில் 22 புள்ளிகளோடு ஐரோப்பாவின் முதல் அணியாக ஏற்கனவே உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்றுவிட்டது. இந்நிலையில் உலகக் கிண்ண வாய்ப்பை தக்கவைக்க அந்த குழுவில் பொஸ்னியா, ஹெர்சிகோவினா, கிரீஸ் மற்றும் சைப்ரஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
குரோசியா, உக்ரைன், துருக்கி மற்றும் ஐஸ்லாந்து அணிகள் I குழுவில் முதலிரு இடங்களை பிடிக்க போட்டியிடுகின்றன. துருக்கி நாளை (06) நடைபெறும் ஐஸ்லாந்துடனான போட்டியில் தோற்றால் அது வெளியேறிவிடும். அதேபோன்று உக்ரைன் நாளை கொசோவோவிடம் தோற்றுவிட்டால் வெளியேறிவிடும்.
வெற்றி தோல்வியின்றி நிறைவுற்ற கம்பளை மண்ணின் முதல் DCL போட்டி
கிரிஸ்டல் பலஸ் மற்றும் சொலிட் விளையாட்டுக் கழகங்கள் மோதிய டயலொக் சம்பியன் …
தென் அமெரிக்கா
நான்கு இடங்களுக்காக 10 அணிகள் போட்டியிடும் தென் அமெரிக்க மண்டலத்தில் பிரேஸில் அணி லீக் முறையிலான போட்டியில் முதலிடத்தை பெற்று ஏற்கனவே உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்றுவிட்டது.
மறுபுறம் குழுநிலையில் கடைசி இடங்களை பெற்றிருக்கும் பொலிவியா மற்றும் வெனிசுவேலா உலகக் கிண்ண வாய்ப்பை இழந்துவிட்டன. கொலம்பியா மற்றும் உருகுவே நேரடி தகுதிபெற வாய்ப்பு உள்ளது.
இதில் லியோனல் மெசியின் ஆர்ஜன்டீன அணி உலகில் மிகப்பெரிய கால்பந்து தொடரில் இருந்து வெளியேறும் அபாயத்திற்க முகம்கொடுத்துள்ளது.
1970 ஆம் ஆண்டுக்கு பின் உலகக் கிண்ணத்திற்கு தொடர்ந்து தகுதிபெற்றும் இரு முறை கிண்ணத்தை வென்றும் உள்ள ஆர்ஜன்டீன அணி தற்போது தென் அமெரிக்க மண்டலத்தில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
ஆர்ஜன்டீனா இன்று (05) தனது சொந்த மண்ணில் பெருவை எதிர்கொள்கிறது. இதில் வெற்றிபெறத் தவறினால் அது உலகக் கிண்ணத்தை தவறவிடும் நிலை உள்ளது. 1969ஆம் ஆண்டிலும் இதே பொம்பானேரா அரங்கில் பெரு அணிக்கு எதிரான போட்டியை 2-2 என சமநிலை செய்ததாலேயே அடுத்து ஆண்டு மெக்சிகோவில் நடந்த உலகக் கிண்ண தகுதியை ஆர்ஜன்டீனா இழக்க நேர்ந்தது. அதுவே அந்த அணி தகுதிபெறாத ஒரே உலகக் கிண்ணமாகும்.
ஆபிரிக்கா
ஐந்து அணிகளை தேர்வு செய்வதற்காக 54 அணிகள் போட்டியிட்ட ஆபிரிக்க மண்டலத்தில் இதுவரை எந்த அணியும் தேர்வாகவில்லை. எனினும் 15 அணிகள் தொடர்ந்து போட்டியில் உள்ளன.
சொந்த அரங்கில் மென்சஸ்டர் சிடியிடம் தோல்வியுற்ற செல்சி
ப்ரீமியர் லீக் சுற்றுப்போட்டியின் ஜாம்பாவன்களான மென்சஸ்டர் சிடி மற்றும் செல்சி கழகங்கள் …
நைஜீரியா தனது ஆறாவது உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற நெருங்கி இருக்கும் நிலையில் லிவர்பூல் வீரர் முஹமது சலா தலைமையிலான எகிப்து 1990க்கு பின் முதல் உலகக் கிண்ண வாய்ப்பை நோக்கி முன்னேறுகிறது. எனினும் ஆபிரிக்க கிண்ண சம்பியன் கெமரூன் உலகக் கிண்ண வாய்ப்பை இழந்துவிட்டது.
ஆபிரிக்க மண்டலத்தில் பிளே ஓப் போட்டிகள் இல்லாத நிலையில் ஐந்து குழுநிலை போட்டிகளில் ஒவ்வொரு குழுவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் உலகக் கிண்ணத்திற்கு முன்னேறும். துனீசியா, ஐவரிகோஸ்ட் மற்றும் புர்கினா பாசோ ஆகிய அணிகள் ஏனைய குழுக்களில் முதலிடத்தில் உள்ளன.
கொன்காகப்
சுருக்கமாக கொன்காகப் (Concacaf) என அழைக்கப்படும் வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் மண்டலத்தில் மெக்சிகோ தொடர்ந்து ஏழாவது முறையாக உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளது. கொஸ்டாரிகாவும் இந்த மண்டலத்தில் உலகக் கிண்ணத்திற்கான நேரடி தகுதியை நெருங்கியுள்ளது.
எனினும் நேரடி தகுதிக்கான மூன்றாவது இடத்திற்கு போட்டி நிலவுகிறது. இந்த இடத்திற்கு பனாமா அந்த வாய்ப்பை பெற முன்னிலையில் உள்ளது. அமெரிக்கா மற்றும் ஹொன்டுராஸ் அணிகளே அதற்கு சவாலாக உள்ளன.
கொன்காகப் மண்டலத்தில் முதல் மூன்று அணிகளே நேரடி தகுதி பெறும். நான்காது இடத்தை பெறும் அணி ஆசிய மண்டலத்தில் ஐந்தாவது இடத்தை பெறும் அணியுடன் பிளே ஓப் சுற்றில் மோதும். இந்த போட்டிகள் வரும் நவம்பரில் நடைபெறவுள்ளன.
ஆசியா
ஆசிய மண்டலத்தில் நான்கு அணிகளே உலகக் கிண்ணத்தில் நேரடியாக தகுதிபெற முடியும் என்ற நிலையில் அந்த இடத்திற்காக 46 அணிகள் போட்டியில் குதித்தன. எனினும் அந்த நான்கு இடங்களுக்கும் ஈரான், தென் கொரியா, ஜப்பான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் தம்மை தகுதியாக்கிக்கொண்டனர்.
ஆசிய மண்டலத்திற்கான ரவுண்ட்-ரொபின் (round-robin) சுற்று போட்டிகள் முடிந்துவிட்டன. இதில் A மற்றும் B குழுக்களில் முறையே மூன்றாவது இடத்தை பிடித்த சிரியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகியன இரண்டு பிளே ஓப் போட்டிகளில் விளையாடும்.
ஆறு ஆண்டு யுத்தத்திற்கு மத்தியில் ஆடும் சிரியா நிதி வசதிகள் இன்றி தனது சொந்த நாட்டில் இருந்து 9000 மைல்கள் தொலைவில் உள்ள மலேஷியாவை தளமாகக் கொண்டே உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஆடுகிறது.
இதன்படி அவ்வணி இன்று மாலை மலேஷியாவின் ஹங் ஜெபத் அரங்கில் முதல் பிளே ஓப் சுற்றில் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவிருப்பதோடு வரும் செவ்வாய்க்கிழமை அவுஸ்திரேலியா சென்று இரண்டாவது பிளோ ஓப் போட்டியில் ஆடவுள்ளது.
இதில் வெற்றிபெறும் அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற கொன்காகப் மண்டலத்துடனான பிளோ ஓப் போட்டியில் ஆடவுள்ளது.