உமர் அக்மலுக்கு அபராதம் விதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

142
AFP

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான உமர் அக்மல், ஒழுக்க கோவை விதிமுறைகளை மீறியதன் காரணமாக அந்நாட்டு கிரிக்கெட் சபையின் அபராதத்தினை எதிர்கொண்டிருக்கின்றார்.

தொடர் வெற்றிகளுடன் உலகக் கிண்ணத்திற்கு வலுவடைந்து வரும் அவுஸ்திரேலியா

சுற்றுலா அவுஸ்திரேலியா ….

அண்மையில் இடம்பெற்று முடிந்த அவுஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரில் ஆடிய உமர் அக்மல் குறித்த தொடரின் ஐந்தாவது போட்டி நடைபெற முன்னர் பிரபல பாடகர் ஒருவரின் இசைக்கச்சேரி நிகழ்வு ஒன்றுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் முகாமைத்துவக் குழுவின் அனுமதி இல்லாமல் சென்றிருந்ததோடு, வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலிற்கும் இரவு நேரத்தில் தாமதமாக வந்திருந்தார். இதன் காரணமாகவே, உமர் அக்மலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அபராதம் விதித்திருக்கின்றது.

இதன்படி உமர் அக்மல், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டிக்கு வழங்கப்பட்ட ஊதியத்தில் 20% இணை அபராதமாக செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உமர் அக்மலுக்கு அபராதம் விதிக்கப்பட்டமை தொடர்பான விடயத்தினை “ அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டிக்கு  முன்னர் இரவு நேரத்தில் வெளியில் சென்று தாமதமாக வந்திருந்த சம்பவம் “ என குறிப்பிட்டு உறுதிப்படுத்தியிருந்தது.

இதேநேரம், உமர் அக்மல் தனக்கு விதிக்கப்பட்ட இந்த அபராதத் தொகையை ஏற்றுக் கொண்டு தனது தவறுக்காக மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

“ அக்மல் அவரது தவறினை ஒப்புக் கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதோடு அவர், அபராத தொகையினையும் ஏற்று மன்னிப்பையும் கோரியிருந்தார். இப்படியான தவறுகளை தொழில்முறை கிரிக்கெட் வீரர் ஒருவர் செய்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேநேரம், இப்படியான தவறுகளை கண்டுகொள்ளாமலோ அல்லது கவனிக்கமலோ இருக்க முடியாது. “ என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் முகாமையாளர் வசீம் கான் குறிப்பிட்டிருந்தார்.

மீண்டும் புத்துயிர் பெறவுள்ள லங்கன் ப்ரீமியர் லீக்

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஏற்பாட்டின்….

இதேநேரம் மேலும் பேசிய வசீம் கான், “ பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தமது வீரர்களிடம் இருந்து அதிக நெறிமுறைகளையும், ஈடுபாட்டினையும் எதிர்பார்க்கின்றது. எனவே, தற்போது நடந்திருக்கும் சம்பவம் எதிர்காலத்தில் இப்படியான விடயங்கள் நடைபெறக்கூடாது என்பதற்கு ஒரு பாடமாக அமைகின்றது. “ என்றார்.

தமது மத்திய வரிசையை அதிரடி வீரர் ஒருவருடன் பலப்படுத்த எதிர்பார்த்திருக்கும் பாகிஸ்தான் அணி, அண்மையில் நடைபெற்று முடிந்த PSL தொடரில் திறமையை வெளிக்காட்டிய உமர் அக்மலை பாகிஸ்தான் குழாத்திற்கு இரண்டு வருடங்களின் பின்னர் அழைத்திருந்தது.

பாகிஸ்தான் அணிக்கு திரும்பியிருந்த உமர் அக்மல், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் ஐந்து போட்டிகளிலும் ஆடி 150 ஓட்டங்கள் வரை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<