ஐயரின் அதிரடி துடுப்பாட்டத்தால் ஆறுதல் வெற்றி பெற்றது டெல்லி அணி

238
DD vs GL - IPL 2017

பத்தாவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினம் (புதன்கிழமை) விறுவிறுப்பிற்கு சற்றும் குறைவில்லாத வகையிலான போட்டி ஒன்று இடம்பெற்றது.

கான்பூர் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடாத்தின.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் செயற்திறன் மையம் பல்லேகலயில் ஆரம்பம்

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களம் இறங்கிய குஜராத் லயன்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக டுவைன் ஸ்மித் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் களமிறங்கினர்.

ஆரம்பம் முதலே டெல்லி டேர்டெவில்ஸ் அணி பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். மொஹம்மத் ஷமி வீசிய 4ஆவது ஓவரில் ஸ்மித் 8 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய அணித் தலைவர் சுரேஷ் ரெய்னாவும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் இஷான் கிஷானுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் நிதனாமாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தினார். குஜராத் லயன்ஸ் அணியின் ஓட்ட எண்ணிக்கை 56 என்ற நிலையில் இருந்தபோது, அமித் மிஷ்ரா வீசிய 7ஆவது ஓவரில் இஷான் கிஷான் ஆட்டமிழந்தார்.

அவர் 25 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடங்கலாக 34 ஓட்டங்களை எடுத்தார்.

அடுத்து களமிறங்கிய ஆரோன் பிஞ்ச், தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். குஜராத் லயன்ஸ் அணி 17ஆவது ஓவரில் 148 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் தினேஷ் கார்த்திக் 40 ஓட்டங்களில் கார்லோஸ் பரத்வெயிட்டின் பந்துவீச்சில் அண்டர்சனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். இதே ஓவரின் அடுத்த பந்தில் ஆரோன் பிஞ்ச் சிக்சர் அடித்து அரைச் சதம் அடித்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில் குஜராத் லயன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ஓட்டங்களைக் குவித்தது.

இதனையடுத்து 196 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி துடுப்பாடக் களமிறங்கியது.

கொல்கத்தாவை வீழ்த்திய பஞ்சாப் அணி பிளேஒஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்தது

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான எஸ்.வி. சாம்சன் 10 ஓட்டங்களையும், கே.கே. நாயர் 30 ஓட்டங்களையும் குவித்து ஆட்டமிழந்தனர். பின் களமிறங்கிய ஆர்.ஆர். பான்ட் 4 ஓட்டங்களில் ஆட்டமிழக்க எஸ்.எஸ். ஐயர் களமிறங்கினார்.

ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எஸ்.எஸ். ஐயர் 57 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கலாக 96 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் மொஹம்மத் ஷமி 4 ஓட்டங்களுடனும், அமித் மிஷ்ரா 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ஓட்டங்களைக் குவித்து வெற்றி பெற்றது.

போட்டியின் சுருக்கம்

குஜராத் லயன்ஸ் – 195/5 (20) – ஆரோன் பின்ஞ் 69(39), தினேஷ் கார்த்திக் 40(28), இஷான் கிஷான் 34(25), அமித் மிஷ்ரா 27/1

டெல்லி டேர்டெவில்ஸ் – 197/8 (19.4) – எஸ்.எஸ். ஐயர் 96(57), நாயர் 30(15), ஜேம்ஸ் போல்க்னர் 39/2

முடிவு – டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி.