கிரிஸ்மனின் இரட்டை கோல்களால் மெஸ்ஸி இன்றி பார்சிலோனா வெற்றி

92

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் இலங்கை நேரப்படி நேற்று மற்றும் இன்று அதிகாலை இடம்பெற்றன. அந்த போட்டிகளின் விபரம் வருமாறு… 

நியூகாசில், மன்செஸ்டர் சிட்டி வெற்றி 

செர்கியோ அகுவேராவின் இரட்டை கோல் மூலம் நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி அணி போர்மௌத் அணிக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

செல்சி முதல் வெற்றி; மான்செஸ்டர் யுனைடட் அதிர்ச்சி தோல்வி

இங்கிலாந்து ப்ரீமியர் லீக்கில் இன்று (24) நடைபெற்ற ………

இந்த வெற்றியுடன் சிட்டி அணி புள்ளிப் பட்டியலில் 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியதோடு முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலை விடவும் இரண்டு புள்ளிகளே பின்தங்கியுள்ளது. 

இந்த பருவத்தில் சிட்டி ஆடிய 3 போட்டியிலும் கோல் புகுத்திய அகுவேரா இந்தப் போட்டியில் 15 ஆவது நிமிடத்தில் முதல் கோலை பெற்றார். தொடர்ந்து 43 ஆவது நிமிடத்தில் ரஹீம் ஸ்டார்லிங் இரண்டாவது கோலை பெற்றார். 

தொடர்ந்து ஹரீ வில்சன் ப்ரீ கிக் மூலம் பெற்ற அபார கோலினால் போர்மௌத் நம்பிக்கை பெற்றபோதும் மன்செஸ்டர் சிட்டிக்காக அகுவேரா 64 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை பெற்று அந்த அணியில் வெற்றியை உறுதி செய்தார். 

அகுவேராவின் இந்த கோல் அவர் நாட்டுக்காகவும் கழகத்திற்காகவும் பெற்ற 400 ஆவது கோலாக இருந்தது. அதேபோன்று டேவிட் சில்வா இந்தப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் சிட்டி அணிக்காக 400 போட்டிகளில் ஆடிய மைல்கல்லை எட்டியமை குறிப்பிடத்தக்கது.  

இதேவேளை பிரேசிலின் ஜோலின்டனின் கோல் மூலம் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் அணிக்கு எதிராக நியூகாசில் எதிர்பாராத வெற்றி ஒன்றை பெற்றது.  

இலங்கை கனிஷ்ட கால்பந்து அணிக்கு மோசமான தோல்வி

இந்தியாவில் இடம்பெறும் 15 வயதுக்கு ……

நியூகாசில் அணிக்காக 49 மில்லியன் டொலருக்கு ஒப்பந்தமான ஜொலின்டன் 27 ஆவது நிமிடத்தில் ஒரு பதில் தாக்குதலாக பந்தை கடத்திச் சென்று கோல் புகுத்தினார். இந்த பருவத்தில் ஆடிய முதல் இரு போட்டிகளிலும் தோல்வியுற்ற நியூகாசிலுக்கு இது முதல் வெற்றியாகும். 

மெஸ்ஸி இன்றி பார்சிலோனா இலகு வெற்றி

மெஸ்ஸி இன்றி பார்சிலோனா அணியை வெற்றிபெறச் செய்ய முடியும் என்று அன்டோனியோ கிரிஸ்மன் நிரூபிக்க அந்த அணி ரியல் பெடிஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.  

கேம்ப் நூவில் நடந்த போட்டியின் 15 ஆவது நிமிடத்திலேயே ரியல் பெடிஸ் கோல் புகுத்தி முன்னிலை பெற்றபோதும் கடந்த ஜூலை மாதம் பார்சிலோனாவில் இணைந்த கிரிஸ்மன் 41 மற்றும் 50 ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களை புகுத்தி பார்சிலோனாவை முன்னிலை பெறச் செய்தார். 

உடல் தகுதிபெறாத நிலையில் மெஸ்ஸி ஆடாதது மாத்திரமே இந்தப் போட்டியில் பார்சிலோனா அணிக்கு குறையாக இருந்தது. தொடர்ந்து பெரஸ் (56′), அல்பா (60′) மற்றும் விடால் (77′) ஆகியோரும் கோல்கள் பெற பார்சிலோன நெருங்க முடியாத முன்னிலையை பெற்றது. 

ரியல் பெடிஸ் வீரர் மோரோன் 79 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றை பெற்றபோதும் அந்த அணியின் கோல் தவிர்க்க முடியாததாக இருந்தது. 

இதேவேளை, லா லிகாவில் அட்லெடிகோ மெட்ரிட் ஞாயிற்றுக்கிழமை நடந்த லெகன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 1-0 என வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது. 

முதல் பாதி கோலின்றி முடிவுற்ற நிலையில் 71 ஆவது நிமிடத்தில் விடோல் பெற்ற கோலே அட்லெடிகோவுக்கு வெற்றி கோலாக இருந்தது.

பிரான்ஸ் சம்பியன் இலகு வெற்றி

பரிஸ் செய்ன் ஜெர்மைன் (PSG) அணி தனது முன்னணி வீரர்களான கிலியன் ம்பாப்பே மற்றும் எடிசன் கவானியை உபாதை காரணமாக இழந்தபோதும் டூலூஸ் அணிக்கு எதிராக இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் அந்த அணி 4-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. 

லீக் 1 சம்பியனான PSG அணி போட்டி ஆரம்பித்து 14 ஆவது நிமிடத்தில் கவானியை உபாதை காரணமாக இழந்ததோடு தொடர்ந்து தொடைப்பகுதியில் ஏற்பட்ட உபாதையால் ம்பாப்பே இரண்டாவது பாதியில் வெளியேறினார். 

எனினும், கவானிக்கு பதில் மாற்று வீரராக வந்த கூபொ மோடிங் இழுபறியை முடிவுக்கு கொண்டுவந்து 50 ஆவது நிமிடத்தில் முதல் கோலை பெற 55 ஆவது நிடத்தில் கொன்கல்வஸ் பெற்ற ஓன் கோலும் PSG கணக்கில் சேர்ந்தது. இந்நிலையில் 75 ஆவது நிமிடத்தில் கூபொ மோடிங் தனது இரண்டாவது கோலை பெற்றார். தொடர்ந்து மார்கூயின்ஹோஸ் 83 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை பெற்றார். 

PSG அணியின் நட்சத்திர வீரரான நெய்மாரின் எதிர்காலம் கேள்விக்குரியாகி இருக்கும் நிலையில் அவர் இன்றி அந்த அணி இந்த பருவத்தில் ஆடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி மற்றும் ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.   

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<