கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறும் பெட் கம்மின்ஸ்

Indian Premier League 2022

80
 

IPL தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பெட் கம்மின்ஸ் உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இறுதியாக நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெட் கம்மின்ஸ் உபாதைக்கு உள்ளாகியுள்ளதாகவும், அடுத்துவரும் போட்டிகளில் இவரால் விளையாடமுடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பினை பெற்றுள்ள சகீப் அல் ஹசன்

தற்போது அணியின் உயிரியல் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறியுள்ள இவர், சிட்னிக்கு புறப்பட்டுள்ளார் எனவும், அங்கு சென்று உபாதைக்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அவுஸ்திரேலிய அணி அடுத்ததாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த தொடருக்கு முன்னர் இவர் உபாதையிலிருந்து குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும், இலங்கை அணிக்கு எதிரான T20I தொடருக்கான குழாத்தில் பெட் கம்மின்ஸ் இணைக்கப்படவில்லை.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய அணி முதலில் T20I தொடரில் விளையாடவுள்ளதுடன், அதனைத்தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. இந்தப்போட்டித்தொடரானது எதிர்வரும் ஜூன் 7ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<