இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடாத்தத் தீர்மானம்

221

இந்த வருடம் இந்தியாவில் பகல் இரவு டெஸ்ட் போட்டிகளை நடாத்த தீர்மானித்துள்ளதாக பி.சி.சி.ஐ கூறியுள்ளது.

நியூஸிலாந்து அணி எதிர்வரும் வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் ஒரு டெஸ்ட் போட்டியை பகலிரவுப் போட்டியாக நடத்த தாம் முடிவு செய்துள்ளதாக பி.சி.சி.ஐ யின் செயலாளர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி விளையாடவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இதுவாகும்.

கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் vs றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ்

இது தொடர்பாக அனுராக் தாக்குர் மேலும் கூறியிருப்பதாவது இரவில் போட்டி நடைபெறும்போது இளஞ்சிவுப்பு நிறப் பந்து பயன்படுத்தப்படும். பகலிரவு டெஸ்ட்டின் முன்னோட்டமாக துலீப் கிண்ணப் போட்டி பகலிரவு போட்டியாக நடத்தப்படுகிறது. ஆசியாவில் மின்னொளியில் இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடுவது சரியாக இருக்குமா என்பதை சோதிப்பதற்காக துலீப் கிண்ணப் போட்டி பகலிரவுப் போட்டியாக நடத்தப்படுகிறது.

பகலிரவாக போட்டி நடைபெறும்போது பனிப் பொழிவு, சுழற்பந்து வீச்சாளர்கள் எப்படி பந்துவீசுகிறார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கருத்திற்கொள்ள வேண்டியிருக்கிறது. துலீப் கிண்ணப் போட்டியின்போது மேற்கண்ட விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றார். பகலிரவு டெஸ்டுக்கு தயாராகும் வகையில் இந்த முறை துலீப் கிண்ண  போட்டியில் முன்னணி வீரர்கள் அனைவரும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கட் செய்துகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்