ரோயல் செலஞ்சர்ஸ் உடனான மோதலில் அணித்தலைவரினை இழக்கும் ராஜஸ்தான்

Indian Premier League 2025

38
samson

இந்த ஆண்டுக்கான (2025) இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்று வரும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியானது தமது அடுத்த போட்டியில் தமது அணித்தலைவரான சஞ்சு சாம்சனுடன் ஆடாது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>இந்திய வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தம் அறிவிப்பு!<<

சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட வயிற்று உபாதையே (Abdominal Injury) அவர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் ஆடாததற்கான காரணமாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கும் இடையிலான IPL குழுநிலை மோதல் வியாழன் (24) பெங்களூரில் நடைபெறவிருக்கின்றது. இந்தப் போட்டியிலேயே சஞ்சு சாம்சன் விளையாடும் வாய்ப்பினை இழந்திருக்கின்றார்.

சஞ்சு சாம்சன் உபாதையில் இருந்து எப்போது குணமடைவார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாமல் காணப்படுவதோடு, ரியான் பராக் சாம்சனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினை தலைவராக வழிநடாத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் குறிப்பிட்ட உபாதையினால் சஞ்சு சாம்சன் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணி ராஜஸ்தான் ரோயல்ஸ் இறுதியாக விளையாடிய போட்டியிலும் ஆடாது போயிருந்த நிலையில் அவருக்குப் பதிலாக 14 வயது மாத்திரமே நிரம்பிய வைபவ் சூர்யவம்சி அறிமுகமாகியிருந்ததோடு அவர்  அதிரடியான ஆரம்பத்தினையும் ராஜஸ்தான் அணிக்காக வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

 >>மேலும் கிரிக்கெட் செய்திளைப் படிக்க<<