Home Tamil இலங்கையை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பெற்ற இங்கிலாந்து

இலங்கையை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பெற்ற இங்கிலாந்து

403

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றுப் போட்டியில், இங்கிலாந்து 4 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பதிவு செய்திருப்பதோடு, தொடரின் அரையிறுதிக்கும் தகுதி பெறுகின்றது.

இலங்கை அணியின் இறுதி வாய்ப்பாக மாறுமா இங்கிலாந்து மோதல்?

இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியினை தழுவிய இலங்கை அணி சுபர் 12 சுற்றில் இரண்டு வெற்றிகளை மாத்திரம் பதிவு செய்து, 2022ஆம் ஆண்டுக்கான தம்முடைய T20 உலகக் கிண்ண பயணத்தினை ஏமாற்றத்துடன் நிறைவு செய்கின்றது.

T20 உலகக் கிண்ண குழு 1 அணிகளுக்கான கடைசி குழுநிலை மோதலாக அமைந்த இந்தப் போட்டி முன்னதாக சிட்னி நகரில் ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தார்.

ஏற்கனவே T20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் வாய்ப்பை இழந்திருந்த இலங்கை அணி இப்போட்டியில் ஆறுதல் வெற்றியை எதிர்பார்த்து களமிறங்கியிருந்ததோடு அணியில் ஒரு மாற்றத்தையும் மேற்கொண்டிருந்தது. அதன்படி சாமிக்க கருணாரட்ன பிரமோத் மதுசானுக்குப் பதிலாக அணியில் இணைக்கப்பட்டிருந்தார்.

மறுமுனையில் அரையிறுதி வாய்ப்பிற்காக கட்டாய வெற்றியை எதிர்பார்த்திருந்த இங்கிலாந்து அணி மாற்றங்களின்றி களமிறங்கியிருந்தது.

இலங்கை XI

தசுன் ஷானக்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்க, சரித் அசலன்க, சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன, லஹிரு குமார, கசுன் ராஜித

இங்கிலாந்து XI

ஜோஸ் பட்லர் (தலைவர்), அலெக்ஸ் ஹேல்ஸ், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், ஹர்ரி புரூக், பென் ஸ்டோக்ஸ், சேம் கர்ரன், டாவிட் மலான், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷீட், மார்க் வூட்

பின்னர் நாணய சுழற்சிக்கு அமைவாக முதல் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸ் – பெதும் நிஸ்ஸங்க ஜோடி அதிரடி ஆரம்பத்தை வழங்கியது. இந்த நிலையில் குசல் மெண்டிஸ் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக கிறிஸ் வோக்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மெண்டிஸ் ஆட்டமிழக்கும் போது 14 பந்துகளில் ஒரு சிக்ஸர் ஒரு பெளண்டரி அடங்கலாக 18 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதல் அணியாக அரையிறுதியில் நுழைந்த நியூசிலாந்து!

பின்னர் இலங்கை அணிக்காக தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க ஆகியோர் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தாத போதும் மறுமுனையில் அதிரடியாக ஆடிய பெதும் நிஸ்ஸங்க இலங்கை அணியினைப் பலப்படுத்தியதோடு T20I போட்டிகளில் தன்னுடைய 9ஆவது அரைச்சதத்தினையும் பதிவு செய்தார். அத்தோடு இது இந்த T20 உலகக் கிண்ணத்தில் அவர் பெற்ற இரண்டாவது அரைச்சதமாகவும் மாறியது.

எனினும் பெதும் நிஸ்ஸங்கவின் விக்கெட்டினை அடுத்து முதல் இன்னிங்ஸின் இறுதி 5 ஓவர்களிலும் தடுமாறிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 141 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் பெதும் நிஸ்ஸங்க 45 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்கள் எடுத்ததோடு, பானுக்க ராஜபக்ஷ 3 பெளண்டரிகள் உடன் 22 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் மார்க் வூட் 3 விக்கெட்டுக்களையும், சேம் கர்ரன், மொயின் அலி, ஆதில் ரஷீட், கிறிஸ் வோக்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 142 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணிக்கு அதன் தலைவர் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்திருந்தனர்.

எனினும் இருவரினதும் விக்கெட்டுக்களின் பின்னர் இலங்கையின் சுழல்பந்துவீச்சாளர்களான தனன்ஞய டி சில்வா, வனிந்து ஹஸரங்க ஆகியோரின் பந்துவீச்சினால் சற்று தடுமாறிய இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கைகொடுக்க அவ்வணி போட்டியின் வெற்றி இலக்கை 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களுடன் அடைந்தது.

ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு கோலி பரிந்துரை

இங்கிலாந்து அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் வெறும் 30 பந்துகளை எதிர்கொண்டு 7 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 47 ஓட்டங்கள் எடுக்க, பென் ஸ்டோக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 36 பந்துகளில் 2 பெளண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அதேநேரம் இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோஸ் பட்லரும் 28 ஓட்டங்களுடன் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார்.

மறுமுனையில் இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் லஹிரு குமார, வனிந்து ஹஸரங்க மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்த போதும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது.

போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் சுழல்வீரரான ஆதில் ரஷீட் தெரிவாகினார். இப்போட்டியின் வெற்றியோடு குழு 1 இல் இருந்து நியூசிலாந்துடன் அரையிறுதி வாய்ப்பை பெறும் ஏனைய அணியாக இங்கிலாந்து மாறுகின்றது. அதேநேரம் இலங்கை அணி சுபர் 12 சுற்றில் இரண்டு வெற்றிகளுடன் மாத்திரம் தொடரை நிறைவு செய்து கொள்கின்றது.

ஸ்கோர் விபரம்

Result


England
144/6 (19.4)

Sri Lanka
141/8 (20)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Chris Jordan b Adil Rashid 67 45 2 5 148.89
Kusal Mendis c Liam Livingstone b Chris Woakes 18 14 1 1 128.57
Dhananjaya de Silva c Ben Stokes b Sam Curran 9 11 0 0 81.82
Charith Asalanka c Liam Livingstone b Ben Stokes 8 9 0 0 88.89
Bhanuka Rajapaksa c Sam Curran b Mark Wood 22 22 3 0 100.00
Dasun Shanaka c Jos Buttler b Mark Wood 3 8 0 0 37.50
Wanidu Hasaranga run out (Jos Buttler) 9 9 1 0 100.00
Chamika Karunaratne not out 0 1 0 0 0.00
Maheesh Theekshana c Alex Hales b Mark Wood 0 1 0 0 0.00


Extras 5 (b 0 , lb 3 , nb 0, w 2, pen 0)
Total 141/8 (20 Overs, RR: 7.05)
Bowling O M R W Econ
Ben Stokes 3 0 24 1 8.00
Chris Woakes 3 0 24 1 8.00
Mark Wood 3 0 26 3 8.67
Sam Curran 4 0 27 1 6.75
Adil Rashid 4 0 16 1 4.00
Liam Livingstone 2 0 16 0 8.00
Moeen Ali 1 0 5 0 5.00


Batsmen R B 4s 6s SR
Jos Buttler c Chamika Karunaratne b Wanidu Hasaranga 28 23 2 1 121.74
Alex Hales c & b Wanidu Hasaranga 47 30 7 1 156.67
Ben Stokes not out 42 36 2 0 116.67
Harry Brook c & b Dhananjaya de Silva 4 5 0 0 80.00
Liam Livingstone c Dhananjaya de Silva b Lahiru Kumara 4 6 0 0 66.67
Moeen Ali c Dasun Shanaka b Dhananjaya de Silva 1 5 0 0 20.00
Sam Curran c Kasun Rajitha b Lahiru Kumara 6 11 0 0 54.55
Chris Woakes not out 4 3 0 0 133.33


Extras 8 (b 0 , lb 4 , nb 1, w 3, pen 0)
Total 144/6 (19.4 Overs, RR: 7.32)
Bowling O M R W Econ
Maheesh Theekshana 4 0 22 0 5.50
Kasun Rajitha 3 0 39 0 13.00
Lahiru Kumara 3.4 0 24 2 7.06
Wanidu Hasaranga 4 0 23 2 5.75
Dhananjaya de Silva 4 0 24 2 6.00
Charith Asalanka 1 0 8 0 8.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<