இந்திய அணி இரண்டாக பிளவுபட்டுள்ளது – சொஹைப் அக்தர்

ICC T20 World Cup – 2021

168
Getty Image

இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணி தான் சம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் அரை இறுதிச் சுற்றுக்கு கூட தகுதி பெறுமா என்ற சந்தேகத்தில் இந்திய அணி தவித்து வருகிறது

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி. நியூசிலாந்துடனான போட்டியில் 8 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியது.

இதில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணியில் பெரும் மாற்றம் இருந்தது. சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக விலகிய நிலையில், ஆரம்ப வீரர்களாக இஷhன் கிஷன், கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினார்கள். இதனால் ரோஹித் சர்மா மூன்றாவது இலக்கத்திலும், கோஹ்லி நான்காவது இலக்கத்திலும் களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனால் இஷhன் கிஷன் எதிர்பார்த்தபடியே சிறப்பாக சோபிக்கவில்லை. துடுப்பாட்ட வரிசை மாறி களமிறங்கிய ரோஹித், கோஹ்லி போன்றவர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

நியூசிலாந்திடம் வரலாற்றுத் தோல்வியை சந்தித்த இந்தியா

இந்த நிலையில், ஆரம்ப வீரர்களாக இஷான் கிஷனும், 3ஆம் இலக்கத்தில் ரோஹித் சர்மாவையும் களமிறக்க திட்டமிட்டபோது, அப்போது ரோஹித் சர்மா கடும் எதிர்ப்பு தெரிவித்தாக தகவல் வெளியானது. மேலும் அப்போது கோஹ்லி, ரோஹித் இடையே வார்த்தைப் போர் நடந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், இந்திய அணி இரண்டு குழுக்களாக பிளவுபட்டுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சொஹைப் அக்தர் தெரிவித்துள்ளார்.

Youtube சமூகவலைத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி போன்ற வீரர்கள் ஏன் தங்கள்  துடுப்பாட்ட நிலைகளை மாற்றினார்கள் என்பதை புரிந்து கொள்ள சிரமப்பட்டனர். இளம் வீரரான இஷான் கிஷனை அவர்களுக்கு முன்னாள் ஏன் அனுப்பப்பட்டார்? ஹர்திக் பாண்டியா கடைசியில்தான் பந்துவீசுகிறார். இந்தியா என்ன விளையாட்டுத் திட்டத்துடன் விளையாடுகிறது? என்று எனக்கு புரியவில்லை.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் தோற்றதுமே இந்திய வீரர்களிடம் பயம் உண்டாக ஆரம்பித்து விட்டது. வீரர்கள் எல்லோரும் பதற்றதுடன் இருந்தனர் உங்களால் சரியாக பந்தைப் பார்த்து துடுப்பாட முடியாவிட்டால் 20 ஓவரகள் வரை பொறுமையாக ஒரு துடுப்பாட்ட வீரராக விளையாடுங்கள். பந்துவீச்சிலும் ஜஸ்பிரித் பும்ராதான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

WATCH – தோல்வியிலும் Wanindu Hasaranga நிகழ்த்திய சாதனைகள்… !|Sports RoundUp – Epi 182

வருண் சக்ரவர்த்தியும் நன்றாக பந்துவீசினார். ஆனால் மற்ற பந்துவீச்சாளர்கள் எதுவும் செய்யவில்லை. மொத்தத்தில் இந்தியா எனக்கு மிகவும் சாதாரண அணியாகத் தோன்றியது.

உண்மையில் இந்திய அணி இரண்டாக பிளவுபட்டுள்ளதை என்னால் அவதானிக்க முடிகின்றது. ஒரு குழு விராட் கோஹ்லியின் பின்னால் உள்ளனர். இன்னுமொரு குழு அவருக்கு எதிராக உள்ளனர். அதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். ஏன் இந்திய அணியில் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதை என்னால் ஊகிக்க முடியாமல் உள்ளது. ஆனாலும், விராத் கோஹ்லி இந்திய டி20 அணிக்கு கடைசியாக தலைவராக செயல்படுவதால் இந்த முறுகல் நிலை ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தார்.

மேலும், சம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றிருக்கலாம். இல்லாவிட்டால் கோஹ்லி எடுத்த தவறான முடிவாக இருக்கலாம். ஆனால் கோஹ்லி ஒரு தலைசிறந்த கிரிக்கெட் வீரர். அவருக்கு நாங்கள் மரியாதை கொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<