ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள IPL போட்டிகள்

133

ஒத்திவைக்கப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் என உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.

கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வந்த இந்த ஆண்டுக்கான IPL தொடர் அதன் 29ஆவது குழுநிலை போட்டியுடன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அறிமுகமாகும் புதிய விதிகள்

இவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட IPL தொடரினை நடாத்தாது போனால் கிட்டத்தட்ட இந்திய நாணயப்படி 900 கோடி ரூபாய் நட்டம் ஏற்படும் எனத்  தெரிவிக்கப்பட்டதனை அடுத்து எஞ்சியிருக்கும் போட்டிகளை வேறு நாடு ஒன்றில் நடாத்துவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், அதற்கு இங்கிலாந்து தெரிவு செய்யப்படும் என நம்பப்பட்டிருந்தது.  

எனினும், தற்போது வெளியாகியிருக்கும் அறிவிப்பின் அடிப்படையில் IPL தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும், கடந்த ஆண்டு போன்று ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. 

அதன்படி, IPL தொடரின் இறுதிப் போட்டி உள்ளடங்கலாக தற்போது மொத்தமாக 31 போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டம்பர் மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. 

CPL தொடருக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கை வீரர்கள்

இதேநேரம், நடைபெறவிருக்கும் 2021ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் எஞ்சிய போட்டிகளின் போட்டி அட்டவணை காலக்கிரமத்தில் வெளியிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

செய்தி மூலம் – Cricbuzz

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<