அங்குரார்ப்பண 19 வயதின் கீழ் மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை

269

அங்குரார்ப்பண 19 வயதின் கீழ் மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் பயிற்சிப் போட்டிகளுக்குரிய போட்டி அட்டவணை (Fixtures) ஐ.சி.சி. மூலம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

சூர்யகுமாரின் அதிரடியோடு T20I தொடரினை கைப்பற்றிய இந்திய அணி

மொத்தம் 16 நாடுகள் பங்கெடுக்கும் அங்குரார்ப்பண 19 வயதின் கீழ் மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ளதோடு இந்த தொடரில் அணிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மோதல்கள் நடைபெறவிருக்கின்றன.

அதன்படி இம்மாதம் 14ஆம் திகதி தொடக்கம் இரண்டு வாரங்கள் நடைபெறவுள்ள இந்த மகளிர் உலகக் கிண்ணத் தொடரானது T20 போட்டிகளாக நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த உலகக் கிண்ண தொடரில் விளையாடுவதற்காக கடந்த வாரம் இலங்கை 19 வயது மகளிர் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க பயணமாகிய நிலையிலேயே இந்த தொடரில் பங்கெடுக்கும் அணிகள் விளையாடும் பயிற்சிப் போட்டிகளின் போட்டி  அட்டவணையும் வெளியிடப்பட்டிருக்கின்றது.

தொடரில் பங்கெடுக்கும் ஒவ்வொரு அணிகளுக்கும் இரண்டு பயிற்சிப் போட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பயிற்சிப் போட்டிகள் திங்கட்கிழமை (09) ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் கிரிக்கெட் அணி தமது முதல் பயிற்சிப் போட்டியில் திங்கட்கிழமை ஐக்கிய அரபு இராச்சிய அணியினை சென். சித்தியன்ஸ் கல்லூரி மைதானத்தில் வைத்து எதிர்கொள்ளவிருக்கின்றது.

அத்துடன் இரண்டாவது பயிற்சிப் போட்டியில் இலங்கை ஸ்கொட்லாந்தினை எதிர்கொள்ளவுள்ளதோடு, இப்போட்டி செவ்வாய்க்கிழமை (10) ஸ்டெய்ன் சிட்டி ஸ்கூல் மைதானத்தில் இடம்பெறுகின்றது.

இதேவேளை பயிற்சிப் போட்டிகள் நிறைவடைந்த பின்னர் முன்னர் குறிப்பிட்டதன் அடிப்படையில், உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

தொடரின் முதல் நாளில் நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், குழு A இல் இடம்பெற்றிருக்கும் இலங்கை முதல் நாளில் தமது முதல் போட்டியில் ஐக்கிய அமெரிக்க அணியினை எதிர்கொள்கின்றது.

ஆசியக்கிண்ணத் தொடருக்கான குழு விபரம் வெளியானது!

அங்குரார்ப்பண 19 வயதின் கீழ் மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் போட்டிகள் நடைபெறுவதற்கு தென்னாபிரிக்காவின் போர்ச்செப்ட்ஸ்ரூம் நகரும், பெனோனி நகரும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இம்மாதம் 29ஆம் திகதி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் அணி

விஷ்மி குணரட்ன (தலைவி), துலங்க திசாநாயக்க, தஹாமி சனேத்மா, உமாயா ரத்நாயக்க, ரஷ்மி நேத்ரஞ்சலி, ரஷ்மிக்கா செவ்வந்தி, மனுதி நாணயக்கார, சுமுது நிசன்சல, பமோதா சாய்னி, விதுசிகா பெரேரா, ரிஷ்மி சஞ்சனா, நெத்மி செனாரட்ன, ஹரினி பெரேரா, விஹாரா செவ்வந்தி

Fixtures

அங்குரார்ப்பண 19 வயதின் கீழ் மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் குழுக்கள் மற்றும் முழுமையான போட்டி அட்டவணையினை பார்வையிட

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<