அகில இலங்கை பாடசாலை மெய்வல்லுனரில் அருண, ஹசினி சிறந்த வீரர்களாக முடிசூடல்

352

கல்வி அமைச்சும், கல்வி அமைச்சின் சுகாதாரம், உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறைப் பிரிவு ஆகியன இணைந்து நடாத்திய 33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளில் வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரராக அகுரம்பொட வீரகெப்பெட்டிப்பொல தேசிய பாடசாலையைச் சேர்ந்த அருண தர்ஷன தெரிவானார்.

இம்முறை பாடசாலை விளையாட்டு விழாவில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் 47.19 செக்கன்களைப் பதிவு செய்து தங்கப்பதக்கத்தை வென்ற அருண, 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் (21.63 செக்கன்கள்) வெள்ளிப்பதக்கத்தையும் வென்றிருந்தார்.

இந்நிலையில், வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனையாக 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான முப்பாய்ச்சலில் 13.22 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து தங்கப்பதக்கத்தை வென்ற வென்னப்புவை திருக்குடும்ப கன்னியஸ்தர் மடத்தைச் சேர்ந்த பி. எம். ஹசினி பபோதா தெரிவானதுடன், கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவிலும் இவ்விருதை ஹசினி தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் இருந்து 700 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 6300 பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட இம்முறை போட்டித் தொடரின் மெய்வல்லுனர் கடந்த 11ஆம் திகதி தியகம மைதானத்தில் ஆரம்பமாகியதுடன், 12, 14, 16, 18 மற்றும் 20 வயதுக்கு கீழ்ப்பட்ட 5 புதிய வயதுப் பிரிவுகளாக நடைபெற்ற இம்முறை விளையாட்டு விழாவில், எறிதல் நிகழ்ச்சிகளில் அகுரம்பொட வீரகெப்பெட்டிப்பொல தேசிய பாடசாலையைச் சேர்ந்த எஸ். பசிந்து பவந்த (20 வயதின் கீழ் ஆண்கள் ஈட்டி எறிதல் 57.12 மீற்றர்) அதி சிறந்த வீரராகத் தெரிவானார்.

அத்துடன், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான சட்டவேளி ஓட்டப் போட்டியை 13.91 செக்கன்களில் நிறைவுசெய்து தனது சொந்த சாதனையை முறியடித்த  கொழும்பு புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த ஷெஹான் திலூஷ காரியசம், சட்டவேளி ஓட்டப் போட்டியில் சிறந்த வீரராகத் தெரிவானார்.

மெய்வல்லுனர் போட்டிகளின் மைதான நிகழ்ச்சிகளில் வட பகுதி வீரர்களுக்கு வெற்றி

33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர்…

ஆண்களுக்கான தொடர் ஓட்டப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரியும், பெண்கள் பிரிவில் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியும் சம்பியன்களாகத் தெரிவாகின.

மாரிஸ் ஸ்டெல்லா, வலல்ல ஏ. ரத்நாயக்கவுக்கு அதிக கௌரவம்

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் முதற்தடவையாக அறிமுகப்படுத்தப்பட்ட 12 வயதுப் பிரிவில் ஆண்கள் சம்பியனாக கொழும்பு றோயல் கல்லூரியும், 2ஆவது இடத்தை மாவனல்லை ஸாஹிரா கல்லூரியும், பெண்கள் பிரிவில் சம்பியனாக கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியஸ்தர் மடமும் தெரிவாகின.

14 வயதுப் பிரிவில் ஆண்கள் சம்பியனாக குருநாகல் சேர். ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயமும், பெண்கள் பிரிவில் நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரியும் சம்பியனாகத் தெரிவாகின.

அத்துடன், 16 வயதுப் பிரிவின் ஆண்கள் சம்பினாக சிலாபம் புனித மரியார் கல்லூரியும், பெண்கள் பிரிவில் ராஜகிரிய கேட்வே சர்வதேச பாடசாலையும் தெரிவாகின.

இதேவேளை, 18 வயதுப் பிரிவில் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரியும், பெண்கள் பிரிவில் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியும் சம்பியன்களாகத் தெரிவாகியதுடன், 20 வயதுப் பிரிவில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியும், பெண்கள் பிரிவில் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியும் சம்பியனாகத் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், 33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில், 16, 18 மற்றும் 20 வயதுப் பிரிவுகள் அடங்கலாக ஆண்கள் பிரிவில் 105 புள்ளிகளைப் பெற்ற நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, தொடர்ச்சியாக 8ஆவது தடவையாகவும் ஒட்டுமொத்த சம்பியனானது.

அதேபோன்று, பெண்கள் பிரிவில் 16, 18 மற்றும் 20 ஆகிய வயதுப் பிரிவுகளில் 187 புள்ளிகளைப் பெற்ற வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி, தொடர்ச்சியாக 14ஆவது தடவையாக ஒட்டுமொத்த சம்பியனாக முடிசூடிக்கொண்டது.

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா சம்பியனாக மேல்மாகாணம்

33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 1268 புள்ளிகளைக் குவித்த மேல்மாகாணம் ஒட்டுமொத்த சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. 526 புள்ளிகளைப் பெற்ற மத்திய மாகாணம் 2ஆவது இடத்தையும், 438 புள்ளிகளைப் பெற்ற வட மத்திய மாகாணம் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.

கடந்த வருடத்தைப் போன்று இம்முறை போட்டித் தொடரிலும் மிகவும் மோசமான பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட கிழக்கு மாகாணம் வெறும் 38 புள்ளிகளைப் பெற்று கடைசி இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இடம் மாகாணம் புள்ளிகள்
1 மேல் மாகாணம் 1268
2 மத்திய மாகாணம் 526
3 வட மேல் மாகாணம் 438
4 சப்ரகமுவ மாகாணம் 350
5 தென் மாகாணம் 347
6 வட மாகாணம் 158
7 வட மத்திய மாகாணம் 57
8 ஊவா மாகாணம் 52
9 கிழக்கு மாகாணம் 38

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாணவிகள் ஆதிக்கம்

தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற அகில இலங்கை..

மைதான நிகழ்ச்சிகளில் வடக்குக்கு அதிக கௌரவம்

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் அண்மைக்காலமாக ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாடசாலைகள், இம்முறை போட்டித் தொடரிலும் கோலூன்றிப் பாய்தல் உள்ளடங்கலாக ஈட்டி எறிதல் மற்றும் தட்டெறிதல் போட்டிகளில் 16, 18 மற்றும் 20 வயதுப் பிரிவுகளில் வெற்றிகளைப் பதிவு செய்திருந்தன.

இதில் யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி, 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும், யாழ். மகாஜனா கல்லூரி, 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப்பதக்கத்தையும், யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி, 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப்பதக்கங்களையும் வென்றிருந்ததுடன், யாழ். ஹார்ட்லி கல்லூரி, 2 வெண்கலப்பதக்கங்களையும் சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டி பெயர் பாடசாலை அடைவு பதக்கம்
20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் வி. சத்விகா

பாலசுப்ரமணியம் கிரிஜா

யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி

யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி

3.10 மீற்றர்

2.85 மீற்றர்

தங்கப்பதக்கம்

வெண்கலப்பதக்கம்

20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் கே. நெப்தலி ஜொய்சன்

எஸ். டிலக்ஷன்

யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி

தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி

4.45 மீற்றர்

4.15 மீற்றர்

தங்கப்பதக்கம்

வெள்ளிப்பதக்கம்

18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் ஆ. புவிதரன்

ஆர். யதூஷன்

கே. கேதூஷன்

யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி

யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி

யாழ். மகாஜனா கல்லூரி

4.50 மீற்றர்

4.00 மீற்றர்

3.90 மீற்றர்

தங்கப்பதக்கம்

வெள்ளிப்பதக்கம்

வெண்கலப்பதக்கம்

18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் சந்திரசேகரன் சங்கவி யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரி 37.44 மீற்றர் தங்கப்பதக்கம்
18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தல் சந்திரகுமார் ஹெரினா தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி 1.58 மீற்றர் தங்கப்பதக்கம்
18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் சந்திரசேகரன் ஹெரினா

சந்திரசேகரன் சங்கவி

என். தக்சிதா

யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி

யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி

யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி

3.10 மீற்றர்

2.90 மீற்றர்

2.90 மீற்றர்

தங்கப்பதக்கம்

வெள்ளிப்பதக்கம்

வெண்கலப்பதக்கம்

14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் எஸ். சதீஸ் யாழ். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் ஆண்கள் கல்லூரி 6.08 மீற்றர் தங்கப்பதக்கம்
16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எஸ்.மிதுன் ராஜ் யாழ். ஹார்ட்லி கல்லூரி 53.65 மீற்றர் வெண்கலப்பதக்கம்
18 வயதுக்கு உட்படட ஆண்களுக்கான தட்டெறிதல் டி. அபிஷாந்த் யாழ். ஹார்ட்லி கல்லூரி 39.59 மீற்றர் வெண்கலப்பதக்கம்
16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் எம்.திவன்செயன் யாழ். இமயனன் அரசினர் தமிழ் பாடசாலை 47.89 மீற்றர் வெள்ளிப்பதக்கம்
20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் எஸ். பிரகாசராஜ் யாழ். ஹார்ட்லி கல்லூரி 40.35 மீற்றர் வெள்ளிப்பதக்கம்

கிழக்கு மாகாணத்திற்கு பின்னடைவு

அண்மைக்காலமாக தேசிய மட்டத்தில் பல நட்சத்திர மெய்வல்லுனர் வீரர்களை உருவாக்கி வருகின்ற கிழக்கு மாகாணம், அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் மிகப் பெரிய பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றது. அதிலும் குறிப்பாக கடந்த வருடத்தைப் போல இம்முறை அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எந்தவொரு பிரபல பாடசாலையோ அல்லது பெண் வீராங்கனைகளோ வெற்றிகளைப் பெற்றுக்கொள்ளவில்லை.

எனினும், கிழக்கு மாகாணத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய பாடசாலைகளான கிண்ணியா முள்ளிபொத்தானை மத்திய கல்லூரி, மண்டூர் 40 அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் பட்டிருப்பு களுதாவளை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் பதக்கங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டி பெயர் பாடசாலை அடைவு பதக்கம்
20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் ஏ. ஆபித் கிண்ணியா முள்ளிபொத்தானை மத்திய கல்லூரி 6.89 மீற்றர் வெண்கலப்பதக்கம்
14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் பரமேஸ்வரன் குகேந்திரன் மண்டூர் 40 அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 12.99 மீற்றர் வெள்ளிப்பதக்கம்
16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் ஜே. ரிஷானன் களுதாவளை மகா வித்தியாலயம் 13.90 மீற்றர் வெண்கலப்பதக்கம்
12 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஏ.சி அப்துல்லாஹ் அக்கரைப்பத்து அல் – கலாம் மஹா வித்தியாலயம் 14.13 செக்கன்கள் வெண்கலப்பதக்கம்

பிற மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பிரகாசிப்பு

33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமையைக் காணமுடிந்தது.

இதில் கண்டி, மாவனல்லை, நிக்கவெரட்டிய, புத்தளம், பாணந்துறை மற்றும் கொழும்பைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய மட்டத்தில் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டி பெயர் பாடசாலை அடைவு பதக்கம்
18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் ஏ.எம் அப்ரிட் சிலாபம் சவரானா முஸ்லிம் வித்தியாலயம் 1.93 மீற்றர் வெள்ளிப்பதக்கம்
20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஏ.எஸ்.எம் சபான் நிகவெரட்டிய அம்புக்காகம முஸ்லிம் மகா வித்தியாலயம் 10.96

செக்கன்கள்

வெள்ளிப்பதக்கம்
20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஏ.எஸ்.எம் சபான் நிகவெரட்டிய அம்புக்காகம முஸ்லிம் மகா வித்தியாலயம் 21.61 மீற்றர் தங்கப்பதக்கம்
12 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் எம்.என் ரஹீப் மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலை 13.68 செக்கன்கள் தங்கப்பதக்கம்
12 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 60 மீற்றர் எம்.என் ரஹீப்

அதீப் முஹிடீன்

மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலை

கொழும்பு ஏசியன் சர்வதேச பாடசாலை

8.48 செக்கன்கள்

8.54 செக்கன்கள்

வெள்ளிப்பதக்கம்

வெண்கலப்பதக்கம்

20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் சபியா யாமிக் கண்டி விஹாரமஹாதேவி வித்தியாலயம் 12.63 செக்கன்கள் வெண்கலப்பதக்கம்
20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் ஹஸ்னா மிஸாரா டீன் பாணந்துறை அகமதி மகளிர் கல்லூரி 34.79 மீற்றர் வெள்ளிப்பதக்கம்