லக்கி விளையாட்டுக் கழகத்தினை தோற்கடித்த ஏறாவூர் யங் ஸ்டார் அணி

80
 

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) கிழக்கு மாகாண உள்ளூர் கிரிக்கெட் அணிகள் இடையே ஒழுங்கு செய்த டிவிஷன் – II ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில், மட்டக்களப்பு லக்கி விளையாட்டுக் கழக அணியினை ஏறாவூர் யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

சனிக்கிழமை (1) ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம், முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை லக்கி விளையாட்டுக் கழகத்திற்கு வழங்கியது. 

ரமேஷ் மெண்டிஸின் முச்சதத்தோடு வலுப்பெற்றிருக்கும் சோனகர் அணி

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு A……

அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய லக்கி விளையாட்டுக்கழக அணியினர் யங் ஸ்டார் வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 28.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 95 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

லக்கி விளையாட்டுக் கழகத்தின் துடுப்பாட்டம் சார்பாக பிரசாந்த் 18 ஓட்டங்களை பெற்று தனது தரப்பில் கூடிய ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறினார். மறுமுனையில், யங் ஸ்டார் அணியின் பந்துவீச்சு சார்பில் றிப்னாஸ் 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ஆஷிக், சுஜாத் மற்றும் றமழான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர். 

Photos – Inter Provincial Cricket Tournament 2020 | Division II – Eravur YSSC Vs Batticaloa Lucky SC

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம், குறித்த வெற்றி இலக்கினை 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 97 ஓட்டங்களுடன் அடைந்தது.

யங் ஸ்டார் அணியின் வெற்றியை உறுதி செய்த முக்கிய வீரர்களில் ஒருவரான பாஹிம் அரைச்சதம் பூர்த்தி செய்து 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நிற்க, நப்ரீஸ் 25 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். 

நேபாளத்தில் கிரிக்கெட் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட உபுல் தரங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட…..

லக்கி அணியின் பந்துவீச்சு சார்பாக சஞ்சீவ் 3 விக்கெட்டுக்களைச் சாய்த்து ஆரம்பத்தில் சிறப்பாக செயற்பட்ட போதிலும் அவரின் பந்துவீச்சு வீணாகியிருந்தது. 

போட்டியின் சுருக்கம்  

லக்கி விளையாட்டுக் கழகம் – 95 (28.1) – பிரசாந்த் 18, றிப்னாஸ் 23/3, சுஜாத் 2/08, றமழான் 2/12, ஆஷிக் 2/72

யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் – 97/4 (19.5) – பாஹிம் 56, நப்ரீஸ் 25, சஞ்சீவ் 2/33

முடிவு – யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி   

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<