ஜனாதிபதி விளையாட்டு விருது விழாவில் ThePapare.comக்கு விசேட விருது

165

இந்நாட்டின் விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்தினைக் கருத்திக் கொண்டு விளையாட்டுத்துறை அமைச்சினால் 3ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி விளையாட்டு விருது வழங்கும் விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (17) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மஹேலவும் விண்ணப்பிப்பாரா?

இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹேல ஜயவர்தன……

இந்த நாட்டில் உள்ள திறமையான வீர, வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் கடந்த 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் சர்வதேச மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் திறமைகளைப் வெளிப்படுத்திய வீரர்களுக்கு இதன்போது விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன

இதன்படி, ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை 2018 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான பளுதூக்கலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திக்க திசாநாயக்க பெற்றுக்கொண்டார். அத்துடன், ஆண்டின் பிரபலமான வீரர் மற்றும் ஆண்டின் ஆளுமைமிக்க வீரர் ஆகிய இரண்டு விருதுகளையும் அவர் தட்டிச் சென்றார்

இதனிடையே, ஆண்டின் அதிசிறந்த வீராங்கனை மற்றும் பிரபலமான வீராங்கனை ஆகிய இரண்டு விருதுகளையும் அதே பொதுநலவாய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான குத்துச் சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற அனுஷா கொடித்துவக்குவுக்கு வழங்கப்பட்டது

மேலும், ஆண்டின் அதிசிறந்த ஆண்கள் அணிக்கான விருதை உலகக் கெரம் சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை கெரம் அணி பெற்றுக்கொண்டதுடன், ஆண்டின் அதிசிறந்த பெண்கள் அணிக்கான விருதை ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு வழங்கப்பட்டது

ரெட்புல் பல்கலைக்கழக கிரிக்கெட் தொடர் இவ்வாரம் ஆரம்பம்

இலங்கையில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு……

இதனிடையே, கடந்த வருடம் ஆர்ஜென்டீனாவில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான இளையோர் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா ஆண்டின் வளர்ந்துவரும் வீராங்கனைக்கான விருதை தட்டிச் சென்றதுடன், கடந்த வருடம் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய இளையோர் மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற அருண தர்ஷன, ஆண்டின் வளர்ந்துவரும் வீரருக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்

இதுஇவ்வாறிருக்க, இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஆண்டின் அதிசிறந்த சமூக ஊடக வலையமைப்புக்கான விருதை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

இதேநேரம், இந்நாட்டின் விளையாட்டுத்துறையில் அளப்பெரிய சேவையாற்றிய விளையாட்டுத்துறை அதிகாரிகளை கௌரவிக்கும் முகமாக வாழ்க்கையில் ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படுகின்ற ஜனாதிபதி கௌரவ விருதுகளும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன

அந்தவகையில் இலங்கையின் மூத்த விளையாட்டு ஊடகவியலாளர்களில் ஒருவரான எல்மோ ரொட்ரிகோபுள்ள, ப்ரேமசர எபாசிங்க, ஜி.எச் வில்சன் ஆகிய மூவருக்கும் கிரீடா பிரபா விருதும், நிமல் லெவ்கே, சந்திரதாசன் பெரேரா, கேப்டன் திலான் பெரேரா, ப்ரேமா பின்னவல, பேராசிரியர் ரஞ்சித் டி சில்வா மற்றும் பி. டொன் விக்டர் ஆகியோருக்கு கிரீடா பூஷன விருதும் வழங்கி வைக்கப்பட்டன

மஹேல பயிற்றுவிக்கும் அணியில் ஷேன் வொட்சன்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை……

அத்துடன், திருமதி டபிள்யு.டி சந்த்ர காந்தி, எல்..டி ப்ரேமரத்ன, சுனீதா விஜேசூரிய ஆகிய மூவருக்கும் கிரீடா தேஷாந்தர விருதும், அருண தென்னகோன், திருமதி மாலி விக்ரமசிங்க மற்றும் திருமதி புஷ்பமாலி ராமநாயக்க ஆகியோருக்கு கிரீடா ரத்ன விருதும் இதன்போது கொடுக்கப்பட்டன

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, விளையாட்டுத்துறை கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார, ஹெக்டர் அப்புஹாமி, ஹர்ஷன ராஜகருணா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<