Home Tamil தசுன் ஷானகவின் போராட்டம் வீணாக பங்களாதேஷ் அணிக்கு வெற்றி

தசுன் ஷானகவின் போராட்டம் வீணாக பங்களாதேஷ் அணிக்கு வெற்றி

10533

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணிகள் இடையில் இன்று (23) கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்ற ஒருநாள் பயிற்சிப் போட்டியில் பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

இலங்கையின் பாதுகாப்பை புகழ்ந்த தமிம் இக்பால்

இலங்கையில் உள்ள பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் பங்களாதேஷ் வீரர்களுக்கு…

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இலங்கை கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.  

இந்த ஒருநாள் தொடருக்கு முன்னர் பங்களாதேஷ் அணியுடன், இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணி விளையாடியிருந்த இந்தப் பயிற்சிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற, இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியின் தலைவர் நிரோஷன் டிக்வெல்ல முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்தார். 

இதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணிக்காக அதன் தலைவர் நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் வந்தனர். 

இவர்களில் நிரோஷன் டிக்வெல்ல ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஏமாற்றினார். மறுமுனையில், தனுஷ்க குணத்திலக்க 26 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டார். இதன் பின்னர், புதிய துடுப்பாட்ட வீரராக களம் வந்த ஒசத பெர்னாந்துவும் 2 ஓட்டங்களுடன் ஜொலிக்கத் தவறினார். 

ஓய்வை அறிவித்த மாலிங்கவின் அதிரடி கருத்து

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் சர்வதேச ஒருநாள்…

இதனால் ஒரு கட்டத்தில் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணி 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இந்நிலையில் பானுக்க ராஜபக்ஷ மற்றும் செஹான் ஜயசூரிய ஆகியோர் பொறுமையான ஆட்டம் மூலம் தமது தரப்பிற்கு நம்பிக்கை அளித்தனர். 

இதில் பானுக்க ராஜபக்ஷ 32 ஓட்டங்களை குவிக்க, செஹான் ஜயசூரிய அரைச்சதம் பெற்று 78 பந்துகளில் 5 பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களை பெற்றார். 

தொடர்ந்து மத்திய வரிசையில் ஆடிய தசுன் ஷானக்க அதிரடி துடுப்பாட்டம் மூலம் அரைச்சதம் பெற்று இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியினை பலப்படுத்தினார். தசுன் ஷானக்கவின் அதிரடி துடுப்பாட்டத்தோடு இலங்கை தரப்பு 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 282 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. 

துடுப்பாட்டத்தில் வெறும் 63 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட தசுன் ஷானக்க, 6 இமாலய சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 86 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் இருந்து தனது திறமையினை நிரூபித்திருந்தார்.

Photos: Sri Lanka vs Bangladesh – Warm-up Game

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பில் ருபெல் ஹொசைன் மற்றும் சௌம்யா சர்க்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருந்தனர். 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக பங்களாதேஷ் அணிக்கு 50 ஓவர்களில் 283 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இதனை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணிக்கு அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களம் வந்த, சௌம்யா சர்க்கர் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார்.

எனினும், ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அணியின் தலைவர் தமிம் இக்பால் 37 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பின் வெற்றி இலக்கை எட்டும் பயணத்திற்கு உரமூட்டினார்.

பின்னர், அணிக்காக மொஹமட் மிதுன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோரது அரைச்சதங்கள் பெற்றுக் கொடுத்தனர். இவர்களின் அரைச்சதங்களோடு பங்களாதேஷ் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 48.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களுடன் அடைந்தது.

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுகிறார் மாலிங்க

இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க…

பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த மொஹமட் மிதுன், 100 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 91 ஓட்டங்களை பெற்றிருந்தார். அதேநேரம், முஷ்பிகுர் ரஹீம் 46 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 50 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.  

இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார 2 விக்கெட்டுக்களையும், அகில தனன்ஜய, கசுன் ராஜித மற்றும் வனிது ஹஸரங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

இப்போட்டியின் மூலம் தமது இலங்கை சுற்றுப் பயணத்தில் சிறந்த ஆரம்பத்தை காண்பித்திருக்கும் பங்களாதேஷ் அணி, இலங்கை அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் (26) ஆரம்பம் செய்கின்றது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<< 

போட்டியின் சுருக்கம் 

Result


Sri Lanka Board President’s XI
282/8 (50)

Bangladesh
285/5 (48.1)

Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella lbw b Rubel Hossain 0 0 0 0 0.00
Danushka Gunathilaka c Mosaddek Hossain b Taskin Ahamed 26 27 5 0 96.30
Oshada Ferenado c Mosaddek Hossain b Rubel Hossain 2 14 0 0 14.29
Bhanuka Rajapaksa c Sabbir Rahaman b Soumya Sarkar 32 49 4 0 65.31
Shehan Jayasuriya c Rubel Hossain b Soumya Sarkar 56 78 5 0 71.79
Angelo Perera c Mehidy Hasan Miraz b Mustafizur Rahman 7 10 1 0 70.00
Dasun Shanaka not out 86 63 6 6 136.51
Wanindu Hasaranga c Mahmudullah b Farhad Reza 28 30 3 1 93.33
Akila Dananjaya run out (Tamim Iqbal) 9 19 0 0 47.37
Amila Aponso not out 13 9 2 0 144.44


Extras 23 (b 0 , lb 7 , nb 3, w 13, pen 0)
Total 282/8 (50 Overs, RR: 5.64)
Fall of Wickets 1-1 (0.3) Niroshan Dickwella, 2-28 (6.5) Oshada Ferenado, 3-32 (7.3) Danushka Gunathilaka, 4-114 (25.5) Bhanuka Rajapaksa, 5-127 (28.4) Angelo Perera, 6-146 (31.3) Shehan Jayasuriya, 7-195 (39.3) Wanindu Hasaranga, 8-243 (46.3) Akila Dananjaya,

Bowling O M R W Econ
Rubel Hossain 7 0 31 2 4.43
Taskin Ahamed 8 0 57 1 7.12
Mustafizur Rahman 7 0 29 1 4.14
Mosaddek Hossain 6 1 25 0 4.17
Mehidy Hasan Miraz 4 0 25 0 6.25
Mahmudullah 3 0 15 0 5.00
Soumya Sarkar 6 0 29 2 4.83
Taijul Islam 6 0 42 0 7.00
Farhad Reza 3 0 22 1 7.33


Batsmen R B 4s 6s SR
Soumya Sarkar c Amila Aponso b Lahiru Kumara 13 24 2 0 54.17
Tamim Iqbal c Kasun Rajitha b Lahiru Kumara 37 47 6 0 78.72
Mohammad Mithun c Wanindu Hasaranga b Kasun Rajitha 91 100 11 1 91.00
Mushfiqur Rahim c Dasun Shanaka b Wanindu Hasaranga 50 46 6 1 108.70
Mahmudullah b Akila Dananjaya 33 37 3 0 89.19
Sabbir Rahaman not out 31 26 5 0 119.23
Mosaddek Hossain not out 15 10 3 0 150.00


Extras 15 (b 0 , lb 1 , nb 1, w 13, pen 0)
Total 285/5 (48.1 Overs, RR: 5.92)
Fall of Wickets 1-45 (9.4) Soumya Sarkar, 2-58 (13.1) Tamim Iqbal, 3-131 (24.6) Mushfiqur Rahim, 4-227 (39.6) Mahmudullah, 5-262 (45.4) Mohammad Mithun,

Bowling O M R W Econ
Vishwa Fernando 6.1 0 25 0 4.10
Kasun Rajitha 8 0 57 1 7.12
Danushka Gunathilaka 3 1 15 0 5.00
Lahiru Kumara 6 0 26 2 4.33
Akila Dananjaya 7 0 47 1 6.71
Amila Aponso 6 0 43 0 7.17
Wanindu Hasaranga 7 0 39 1 5.57
Angelo Perera 3 0 17 0 5.67
Dasun Shanaka 2 0 15 0 7.50



முடிவு – பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி