இந்திய லெஜண்ட்ஸ் அணியின் இர்பான் பதானுக்கும் கொரோனா உறுதி!

147
Irfan Pathan

வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு உலக டி-20 தொடரில் விளையாடிய இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது நாளொன்றுக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகிறார்கள் என அந்நாட்டு சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அண்மையில் ராய்;ப்பூரில் நிறைவடைந்த வீதிப் பாதுகாப்பு உலக டி-20 தொடரில் சம்பியன் பட்டம் வென்ற சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜண்ட்ஸ் அணி வீரர்கள் ஒவ்வொருவராக கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

>> சச்சின் டெண்டுல்கருக்கு கொவிட்-19 தொற்று!

கடந்த சனிக்கிழமை சச்சின் டெண்டுல்ரகர் வெளியிட்ட டுவீட்டில், தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். குடும்பத்தில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்திய லெஜண்ட்ஸ் அணியில் விளையாடிய யூசுப் பதானுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதுடன், அவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக டுவிட்டர் மூலம் தெரிவித்தார்

இதனையடுத்து, லெஜண்ட்ஸ் தொடரில் விளையாடிய தமிழக முன்னாள் வீரர் சும்பரமணியம் பத்ரிநாத்திற்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனைத் தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்

நான் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொண்டும், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சாதாரண அறிகுறிகளும் உள்ளன. வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் எனப் பதிவிட்டார்.

எனவே, இந்திய லெஜண்ட்ஸ் அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது இர்பான் பதானுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

>> ச்சின், யூசுப் பதானைத் தொடர்ந்து பத்ரிநாத்துக்கும் கொவிட்-19 தொற்று

இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இர்பான் பதான், அறிகுறிகள் எதுவும் இல்லாமல் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய லெஜண்ட்ஸ் அணியில் தற்போதுவரை நான்கு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பலருக்கும் தொற்று உறுதியாகலாம் எனவும் கூறப்படுகிறது

இதனால் வீதிப் பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களும் PCR  பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<