இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றுப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
இந்த வெற்றி அவுஸ்திரேலிய அணிக்கு T20 உலகக் கிண்ணத்தில் கிடைத்த முதல் வெற்றியாக மாற, இலங்கை அணிக்கு இது சுபர் 12 சுற்றில் கிடைத்த முதல் தோல்வியாக மாறியிருக்கின்றது.
முன்னதாக அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ச் இலங்கை கிரிக்கெட் அணிக்கு முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை வழங்கியிருந்தார்.
அவுஸ்திரேலியாவுடன் இலங்கை அணிக்கு காத்திருக்கும் மிகப் பெரிய சவால்
அயர்லாந்துக்கு எதிரான தமது முன்னைய போட்டியில் பெதும் நிஸ்ஸங்கவிற்கு ஓய்வு வழங்கிய இலங்கை கிரிக்கெட் அணி இப்போட்டியில் அவரை அழைக்க, கொவிட்-19 வைரஸ் ஆபத்து காரணமாக இப்போட்டியில் ஆஸி. சுழல்பந்துவீச்சாளரான அடம் ஷம்பாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது..
இலங்கை XI – தசுன் ஷானக்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்க, சரித் அசலன்க, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, லஹிரு குமார, பினுர பெர்னாண்டோ
அவுஸ்திரேலிய XI – டேவிட் வோர்னர், ஆரோன் பின்ச் (தலைவர்), மிச்சல் மார்ஷ், கிளன் மெக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், டிம் டேவிட், மெதிவ் வேட், பேட் கம்மின்ஸ், மிச்சல் ஸ்டார்க், அஸ்டன் ஏகார், ஜோஸ் ஹேசல்வூட்
இதன் பின்னர் போட்டியின் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் அணி தொடக்கத்திலேயே ஆரம்பவீரர்களில் ஒருவராக வந்த குசல் மெண்டிஸின் விக்கெட்டினை பறிகொடுத்தது. பேட் கம்மின்ஸில் பந்துவீச்சில் பிடியெடுப்பை வழங்கிய குசல் மெண்டிஸ் 5 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.
குசல் மெண்டிஸை அடுத்து தனன்ஞய டி சில்வா மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் நிதானமான முறையில் இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கியதோடு அது 69 ஓட்டங்கள் வரை நீடித்தது. இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த தனன்ஞய டி சில்வா 23 பந்துகளில் 3 பௌண்டரிகள் அடங்கலாக 26 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இதன் பின்னர் சிறப்பாக ஆடியிருந்த பெதும் நிஸ்ஸங்கவின் விக்கெட் இலங்கையின் மூன்றாம் விக்கெட்டாக பறிபோனது. ரன் அவுட்டில் தனது விக்கெட்டை பறிகொடுத்த பெதும் நிஸ்ஸங்க 2 பௌண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
பெதும் நிஸ்ஸங்கவின் விக்கெட்டினை அடுத்து இலங்கை அணியின் மத்திய வரிசைத் துடுப்பாட்டவீரர்கள் தடுமாறிய போதும் சரித் அசலன்கவின் பொறுப்பான ஆட்டம் காரணமாக இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த சரித் அசலன்க 25 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்கள் பெற, சாமிக்க கருணாரட்ன 7 பந்துகளில் 14 ஓட்டங்கள் எடுத்தார்.
அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் ஜோஸ் ஹேசல்வூட், பேட் கம்மின்ஸ், மிச்சல் ஸ்டார்க், கிளன் மெக்ஸ்வெல் மற்றும் அஸ்டன் ஏகார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 158 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி டேவிட் வோர்னரின் விக்கெட்டைப் பறிகொடுத்து மெதுவான ஆரம்பத்தினை பெற்ற போதும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் கிளன் மெக்ஸ்வெலின் அபார துடுப்பாட்டத்தோடு போட்டியின் வெற்றி இலக்கை அவுஸ்திரேலிய அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 158 ஓட்டங்களுடன் அடைந்தது.
பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகும் பில் சிம்மன்ஸ்!
அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் அபார துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய மார்கஸ் ஸ்டொய்னிஸ் T20I போட்டிகளில் அவுஸ்திரேலிய துடுப்பாட்டவீரர் ஒருவர் பெற்ற அதிவிரைவான அரைச்சதத்துடன் (17 பந்துகள்) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 18 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேநேரம் கிளன் மெக்ஸ்வெல் 12 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 23 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
அதேநேரம் இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் தனன்ஞய டி சில்வா, சாமிக்க கருணாரட்ன மற்றும் மகீஷ் தீக்ஷன ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய அணியின் மார்கஸ் ஸ்டொய்னிஸ் தெரிவானர்.
இலங்கை அணி T20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் அடுத்த போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (29) நியூசிலாந்து அணியுடன் நடைபெற, அவுஸ்திரேலிய அணி தமது அடுத்த போட்டியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) இங்கிலாந்தை எதிர்கொள்கின்றது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | run out (Matthew Wade) | 40 | 45 | 2 | 0 | 88.89 |
Kusal Mendis | c Mitchell Marsh b Pat Cummins | 5 | 6 | 1 | 0 | 83.33 |
Dhananjaya de Silva | c David Warner b Ashton Agar | 26 | 23 | 3 | 0 | 113.04 |
Charith Asalanka | not out | 38 | 25 | 3 | 2 | 152.00 |
Bhanuka Rajapaksa | c Pat Cummins b Mitchell Starc | 7 | 5 | 1 | 0 | 140.00 |
Dasun Shanaka | c Matthew Wade b Glenn Maxwell | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Wanidu Hasaranga | c Matthew Wade b Josh Hazlewood | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Chamika Karunaratne | not out | 14 | 7 | 2 | 0 | 200.00 |
Extras | 23 (b 6 , lb 5 , nb 0, w 12, pen 0) |
Total | 157/6 (20 Overs, RR: 7.85) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Josh Hazlewood | 4 | 0 | 26 | 1 | 6.50 | |
Pat Cummins | 4 | 0 | 36 | 1 | 9.00 | |
Mitchell Starc | 4 | 0 | 23 | 1 | 5.75 | |
Ashton Agar | 4 | 0 | 25 | 1 | 6.25 | |
Marcus Stoinis | 2 | 0 | 17 | 0 | 8.50 | |
Mitchell Marsh | 1 | 0 | 14 | 0 | 14.00 | |
Glenn Maxwell | 1 | 0 | 5 | 1 | 5.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
David Warner | c Dasun Shanaka b Maheesh Theekshana | 11 | 10 | 0 | 0 | 110.00 |
Aaron Finch | not out | 31 | 42 | 0 | 1 | 73.81 |
Mitchell Marsh | c Bhanuka Rajapaksa b Dhananjaya de Silva | 17 | 17 | 1 | 1 | 100.00 |
Glenn Maxwell | c Ashen Bandara b Chamika Karunaratne | 23 | 12 | 2 | 2 | 191.67 |
Marcus Stoinis | not out | 59 | 18 | 4 | 6 | 327.78 |
Extras | 17 (b 4 , lb 3 , nb 0, w 10, pen 0) |
Total | 158/3 (16.3 Overs, RR: 9.58) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Binura Fernando | 0.5 | 0 | 5 | 0 | 10.00 | |
Dhananjaya de Silva | 2.1 | 0 | 18 | 1 | 8.57 | |
Lahiru Kumara | 3.3 | 0 | 22 | 0 | 6.67 | |
Chamika Karunaratne | 3 | 0 | 21 | 1 | 7.00 | |
Maheesh Theekshana | 3 | 0 | 23 | 1 | 7.67 | |
Wanidu Hasaranga | 3 | 0 | 53 | 0 | 17.67 | |
Dasun Shanaka | 1 | 0 | 10 | 0 | 10.00 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<