பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் இன்ஸமாம் உல்-ஹக் பதவி விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
உலகக்கிண்ணத் தொடருக்கான அணித்தெரிவில் ஒருதலைப்பட்சமாக செயற்பட்டதாக இன்ஸமாம் உல்-ஹக் மீது சமுகவலைத்தளங்கள் மற்றும் பாகிஸ்தான் ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
>> இலங்கை அணியின் பிரபல ரசிகர் “அங்கில் பேர்சி” மரணம்
இவ்வாறான நிலையில் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் காரணமாக இன்ஸமாம் உல்-ஹக் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.
உலகக்கிண்ணத்தில் விளையாடிவரும் பாகிஸ்தான் அணி 6 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் தோல்வி அதிகமான விமர்சனங்களை எழுப்பியிருந்தது.
இந்தநிலையில் இன்ஸமாம் உல்-ஹக் மீது அணி தேர்வு தொடர்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துவந்த நிலையில், தற்போது திடீரென பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அதேநேரம், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உலகக்கிண்ணத்துக்கான அணித்தெரிவில் முரண்பாடுகள் இருந்ததா? என்பதை ஆராய்வதற்கு ஐந்து பேர்கொண்ட விசாரணைக்குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<