உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா களத்தடுப்பில்

85
ICC World Test Championship 2023

இரண்டாவது பருவத்திற்கான (2023) ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி சற்று முன்னர் இங்கிலாந்தின் லன்டண் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகியிருக்கின்றது.

>> ICC மாதாந்த விருதுக்கு இரு இலங்கையர் பரிந்துரை

இரண்டாவது பருவத்திற்கான ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியாவும், அவுஸ்திரேலியாவும் தெரிவாகியிருந்தன. அதன்படி வான வேடிக்கைகளுடன் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருக்கும் இந்திய அணித்தலைவர் ரோஹிட் சர்மா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை அவுஸ்திரேலிய அணிக்கு வழங்கியிருக்கின்றார்.

இப்போட்டிக்கான இந்திய அணி சகலதுறைவீரரான சர்துல் தாக்கூர் மற்றும் அஜிங்கியா ரஹானே ஆகியோரினை தமது குழாத்திற்குள் இணைத்திருக்க, மறுமுனையில் அவுஸ்திரேலியா ஸ்கொட் போலன்டிற்கு இங்கிலாந்து மண்ணில் முதன் முறையாக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் வழங்குகின்றது.

அவுஸ்திரேலியா

டேவிட் வோர்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபச்சேனே, ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹேட், கெமரூன் கீரின், அலெக்ஸ் கேரி, மிச்சல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் (தலைவர்), நதன் லயன், ஸ்கொட் போலன்ட்

இந்தியா

ரோஹிட் சர்மா (தலைவர்), சுப்மான் கில், செட்டேஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, KS பாரத், ரவிந்திர ஜடேஜா, சர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், மொஹமட் சமி, மொஹமட் சிராஜ்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<