Home Tamil ஒருநாள் தொடரில் வைட்வொஷ் செய்யப்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி

ஒருநாள் தொடரில் வைட்வொஷ் செய்யப்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி

117

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 39 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருக்கின்றது.

>> மந்தனா, ஷபாலி அதிரடியில் ஒருநாள் தொடர் இந்தியா வசம்

இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரிலும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையினை 3-0 என வைட்வொஷ் செய்திருக்கின்றது.

இரு அணிகளும் பங்குபற்றிய ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இன்று (07) ஆரம்பமாகியது.

ஐ.சி.சி. இன் ஒருநாள் சம்பியன்ஷிப்பிற்காக நடைபெறும் இந்த ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி 2-0 என தொடரில் முன்னிலை பெற்ற நிலையில் இந்தப் போட்டி ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய மங்கைகளுக்கு வழங்கினார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அதன் தலைவி ஹர்மான்பிரீத் கவுர் மற்றும் பூஜா வஸ்ட்ராகார் ஆகியோரின் அரைச்சதங்களோடு 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 255 ஓட்டங்கள் பெற்றது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஹர்மான்பிரீத் கவுர் 88 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 75 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த பூஜா வஸ்ட்ராகர் 65 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் அடங்கலாக 56 ஓட்டங்களை பெற்றிருந்தார். அத்துடன் ஷபாலி வெர்மா 49 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடத்தை இழந்த கோஹ்லி

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் இனோகா ரணவீர, சமரி அத்தபத்து மற்றும் ரஷ்மி டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட  256 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 216 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிலக்ஷி டி சில்வா ஒரு சிக்ஸர் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்கள் பெற்றிருக்க, சமரி அத்தபத்து 44 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் ராஜேஸ்வரி கய்க்வாட் 3 விக்கெட்டுக்களையும், மேக்னா சிங் மற்றும் பூஜா வஸ்ட்ராகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகியாகவும் தொடர் நாயகியாகவும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி ஹர்மான்பிரீத் கவுர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka Women
216/10 (48)

India Women
255/9 (50)

Batsmen R B 4s 6s SR
Shafali Verma lbw b Nilakshi de Silva 49 50 4 0 98.00
Smriti Mandhana c Anushka Sanjeewani b Kavisha Dilhari 6 20 0 0 30.00
Yastika Bhatia c Ama Kanchana b Inoka Ranaweera 30 38 5 0 78.95
Harleen Deol st Anushka Sanjeewani b Nilakshi de Silva 1 3 0 0 33.33
Deepti Sharma c Hasini Perera b Oshadi Ranasinghe 4 11 0 0 36.36
Harmanpreet Kaur c Oshadi Ranasinghe b Chamari Athapaththu 75 88 7 2 85.23
Richa Ghosh c Chamari Athapaththu b Inoka Ranaweera 2 9 0 0 22.22
Pooja Vastrakar not out 56 65 0 3 86.15
Meghna Singh b Chamari Athapaththu 8 13 1 0 61.54
Renuka Singh b Ama Kanchana 2 3 0 0 66.67
Rajeshwari Gayakwad not out 3 2 0 0 150.00


Extras 19 (b 0 , lb 0 , nb 2, w 17, pen 0)
Total 255/9 (50 Overs, RR: 5.1)
Bowling O M R W Econ
Ama Kanchana 9 0 60 0 6.67
Oshadi Ranasinghe 9 0 42 1 4.67
Kavisha Dilhari 8 0 30 1 3.75
Inoka Ranaweera 10 0 22 2 2.20
Rashmi de Silva 6 0 53 2 8.83
Chamari Athapaththu 8 0 45 2 5.62


Batsmen R B 4s 6s SR
Vishmi Gunaratne c Rajeshwari Gayakwad b Meghna Singh 3 10 0 0 30.00
Chamari Athapaththu c Harmanpreet Kaur b Pooja Vastrakar 44 41 8 0 107.32
Hasini Perera b Rajeshwari Gayakwad 39 57 3 0 68.42
Kavisha Dilhari st Rajeshwari Gayakwad b Yastika Bhatia 12 28 0 0 42.86
Harshitha Samarawickrama b Harleen Deol 22 28 1 0 78.57
Nilakshi de Silva not out 48 59 2 1 81.36
Anushka Sanjeewani b Pooja Vastrakar 1 4 0 0 25.00
Ama Kanchana st Rajeshwari Gayakwad b Yastika Bhatia 2 5 0 0 40.00
Oshadi Ranasinghe c Pooja Vastrakar b Yastika Bhatia 1 5 0 0 20.00
Rashmi de Silva b Meghna Singh 18 24 4 0 75.00
Inoka Ranaweera b Deepti Sharma 10 24 1 0 41.67


Extras 16 (b 0 , lb 7 , nb 0, w 9, pen 0)
Total 216/10 (48 Overs, RR: 4.5)
Bowling O M R W Econ
Renuka Singh 8 0 33 0 4.12
Meghna Singh 7 0 32 2 4.57
Deepti Sharma 9 0 47 1 5.22
Rajeshwari Gayakwad 10 0 36 3 3.60
Harmanpreet Kaur 5 0 21 1 4.20
Pooja Vastrakar 7 0 33 2 4.71
Harleen Deol 2 1 7 1 3.50



முடிவு – இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 39 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<