2026ஆம் ஆண்டுக்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடர் வீரர்கள் ஏலம் இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் 13 தொடக்கம் 15 வரையிலான இடைவெளியில் நடைபெற முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிமுக வீரருடன் பங்களாதேஷை எதிர்கொள்ளவிருக்கும் மே.இ. தீவுகள்
இந்தியாவின் கிரிக்பஸ் செய்தி இணையதளத்திற்கு ஐ.பி.எல். அணிகளின் உத்தியோகத்தர்கள் சிலர் வழங்கியிருக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே, வீரர்கள் ஏலமானது டிசம்பர் 13 தொடக்கம் 15 வரையிலான காலப்பகுதியில் நடைபெற முடியுமாக இருக்கும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.
எனினும் உத்தியோகபூர்வமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஐ.பி.எல் ஏலத்திற்கான திகதிகள் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பினை இன்னும் வெளியிடவில்லை.
கடந்த இரண்டு பருவங்களிலும் ஐ.பி.எல். வீரர்கள் ஏலமானது இந்தியாவிற்கு வெளியில் இடம்பெற்ற போதும் அதற்கான சாத்தியப்பாடுகள் இம்முறை குறைவாக உள்ளதாகவும் கூறப்பட்டிருக்கின்றது. 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் ஐ.பி.எல் வீரர்கள் ஏலமானது ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவூதி அரேபிய நாடுகளில் இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
அதேவேளை நவம்பர் 15 இற்கு முன்னர் ஐ.பி.எல். தொடரில் பங்கெடுக்கும் அணிகள் தாம் அடுத்த தொடருக்காக தக்க வைத்திருக்கும், விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என நம்பப்படுகின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<