IPL 2020 தொடரிலிருந்து விலகிய முன்னணி வீரர்கள்

616

கிரிக்கெட் உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) T20 கிரிக்கெட் தொடர் இந்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது. அதற்கான போட்டி அட்டவணையும் அண்மையில் வெளியிடப்பட்டது. 

இதன்படி, முதல் போட்டியில் வழமை போல சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.  

IPL கிரிக்கெட்டில் களமிறங்கும் முதல் அமெரிக்க வீரர்

கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பல்வேறு சர்ச்சைகளுடன் நடைபெறவுள்ள இம்முறை .பி.எல் தொடரில் வீரர்களுக்கும் மனரீதியான பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் பல வீரர்கள் தங்களது சொந்த காரணங்களுக்காக .பி.எல் தொடரில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்

எனவே, இந்த வருட .பி.எல் தொடரில் இதுவரை விலகிய வீரர்களின் பட்டியல் மற்றும் அவர்களுக்கான மாற்று வீரர்களின் பட்டியலை இந்தக் கட்டுரை ஆராயவுள்ளது.

சுரேஷ் ரெய்னா (சென்னை சுப்பர் கிங்ஸ்)

இம்முறை .பி.எல் தொடருக்காக மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, கடந்த 22ஆம் திகதி டுபாயை சென்றடைந்தது

இம்முறை ஐ.பி.எல் தொடரில் இருந்து சொந்த காரணங்களுக்காக முதன்முதலாக வெளியேறியவர் ரெய்னா. சென்னை அணியில் 13 பேருக்கு கொவிட் – 19 வைரஸ் உறுதியான பின், அவ்வணி ஒரு இக்கட்டான சூழ்நிலையை முகங்கொடுத்திருந்த வேளையில் அவசர அவசரமாக சுரேஷ் ரெய்னா நாடு திரும்பினார்

இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டன. முதலில் பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் அவருடைய மாமா குடும்பத்தார் திருடர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் எனவும், அவரது குடும்பத்தாரை பார்ப்பதற்காக நாடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது

Video – கொரோனாவினால் மீண்டும் தள்ளிப் போகும் பங்களாதேஷ் தொடர்? |Sports RoundUp – Epi 132

ஆனால், இந்த வருடம் .பி.எல் தொடரில் இவர் விளையாடுவது சந்தேகம்தான் என்று தெரியவந்துள்ளது. இவருக்கான மாற்று வீரரை தற்போதுவரை சென்னை அணி நிர்வாகம் அறிவிக்கவில்லை

ஹர்பஜன் சிங் (சென்னை சுப்பர் கிங்ஸ்)

டுபாய் சென்ற சென்னை அணியில் 40 வயதாகும் ஹர்பஜன் சிங் இடம்பெறவில்லை. தொடர்ந்து டுபாய் பயணத்தை பிற்போட்ட அவர், செப்டம்பர் மாத தொடக்கத்தில் டுபாய் வந்துவிடுவார் எனக் கூறப்பட்டது

ஆனால், சொந்த காரணங்களால் இந்த வருடம் .பி.எல் தொடரில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்து ஹர்பஜன் சிங் சென்னை அணி நிர்வாகத்துக்கு அறியப்படுத்தியிருந்தார்

கடந்த இரண்டு வருடங்களாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஹர்பஜன் சிங் திடீரென .பி.எல் தொடரிவிருந்து விலகியது அந்த அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறாயினும், இவருக்கான மாற்று வீரரையும் தற்போது வரை சென்னை அணி அறிவிக்கவில்லை.

கேன் ரிச்சர்ட்சன் (ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்)

இம்முறை .பி.எல் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடவிருந்த கேன் ரிச்சர்ட்சன், மனைவியின் பிரசவத்தைக் காரணம் காட்டி .பி.எல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்

பிக் பாஷ் T20i தொடரில் விளையாடும் யுவராஜ் சிங்?

ஒக்டோபர் மாதம் தனது முதல் குழந்தையின் வருகைக்காகக் காத்திருப்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்

எனினும், அவருக்குப் பதிலாக அவுஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் அடம் சம்பா பெங்களூர் அணியில் இடம்பிடித்துள்ளார்

கிறிஸ் வோக்ஸ் (டெல்லி கேபிடல்ஸ்)

டெல்லி அணிக்காக ஒன்றரை கோடியில் ஏலம் எடுக்கப்பட்ட இங்கிலாந்து சகலதுறை வீரரான கிறிஸ் வோக்ஸ், இம்முறை .பி.எல் தொடரைப் புறக்கணித்தது பற்றி காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை. தோள்பட்டை காயம் காரணமாக அவர் .பி.எல் தொடரிலிருந்து விலகியிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

கிறிஸ் வோக்ஸ் இதற்கு முன்னதாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியவர்.

எனினும், அவருக்குப் பதிலாக தென்னாபிரிக்கா அணியின் வேகப் பந்துவீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜே டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்

லசித் மாலிங்க (மும்பை இந்தியன்ஸ்)

.பி.எல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, திடீரென தனது சொந்த காரணங்களுக்காக இம்முறை .பி.எல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

லசித் மாலிங்கவை வெளியேற்றிய மும்பை இந்தியன்ஸ்

இந்த அறிவிப்பு மும்பை இரசிகர்களை மாத்திரமல்லாது இலங்கை இரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், லசித் மாலிங்கவுக்குப் பதிலாக அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.  

ஜேசன் ரோய் (டெல்லி கெபிடல்ஸ்)

இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஜேசன் ரோய் டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்ய்பட்டு விளையாடி வருகிறார். இவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக .பி.எல் தொடரில் இருந்து முற்றிலுமாக வெளியேறுவதாகவும் அறிவித்தார்

எதுஎவ்வாறாயினும், ஜேசன் ரோய்க்கான மாற்று வீரராக அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரர் டேனியல் சேம்ஸ் டெல்லி அணியில் இணைக்கப்பட்டுள்ளாார். 

இவர், நடந்து முடிந்த பிக் பேஷ் T20 சுற்றுத் தொடரில் அதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரராக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஜோஸ் பட்லர் (டெல்லி கெபிடல்ஸ்)

டெல்லி அணியில் கிறிஸ் வோக்ஸை தொடர்ந்து மற்றுமொரு இங்கிலாந்து வீரரான ஜோஸ் பட்லரும் வெளியேறியுள்ளார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.  

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆலோசராக ஷேன் வோர்ன்

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரின் போது அவருக்குக் காயம் ஏற்பட்டதால், .பி.எல் தொடரில் பங்கேற்க முடியவில்லை எனத் தெரியவந்துள்ளது. இந்த தகவல் டெல்லி அணி நிர்வாகிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

ஹர்ரி கேர்னி (கொல்கத்தா க்நைட் ரைடர்ஸ்

இம்முறை .பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடவிருந்த இங்கிலாந்து வீரரான ஹர்ரி கேர்னி, காயம் காரணமாக இம்முறை தொடரிலிருந்து விலகியுள்ளார்.   

இவர், 75 இலட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அணிக்குத் திரும்ப இன்னும் வாய்ப்பிருப்பதால், மாற்று வீரர் தேர்வு செய்யப்படவில்லை என கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது

எதுஎவ்வாறாயினும், இம்முறை .பி.எல் தொடரில் பிரகாசிப்பார்கள் என பெரிதும் எதிர்பர்க்கப்பட்ட வீரர்கள் திடீரென விலகினாலும், 13ஆவது .பி.எல் தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<