டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வெல்ல காத்திருக்கும் தினேஷ்

2020 Tokyo Paralympics

488

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்ற பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையின் பிரதான பதக்க எதிர்பார்ப்பாக ஈட்டி எறிதல் வீரர் தினேஷ் பிரியன்த ஹேரத் விளங்குகிறார்.

2016 ரியோ பாராலிம்பிக்கில் கையொன்றை இழந்த அல்லது கையின் மேல் பகுதி ஊனமுற்ற ஆண்களுக்கான F46 பிரிவு ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர், இரண்டாவது முறையாக பதக்கம் வெல்லும் எதிர்பார்ப்புடன் இம்முறை டோக்கியோ பாராலிம்பிக்கில் பங்குபற்றவுள்ளார்.  

டோக்கியோ பாராலிம்பிக்கில் சாதிப்பார்களா இலங்கை நட்சத்திரங்கள்?

இலங்கை சார்பாக பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட தினேஷ், இறுதியாக நடைபெற்ற 2017 உலக பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தையும் 2018 ஆசிய பாரா விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கத்தையும் 2019 உலக பாரா மெய்வல்லுனர் சம்பயின்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

“கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட வெற்றிகளால், இந்தமுறை பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வேன் என்று எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. அதற்காக நான் கடினமாக உழைத்தேன், தொடர்ந்து பயிற்சிகளையும் எடுத்தேன். அதேபோல, இம்முறை பாராலிம்பிக்கில் அதிக பதக்கங்களை எமது வீரர்களால் இலங்கைக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என்று இலங்கை பாராலிம்பிக் அணியின் தலைவரான தினேஷ் பிரியன்த ஹேரத் ThePapare.com இற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

தினேஷ் அநுராதபுரம் மாவட்டம், இபலோகமகாகம என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். காகம தாதுசேன மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். பாடசாலைக் காலத்தில் விளையாட்டில் ஈடுபடுவதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஏனெனில், பாடசாலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு வயல் வேலைக்குச் செல்வார். அவ்வப்போது ஓய்வு நேரம் கிடைக்கின்ற போது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவார்.

மூன்று பேர் கொண்ட குடும்பத்தில் தினேஷ் மூத்த ஆண் பிள்ளை. தினேஷின் மூத்த சகோதரியும் இளைய சகோதரரும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களாவர். தினேஷுக்கு 12 வயதாக இருக்கும் போது அவரது தந்தை மரணித்துவிட்டார். இதன் காரணமாக, தினேஷுக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து, அவரது தாயார் வை.எம் கமலாவதி தான் அவரது குடும்பத்தை பார்த்துக் கொண்டார்.  

அனுபவ வீரராக டோக்கியோ பாராலிம்பிக்கில் பங்கேற்கும் சம்பத்

நாங்கள் ஷ்டத்துடன் தான் இருக்கிறோம் என்பதை அம்மா ஒருபோதும் காண்பிக்கவில்லை. எங்கள் மூவரின் தேவைகளுக்காக அம்மா கடுமையாக உழைத்தார். ஆனால் வயல் வேலைக்கு வந்து உதவுமாறு அவர் ஒருநாளும் கேட்டதில்லை. பாடசாலை முடிந்ததும் நாங்கள் விரும்பித் தான் வயல் வேலைக்கு அம்மாவுக்கு உதவி செய்ய சென்றோம். ஆனால் நாங்கள் வயல்களில் வேலை செய்வதை அம்மா விரும்பவில்லை. பாடசாலையில் கொடுக்கப்பட்ட வேலைகளை செய்யச் சொல்லி எம்மை வீட்டுக்கு போகச் சொல்வார்.”

தினேஷும் அவரது சககோதரர்களும் பெரியவர்களாக வளர வளர அவரது அம்மாவுக்கு அதிக சுமையை தாங்க வேண்டியிருந்தது. பாடசாலை செல்கின்ற வயதாக இருந்தாலும், அம்மாவின் ஷ்டத்தை தினேஷ் நன்றாக உணர்ந்தார். அவரது சகோதரி வீட்டு வேலைகளுக்கு உதவி செய்தார். மறுபுறத்தில் தினேஷ் பெரும்பாலும் பாடசாலைக்குச் செல்லாமல் வயல் வேலைக்கு செல்வது அவருடைய அம்மா விரும்பவில்லை

அந்த நேரத்தில் நாங்கள் மிகவும் ஷ்டப்பட்டோம். நான் பாடசாலைக்குச் சென்றாலும், இல்லாவிட்டாலும், கைகளில் தழும்பு வரும் வரை வயல்களை உழுதேன். அதேபோல, இரவு நேரங்களில் வயல்களில் உள்ள நெல்லை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க கண் விழித்து காவல் காத்தேன்.

இதனிடையே, சாதாரண தர பரீட்சையை முடித்த பிறகு, நான் இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டேன். அப்போதைய நாட்களில் நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது எமது கிராமங்களுக்கு வருகின்ற இராணுவ வீரர்களை அடிக்கடி சந்தித்தோம். 

பாராலிம்பிக் செல்லும் ஒரே இலங்கை வீராங்கனை குமுது

குறிப்பாக, இராணுவ சீருடைகளை அணிந்து துப்பாக்கிகளை அவர்கள் எடுத்துச் செல்லும்போது எங்கள் மனதிலும் இயற்கையாகவே இராணுவத்தில் இணைந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதனால் எனக்கும் இராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை சிறு வயதிலிருந்தே இருந்தது. எனது குடும்பத்தின் பொருளாதார நிலைமையைக் காட்டிலும் இராணுவ சீருடையை அணிய வேண்டும் என்ற ஆசை தான் என்னிடம் இருந்தது.”

2004ஆம் ஆண்டு தினேஷ் சாலியபுரவில் உள்ள இராணுவ கஜபா படைப்பிரிவு பயிற்சி கல்லூரியில் இணைந்துகொண்டார். குறித்த பயிற்சிக் கல்லூரியானது தினேஷின் கிராமத்திற்கு அருகில் இருப்பதால், அது அவருக்கு கிராமத்தில் இருப்பதைப் போன்ற மனநிலையை ஏற்படுத்தியிருந்தது

எனவே, பயிற்சியின் பின்னர் தினேஷ் 3ஆவது கஜபா படைப்பிரிவுடன் இணைந்துகொள்ள யாழ்ப்பாணம் சென்றார். அங்கிருந்து யுத்ததத்தில் தனது பங்களிப்பினை வழங்க அக்கராயகுளம் பகுதிக்குச் சென்றார்.

வாழ்க்கையே மாறி, இன்று பாராலிம்பிக் செல்லும் சுபசிங்க

நான் தொடர்ச்சியாக வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற மனிதாபிமான செயல்பாடுகளில் பணியாற்றினேன். இதற்கிடையில், நான் 2008இல் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளானேன். இதனையடுத்து நான் சுமார் 4 ஆண்டுகளாக இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்

அது ஒரு மிகவும் கடினமான காலப்பகுதி. நான் வெளியேறும்போது, வேறு யாராவது வந்து என்னைச் சந்திப்பார்கள். இது ஒரு பெரிய தொந்தரவாக உணர்ந்தேன். ஆனால் செய்வதற்கு வேறு எதுவும் இல்லை. அப்போது தான் ஊனமுற்றவர்களுக்கான பிரத்தியேகமாக ஒரு விளையாட்டு அமைப்பு ஒன்று இருப்பதை அறித்து கொண்டேன்.”

2012ஆம் ஆண்டு தினேஷ் கஜபா படைப்பிரிவு பாரா விளையாட்டு அணியில் இணைந்து கொண்டார். ஆனால் தினேஷுக்கு எந்த விளையாட்டை தேர்ந்ததெடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை.

நான் பாடசாலையில் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறவில்லை. கிராமத்தில் நான் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடினேன் ஆனால் இங்கு கிரிக்கெட் இல்லை. எனவே, எந்த விளையாட்டை தேர்ந்தெடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த போது கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த தஸநாயக்க சேர் என்னை ஈட்டி எறியச் சொன்னார். அவர் தான் எனக்கு பயிற்சி அளித்தார். இறுதியில் நான் ஈட்டி எறிதல் விளையாட்டை தெரிவுசெய்தேன்.”

அதன்படி, ஈட்டி எறிதல் பயிற்சிகளை முன்னெடுத்த தினேஷ், இராணுவ பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டி மற்றும் தேசிய பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றினார். இதன் விளைவாக, அவர் பயிற்சி பெற்ற அதே ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற திறந்த பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

அது எனது முதல் சர்வதேசப் போட்டியாகும். அந்தப் போட்டியில் நான் தங்கப் பதக்கம் வென்றேன். அதே ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய பாராலிம்பிக் மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொண்டு 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டேன்.”

அதன்பின்னர், 2015இல் கத்தாரில் நடைபெற்ற உலக பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்க தினேஷுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டித் தொடரில் தினேஷ் ஆறாவது இடத்தை பெற்றார். இதனால் தினேஷுக்கு 2016 ரியோ பாராலிம்பிக் தகுதிகாண் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததுடன் அதில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் முதல் முறையாக 2016இல் பிரேசிலில் நடைபெற்ற ரியோ கோடைக்கால பாராலிம்பிக்கில் பங்குபற்ற தகுதிபெற்றார்.

ரியோ பாராலிம்பிக்கில், நான் 58.23 மீட்டர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றேன். இது உண்மையில் எனக்கு ஒரு பெரிய வெற்றி. எனது பயணத்திற்கு இது ஒரு பெரிய ஆசிர்வாதமாக அமைந்தது.”

அன்றிலிருந்து தினேஷ் ஈட்டி எறிதலில் அதிக அர்ப்பணிப்புடன் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் பயிற்சியாளர் பிரதீப் நிஷாந்தவிடம் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டார்.

“ரியோ பாராலிம்பிக்கிற்குப் பிறகு, 2017 லண்டன் உலக பாராலிம்பிக் சம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தையும், 2018இல் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கத்தையும், 2019இல் துபாயில் நடைபெற்ற உலக பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தையும் என்னால் பெற்றுக்கொள்ள முடிந்தது. அந்த திறமையால் தான் இந்த ஆண்டு பாராலிம்பிக்கில் பங்குபுற்றுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

ரியோ பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றது எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. நிறைய பேர் என்னிடமிருந்து பதக்கத்தை எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப நானும் உள்ளேன். இதற்காக நான் பயிற்சியாளர் பிரதீப் நிஷாந்தவிடம் பயிற்சி பெற்றேன். நாங்கள் நண்பர்களைப் போல பயிற்சி எடுத்தோம். அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மிக அதிகமாக உள்ளது. எனது முயற்சி வீண்போகாது.”

35 வயதான தினேஷ் திருமணமானவர். அவரது மனைவி எம். இஷங்கா மதுவந்தி. தினேஷின் கிராமத்தைச் சேர்ந்தவர். தினேஷுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவரது மூத்த மகன் பிரமத மெனுவன். அவருக்கு தற்போது 10 வயது. இரண்டாவது மகள் மிதுனி வர்ஷனா. அவருக்கு 5 வயது. அவரது இளைய மகன் சத்துல சனுல்ய இன்னும் 4 மாத குழந்தை. எனவே தினேஷ் தனது மனைவி, குழந்ததைகளுடன் காகமவில் வாழ்ந்து வருகின்றார்.

இந்தப் பயணம் நான் தனியாக மேற்கொண்ட பயணம் அல்ல. எனக்கு நிறைய பேர் உதவி செய்துள்ளனர். அதே நேரத்தில், எனது மனைவி, எனது அம்மா, மனைவியின் வீட்டில் உள்ள அனைவரும், என் உறவினர்கள் மற்றும் கிராமத்தில் உள்ள அனைவரும் இந்த பயணத்தில் எனக்கு நிறைய பக்கபலமாக உள்ளார்கள். அவர்கள் எனது வெற்றிகளுக்குப் பின்னால் இருக்கிறார்கள். இலங்கை இராணுவம், விளையாட்டு அமைச்சு மற்றும் தேசிய பாராலிம்பிக் சங்கமும் எனக்காக பல சேவைகளை செய்தன. அவர்கள் அனைவருக்கும் நன்றி என்று தினேஷ் பிரியன்த ஹேரத் கூறினார்.

எனவே, கடந்த முறை பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற தினேஷ், இம்முறை டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என ThePapare.com சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

>>மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க<<