Home Tamil அசத்தல் வெற்றியுடன் ஒருநாள் தொடரினைக் கைப்பற்றிய இலங்கை

அசத்தல் வெற்றியுடன் ஒருநாள் தொடரினைக் கைப்பற்றிய இலங்கை

385

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை 09 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் 2-1 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

WATCH – மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான திட்டம் என்ன? கூறும் நவீட் நவாஸ்!

முன்னதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கான் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றிருந்தது. இதேவேளை இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என சமநிலை அடைந்த நிலையில் தீர்மானமிக்க மூன்றாவது போட்டிக்காக இலங்கை அணி ஒரு மாற்றத்தினை மேற்கொண்டிருந்தது. இதன்படி இலங்கை அணியில் கசுன் ராஜிதவிற்குப் பதிலாக உபாதையில் இருந்து மீண்ட லஹிரு குமார இணைக்கப்பட்டிருந்தார். மறுமுனையில் ஆப்கான் அணி அனுபவம் கொண்ட ரஷீட் கான் மற்றும் குல்படின் நயீப் ஆகியோரை தமது அணிக் குழாத்தினுள் உள்வாங்கியிருந்தது.

இலங்கை – திமுத் கருணாரட்ன, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க (அணித்தலைவர்), வனிந்து ஹஸரங்க, துஷ்மன்த சமீர, மகீஷ் தீக்ஷன, லஹிரு குமார

ஆப்கானிஸ்தான் – ஹஸ்மத்துல்லா சஹிதி (தலைவர்), ரஹ்மத் சாஹ், றஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், நஜிபுல்லா சத்ரான், மொஹமட் நபி, குர்படின் நயீப், முஜிபுர் ரஹ்மான், ரஷீட் கான், பசால்ஹக் பரூக்கி, பரீட் அஹ்மட்

பின்னர் நாணய சுழற்சிற்கு அமைய துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பத்தில் லஹிரு குமார, துஷ்மன்த சமீர ஆகிய இருவரும் அழுத்தம் உருவாக்கியிருந்தனர். இந்த அழுத்தம் காரணமாக ஆரம்பத்திலேயே சரிவினை எதிர் கொண்ட ஆப்கான் இதன் பின்னர் வனிந்து ஹஸரங்கவின் சுழலிலும் தடுமாறியது. இதனால் சரிவில் இருந்து மீள முடியாத ஆப்கானிஸ்தான் அணி 22.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 116 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. அத்துடன் இது ஆப்கானிஸ்தான் ஒருநாள் போட்டியொன்றில் முதலில் துடுப்பாடி பெற்ற மூன்றாவது குறைவான ஓட்டங்களாகவும் பதிவானது.

தென்னாபிரிக்க A அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை A அணி

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக மொஹமட் நபி 23 ஓட்டங்களை எடுக்க, துஷ்மன்த சமீர 04 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹஸரங்க 03 விக்கெட்டுக்களையும் லஹிரு குமார 02 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தனர். இதில் துஷ்மன்த சமீர இப்போட்டியின் மூலம் ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 50ஆவது விக்கெட்டினை பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 117 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கை வெறும் 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 120 ஓட்டங்களுடன் அடைந்தது.

இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் பெதும் நிஸ்ஸங்க தன்னுடைய ஆறாவது ஒருநாள் அரைச்சதத்துடன் 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக அதிரடியாக ஆடி 51 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அத்துடன் இப்போட்டியில் 32 பந்துகளில் அரைச்சதம் விளாசிய பெதும் நிஸ்ஸங்க ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய அதிவேக அரைச்சதத்தினையும் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் இலங்கை அணியின் வெற்றியை இறுதிவரை ஆட்டமிழக்காது நின்று உறுதி செய்த திமுத் கருணாரட்ன தன்னுடைய 8ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் ஆட்டமிழக்காது 45 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்கள் பெற்றார். அத்துடன் இது திமுத் கருணாரட்ன இந்த தொடரில் பெற்ற இரண்டாவது தொடர் அரைச்சதமாகவும் மாறியது.

ஆப்கான் பந்துவீச்சில் குல்படின் நயீப் ஒரு விக்கெட்டினை கைப்பற்றியும் அது வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரான துஷ்மன்த சமீர தெரிவாகியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
120/1 (16)

Afghanistan
116/10 (22.2)

Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz c Chamika Karunaratne b Lahiru Kumara 8 10 2 0 80.00
Ibrahim Zadran b Lahiru Kumara 22 21 4 0 104.76
Rahmat Shah c Kusal Mendis b Dushmantha Chameera 7 11 1 0 63.64
Hashmatullah Shahidi c Kusal Mendis b Dushmantha Chameera 4 3 1 0 133.33
Mohammad Nabi lbw b Dushmantha Chameera 23 23 2 0 100.00
Najibullah Zadran c Wanindu Hasaranga b Dushmantha Chameera 10 13 2 0 76.92
Gulbadin Naib c Dhananjaya de Silva b Mahesh Theekshana 20 21 4 0 95.24
Rashid Khan lbw b Wanindu Hasaranga 2 8 0 0 25.00
Mujeeb ur Rahman c Kusal Mendis b Wanindu Hasaranga 0 4 0 0 0.00
Fazal Haq Farooqi lbw b Wanindu Hasaranga 4 15 1 0 26.67
Fareed Ahmad not out 13 7 0 1 185.71


Extras 3 (b 0 , lb 1 , nb 2, w 0, pen 0)
Total 116/10 (22.2 Overs, RR: 5.19)
Fall of Wickets 1-13 (1.6) Rahmanullah Gurbaz, 2-27 (4.3) Rahmat Shah, 3-31 (4.6) Hashmatullah Shahidi, 4-48 (8.4) Ibrahim Zadran, 5-72 (12.4) Najibullah Zadran, 6-77 (14.1) Mohammad Nabi, 7-80 (15.4) Rashid Khan, 8-92 (17.2) Mujeeb ur Rahman, 9-103 (20.4) Gulbadin Naib, 10-116 (22.2) Fazal Haq Farooqi,

Bowling O M R W Econ
Dushmantha Chameera 9 0 63 4 7.00
Lahiru Kumara 5 0 29 2 5.80
Mahesh Theekshana 4 0 16 1 4.00
Wanindu Hasaranga 4.2 1 7 3 1.67


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka lbw b Gulbadin Naib 51 34 8 2 150.00
Dimuth Karunaratne not out 56 45 7 0 124.44
Kusal Mendis not out 11 17 1 0 64.71


Extras 2 (b 0 , lb 1 , nb 0, w 1, pen 0)
Total 120/1 (16 Overs, RR: 7.5)
Fall of Wickets 1-84 (10.1) Pathum Nissanka,

Bowling O M R W Econ
Fazal Haq Farooqi 4 0 33 0 8.25
Fareed Ahmad 1 0 8 0 8.00
Mujeeb ur Rahman 2 0 18 0 9.00
Rashid Khan 4 0 21 0 5.25
Gulbadin Naib 2 0 19 1 9.50
Mohammad Nabi 3 0 20 0 6.67



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<