60 போட்டிகளைக் கொண்ட 9ஆவது .பி.எல் தொடரில் நேற்றுவரை 48 போட்டிகள் முடிவுற்றுள்ளன

தொடரின் 49ஆவது போட்டியில் இன்று விசாகபட்டினத்தில் ரைஸிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியை டெல்லி டேர்டெவில்ஸ் அணி எதிர்கொள்கிறது.

நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரயிசஸ் ஹைதராபாத் அணி 8 வெற்றிகளோடு முதல் இடத்தைப் பெற்றுள்ளதோடு அந்த அணி அடுத்த சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் புள்ளிப் பட்டியலில் 4 வெற்றிகளோடு 7ஆவது இடத்தில் இருக்கும் கிங்க்ஸ் லெவன் அணிக்கு விளையாடும் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை மற்றும் அதிரடித் துடுப்பாட்ட வீரர் க்லென் மெக்ஸ்வேல் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக தனது தாய் நாடு நோக்கி திரும்புகிறார்.  இதனால்  இது கிங்க்ஸ் லெவன் அணிக்கு இன்னுமொரு இழப்பாக அமையும்.

இந்தப் பருவகால ஐ.பி.எல் தொடரில் க்லென் மெக்ஸ்வேல் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக பெரிதளவு பிரகாசிக்கவில்லை. 11 போட்டிகளில் விளையாடிய அவர் 179 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அதில் அவர் பெற்ற அதிக பட்ச ஓட்டம் 68 ஓட்டங்களாகும். அவரது துடுப்பாட்ட சராசரி 19.88 ஆகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்