முகநூலில் அதிகம் பார்வையிடப்பட்ட ஐ.சி.சி. இன் வீடியோக்கள்

142
Fan

இந்த ஆண்டின் (2020) ஆரம்பம் தொடக்கம் ஐ.சி.சி. இன் பேஸ்புக் (Facebook) பக்கங்களில் உள்ள கிரிக்கெட் தொடர்பான வீடியோக்கள் 1.65 பில்லியன் தடவைகள் வரை பார்வையிடப்பட்டுள்ளன.

ஐ.பி.எல் தொடருக்கு மேலும் சில நிபந்தனைகள்

இதன் மூலம் பேஸ்புக் வாயிலாக இந்த ஆண்டில் அதிக தடவைகள் பார்வையிடப்பட்ட விளையாட்டு ஒன்றின் வீடியோக்களை பதிவேற்றம் செய்த, அமைப்பாக கிரிக்கெட் விளையாட்டினை உலக அளவில் நிர்வாகிக்கும் ஐ.சி.சி. சாதனை படைத்திருக்கின்றது.

பேஸ்புக் சமூக வலைதளத்திற்குச் சொந்தமான க்ரவுட் டேங்கல் (Crowd Tangle) என்னும் அமைப்பு வெளியிட்ட தரவுகளின் அடிப்படையிலேயே, ஐ.சி.சி. பதிவேற்றிய கிரிக்கெட் வீடியோக்கள் பேஸ்புக் சமூக வலைதளத்தில் அதிகம் பார்வையிடப்பட்ட விளையாட்டு ஒன்றினுடைய வீடியோக்களாக மாறியிருக்கின்றன.

இந்த ஆண்டில் ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் உலகக் கிண்ணம், மகளிர் T20 உலகக் கிண்ணம் என்பவற்றினை நடத்தியிருந்தது. இந்த இரண்டு கிரிக்கெட் தொடர்களுடன் தொடர்புடைய வீடியோக்கள் மூலமே ஐ.சி.சி. புதிய சாதனை புரிந்திருக்கின்றது. இதில், இளையோர் உலகக் கிண்ணத்துடன் தொடர்புபட்ட வீடியோக்கள் 747 மில்லியன் தடவைகள் வரை பார்வையிடப்பட்டுள்ளதோடு, மகளிர் T20 உலகக் கிண்ண வீடியோக்கள் 1.1 பில்லியன் தடவைகள் வரை பார்வையிடப்பட்டுள்ளன.

ஐ.பி.எல் இறுதிப் போட்டி நடைபெறும் திகதியில் திடீர் மாற்றம்?

இதேநேரம், கொவிட்-19 வைரஸ் தொற்றுக் காரணமாக உலகின் பல இடங்கள் முடங்கிக் கிடந்த சந்தர்ப்பத்திலும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இல்லாமல் சந்தர்ப்பத்திலும் (அதாவது ஏப்ரல் – ஜூன் மாத இடைவெளியில்) ஐ.சி.சி. இன் பேஸ்புக் பக்கங்களில் இருந்த வீடியோக்கள் இரசிகர்கள் மூலம் அதிக தடவைகள் பார்வையிடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க