டெஸ்ட் தொடரிலிருந்து முழுமையாக விலகிய விராட் கோஹ்லி!

England tour of India 2024

246

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தியா குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அறிவிக்கப்பட்டுள்ள குழாத்திற்குள் இரண்டாவது போட்டியிலிருந்து உபாதை காரணமாக நீக்கப்பட்ட கே.எல். ராஹூல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர். 

24 ஆண்டு சாதனையை முறியடித்த பெதும் நிஸ்ஸங்க!

எனினும் முதலிரண்டு போட்டிகளிலிருந்தும் தனிப்பட்ட காரணத்துக்காக அணியிலிருந்து விலகியிருந்த விராட் கோஹ்லி, மீதமுள்ள போட்டிகளிலும் விளையாடமாட்டார் என இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

அதேநேரம் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ராவின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் அடுத்தப் போட்டிகளிலிருந்து நீக்கப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் அவர் மூன்றாவது போட்டிக்கான குழாத்தில் இடம்பெற்றுள்ளார். 

இதேவேளை அணித்தலைவராக ரோஹித் சர்மா, இரண்டாவது போட்டியில் இரட்டைசதமடித்த யசஷ்லி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் மொஹமட் சிராஜ் போன்ற முன்னணி வீரர்களும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளனர். 

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 15ம் திகதி ராஜ்கோட்டில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்தியா குழாம் 

ரோஹித் சர்மா (தலைவர்), ஜஸ்ப்ரிட் பும்ரா, யசஷ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், கே.எல்.ராஹுல், ரஜத் பட்டிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல், கே.எஸ். பாரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாஅக்ஸர் படேல், வொசிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், மொஹமட் சிராஜ், முகேஷ் குமார், ஆகாஸ் டீப் 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<