CPL தொடருக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கை வீரர்கள்

Caribbean Premier League 2021

116

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள கரீபியன் ப்ரீமியர் லீக் (CPL) தொடரில், இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள கரீபியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் வரைவு இன்றைய தினம் நடைபெற்றிருந்தது. குறித்த இந்த வீரர்கள் வரைவின் போது, இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள், மூன்று வெவ்வேறு அணிகளுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இளம் வீரர்களுக்கு சிறிது காலம் வாய்ப்பு கொடுக்க வேண்டும் – அமைச்சர் நாமல்

குறிப்பாக இலங்கை அணிக்காக கடந்த காலங்களில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் சிறப்பாக பிரகாசித்துவரும், சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க, சென். கைட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணிக்காக இணைக்கப்பட்டுள்ளார். 

வனிந்து ஹசரங்க வெளிநாடுகளில் நடைபெற்ற எந்தவொரு T20 லீக் தொடர்களிலும் இதுவரை விளையாடியில்லாத நிலையில்,  முதன்முறையாக கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் இணைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு அடுத்தப்படியாக இலங்கை அணியின் அனுப வேகப்பந்துவீச்சாளர் இசுரு உதான, ட்ரைன்பகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக இணைக்கப்பட்டுள்ளார். இவர், இறுதியாக ஐ.பி.எல். தொடரில் 2020ம் ஆண்டு விளையாடியிருந்ததுடன், பல்வேறு லீக் தொடர்களில் ஆடியுள்ளார். எனினும், முதன்முறையாக கரீபியன் ப்ரீமியர் லீக் அணியொன்றுக்காக இணைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இவர்களுக்கு அடுத்தப்படியாக, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கும், திசர பெரேரா, பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் அணிக்காக இணைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர், திசர பெரேரா, சென் கைட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியோட்ஸ், சென் லூசியா ஷோக்ஸ் மற்றும் கயானா அமேஷன் வொரியர்ஸ் அணிகளுக்காக, கரீபியன் ப்ரீமியர் லீக்கில் விளையாடியிருந்தார்.

கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரின் இந்த பருவகாலத்துக்கான போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 28ம் திகதி ஆரம்பிக்கவுள்ளதுடன், தொடரின் 33 போட்டிகளும் கொவிட்-19 தொற்று காரணமாக வோர்னர் பார்க் மைதானத்தில் மாத்திரம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<