அதிக ஐ.பி.எல் கிண்ணத்தை வென்ற சாதனையை சமன் செய்தது சென்னை

206
AFP

ஷேன் வொட்சன் 57 பந்துகளில் ஆட்டமிழக்காது பெற்ற 117 ஓட்டங்கள் மூலம் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாகவும் ஐ.பி.எல் கிண்ணத்தை சுவீகரித்தது.  

T20 போட்டிகளில் சென்னை சுபர் கிங்ஸ் புதிய மைல்கல்

கோடை காலத்தில் கிரிக்கெட் இரசிகர்களின் உள்ளங்களை குளிர்விக்கும் இந்தியன்…

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சகலதுறை வீரரான வொட்சன் போட்டியில் தான் முகம்கொடுத்த முதல் 10 பந்துகளுக்கும் எந்த ஓட்டமும் பெறாத நிலையில், 11 பௌண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்களை விளாச, சென்னை அணி 9 பந்துகள் மீதம் வைத்து 179 ஓட்ட வெற்றி இலக்கை எட்டியது.     

மும்பை, வான்கடே அரங்கில் ஞாயிறு (27) இரவு நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட சன்ரைசர்ஸ் அணிக்கு அதன் தலைவர் கேன் வில்லியம்ஸ் 36 பந்துகளில் 47 ஓட்டங்களை விளாசியதோடு யூசுப் பதான் ஆட்டமிக்காது 25 பந்துகளில் 45 ஓட்டங்களை குவித்தார்.

இதன்மூலம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை பெற்றது.  

பின்னர் துடுப்பாடிய சென்ன அணியினர் அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வொட்சனின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியைப் பெற்று இம்முறை சம்பியன்களாக முடிசூடினர்.

இந்த தொடரில் சிறந்த பந்துவீச்சாளராக உருவெடுத்த ஆப்கானிஸ்தான் பதின்ம வயது வீரர் ரஷீத் கான் இறுதிப் போட்டியில் சென்னை அணிக்கு நெருக்கடி கொடுக்க தவறினார். தனது நான்கு ஓவர்களுக்கும் 24 ஓட்டங்களை விட்டுக் கொடுத்த அவர் விக்கெட் வீழ்த்தவில்லை.  

இம்முறை ஐ.பி.எல் தொடரில் ரஷீத் கான், தான் வீசிய 167 பந்துகளில் எந்த ஓட்டமும் விட்டுக் கொடுக்காதது தொடரில் அதிக ஓட்டமற்ற பந்துகளாகும்.

மாலிங்கவுக்கு எச்சரிக்கை விடுத்த இலங்கை கிரிக்கெட்

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க …

மறுமுனையில், இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து இந்த இலக்கை எட்டியதன் மூலம் மஹேந்திர சிங் தோனியின் சென்னை அணி ஐ.பி.எல். கிண்ணத்தை அதிக முறை சுவீகரித்த மும்பை இந்தியன்ஸின் (3) சாதனையை சமப்படுத்தியது.

எனினும், தனது உரிமையாளர் சூதாட்ட விவகாரத்தில் சிக்கியதால் இரண்டு ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட நிலையிலேயே சென்னை அணி மீண்டும் ஐ.பி.எல்லுக்கு திரும்பி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

சென்னை அணி இதற்கு முன் 2010 மற்றும் 2011இல் ஐ.பி.எல். கிண்ணத்தை வென்றதோடு 2008, 2012, 2013 மற்றும் 2015இல் இறுதிப் போட்டி வரை முன்னேறியது.

‘பல அணிகளும் பங்கேற்றிருக்கும் தொடரின் மிகப் பெரிய போட்டியில் இந்த ஓட்டங்களை பெற்றது சிறப்பானதாகும்’ என்று 36 வயதுடைய வொட்சன் குறிப்பிட்டார். தொடைப்பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக பெரும்பாலான போட்டிகளில் ஒற்றை இலக்கங்களை தாண்டாத நிலையிலேயே வொட்சன் இறுதி ஆட்டத்தில் பெரும் திருப்பமாக மாறினார்.    

‘உயிரை கையில் பிடித்துக் கொண்டு தொடரின் இறுதியில் எனது ஆட்டத்திற்கு திரும்பினேன’ என்றார் வொட்சன்.  

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வலையமைப்பு 2.55 பில்லியன் டொலருக்கு ஐ.பி.எல். இன் ஐந்து ஆண்டு ஒளிபரப்பு உரிமத்தை பெற்ற நிலையில், ஐ.பி.எல். உலகில் அதிக இலாபம் தரும் உள்ளூர் கிரிக்கெட் தொடராக மாறியுள்ளது. இந்த ஒளிபரப்பு உரிமம் இந்த பருவத்தோடு ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி ஆரம்பமான 11ஆவது ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டிகள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தபோதும் அந்த அணி சென்னை சுப்பர் கிங்ஸிடம் நான்கு தடவைகள் தோல்வியையே சந்தித்தது.  

தொடரில் அதிகபட்சமாக மொத்தம் 735 ஓட்டங்களை பெற்ற ஹைதராபாத் அணித்தலைவரான நியுசிலாந்து வீரர் கேன் வில்லியம்ஸ் செம்மஞ்சள் நிற தொப்பியை பெற்றதோடு தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய (24 விக்கெட்டுகள்) கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அன்ட்ரூ டை ஊதா நிற தொப்பியை வென்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் சுனில் நரைன் தொடர் நாயகனான பெறுமதிமிக்க வீரர் விருதையும், டெல்லி டெயார்டெவில்ஸ் அணியின் ரிஷாப் பண்ட் தொடரில் வளர்ந்து வரும் வீரராகவும் தெரிவாயினர். ரிஷாப் பாண்ட் தொடரில் அதிகபட்சமாக 37 சிக்ஸர்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று அவர் மொத்தமாக பெற்ற 68 பௌண்டரிகளுமே தொடரில் அதிகமாகும்.

பலத்த எதிர்பார்ப்புகளுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகிய இலங்கை

மேற்கிந்திய தீவுகள் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது மிகப் பெரிய …

இம்முறை ஐ.பி.எல் தொடரில் இலங்கை சார்பில் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டதோடு வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக ஏலம்போனார். இலங்கை அணியின் ஏனைய முன்னணி வீரர்கள் ஐ.பி.எல். ஏலத்தில் விலைபோகவில்லை.

எனினும் சமீரவுக்கு காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க முடியாமல் போனதோடு தனஞ்சய மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு போட்டியில் மாத்திரம் ஆடி தனது 4 ஓவர்களுக்கும் விக்கெட் இன்றி 47 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.

அதேபோன்று இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவை பயிற்சியாளராகவும், லசித் மாலிங்கவை பந்துவீச்சு ஆலோசகராகவும் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை ஐ.பி.எல். தொடரில் லீக் போட்டிகளுடன் வெளியேறியது.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…