ILT20 தொடர் மூலம் தடையினைப் பெறும் நூர் அஹ்மட்

227

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் மணிக்கட்டு சுழல்பந்துவீச்சாளரான நூர் அஹ்மட்டிற்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் ILT20 தொடரின் ஒழுக்காற்று குழு 12 மாத தடையினை வழங்கியிருக்கின்றது.

>>மதீஷ பதிரணவின் பந்துவீச்சை புகழும் அஞ்செலோ மெதிவ்ஸ்!

அந்தவகையில் ILT20 தொடரில் இம்முறை ஷார்ஜா வோரியர்ஸ் அணிக்காக தக்க வைக்கப்பட்டிருந்த 19 வயது நிரம்பிய நூர் அஹ்மட் குறிப்பிட்ட அணியின் வீரர் ஒப்பந்த விதிமுறைகளை மீறி நடந்த குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையிலையே தற்போது தடையினைப் பெற்றிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.

நூர் அஹ்மட் ILT20 தொடரின் வீரர்கள் விதிமுறையினை மீறி நடந்த இரண்டாவது ஆப்கான் வீரராக மாறியிருக்கின்றார். இதற்கு முன்னர் ஆப்கானிஸ்தான் அணியினைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளரான நவீன்-உல்-ஹக் இதே மாதிரியான தவறு ஒன்றினை மேற்கொண்டமைக்காக ILT20 ஒழுக்காற்று குழு மூலம் 20 மாத தடையினைப் பெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

தற்போது ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியுடன் இணைந்திருக்கும் நூர் அஹ்மட் தற்போது இலங்கை – ஆப்கான் அணிகள் இடையிலான T20 தொடரில் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<