பங்களாதேஷ் தொடரில் ஆடும் சொரிபுல் இஸ்லாம்

101

பங்களாதேஷ் அணியின் வேகப்பந்துவீச்சாளரான சொரிபுல் இஸ்லாம், இலங்கை அணிக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>மீண்டும் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைவராகும் டோனி

முன்னதாக இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்ட பங்களாதேஷ் குழாத்தில் சொரிபுல் இஸ்லாம் உள்ளடக்கப்பட்ட போதும், அவரின் உடற்தகுதி காரணமாக இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமாகியிருந்தது.

எனினும் சொரிபுலை சிங்கப்பூருக்கு அனுப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB), அவரது உடல்நிலை குறித்து தற்போது திருப்தியடைந்திருப்பதாக தெரிவித்திருப்பதோடு, அவருக்கு இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் ஆட முடியும் எனக் குறிப்பிடப்பிட்டிருக்கின்றது.

அந்தவகையில் சொரிபுல் இஸ்லாம், எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும், அதன் பின்னர் 23ஆம் திகதி நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியிலும் பங்கெடுக்கும் சந்தர்ப்பத்தினைப் பெற்றிருக்கின்றார்.

இதேவேளை இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடரிலிருந்து உபாதை காரணமாக வெளியேறிய, பங்களாதேஷ் அணியின் மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளரான தஸ்கின் அஹமட் தனது சிகிச்சைகளுக்காக எதிர்வரும் 04ஆம் திகதி இங்கிலாந்து பயணமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<