பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் இலகு வெற்றி பதிவு செய்த இந்தியா

146

துபாய் மைதானத்தில் இடம்பெற்று முடிந்திருக்கும் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின், “சுபர் 4” சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 9 விக்கெட்டுக்களால் மீண்டுமொரு முறை இலகுவாக வீழ்த்தியுள்ளது.  

இந்திய அணி இவ்வெற்றியுடன் 14ஆவது முறையாக நடைபெறும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக தமது நான்காவது வெற்றியினை பதிவு செய்து, இறுதிப் போட்டிக்கான வாய்ப்பினையும் அதிகரித்துள்ளது.

“சுபர் 4” சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி இலகு வெற்றி

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின், இரண்டாம் கட்டப் போட்டிகளான “சுபர் 4” சுற்றின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை இந்தியா 7 விக்கெட்டுக்களால்…

நேற்று (23) நடைபெற்றிருந்த இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹ்மட், முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்தார்.

இதனை அடுத்து முன்னதாக இடம்பெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் லீக் ஆட்டமொன்றில், இந்தியாவுடன் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி அதற்கு பதிலடி தரும் நோக்கில் போட்டியில் துடுப்பாட தயாராகினர்.

முதலில் துடுப்பாட தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்ப வீரர்களாக வந்த இமாம்உல்ஹக் , பக்கார் சமான் ஆகியோர் நல்ல துவக்கத்தினை தரவில்லை. இமாம்உல்ஹக் 10 ஓட்டங்களுடன் வெளியேற, பக்கார் சமான் 31 ஓட்டங்களுடன் நடையை கட்டினார்.

இதனை அடுத்து நம்பிக்கைக்குரிய பாபர் அசாமின் விக்கெட்டும், மோசமான ரன் அவுட் ஒன்றுடன் 9 ஓட்டங்களோடு பறிபோனது. எனினும், மத்திய வரிசையில் ஆடிய அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட் மற்றும் சொஹைப் மலிக் ஆகியோர் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தினை கட்டியெழுப்பினர்.

மலிக்சர்பராஸ் அஹ்மட் ஜோடி பாகிஸ்தான் அணியின் நான்காம் விக்கெட்டுக்காக 107 ஓட்டங்களை பகிர்ந்தனர். பின்னர், சர்பராஸ் அஹ்மட் குல்தீப் யாதவ்வின் சுழலில் 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும், சொஹைப் மலிக் தனது 43ஆவது ஒரு நாள் அரைச் சதத்துடன் தனது தரப்பை வலுப்படுத்தினார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியை போராடி வென்றது பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியை போராடி வென்றது பாகிஸ்தான் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கிண்ணத்…

பின்னர், சொஹைப் மலிக்கின் விக்கெட் ஜஸ்பிரிட் பும்ராவின் ஓவரில் பறிபோனது. மலிக்கின் விக்கெட்டினை அடுத்து பின்னடைவினை சந்தித்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 237 ஓட்டங்களை குவித்தது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில், சொஹைப் மலிக் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 90 பந்துகளுக்கு 78 ஓட்டங்களையும், ஆசிப் அலி 30 ஓட்டங்களையும் பெற்று பெறுமதி சேர்த்திருந்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பாக ஜஸ்பிரிட் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 238 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி, வெற்றி இலக்கினை 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 238 ஓட்டங்களுடன் அடைந்தது.

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்த ஆப்கான் அணி

ஆசியக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற சுப்பர் 4 சுற்றின் விறுவிறுப்பான…

இந்திய அணியின் வெற்றிக்கு அதன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக வந்த சிக்கர் தவான் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக, 210 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததோடு, இதில் சிக்கர் தவான் தனது 15ஆவது ஒரு நாள் சதத்துடன் 100 பந்துகளுக்கு 16 பெளண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 114 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா அவருடைய 17ஆவது ஒரு நாள் சதத்துடன் 119 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 111 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது நின்று குவித்திருந்தார்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது இந்திய அணியின் சிக்கர் தவானிற்கு வழங்கப்பட்டது. இந்திய அணி சுபர் 4” சுற்றின் தமது கடைசி லீக் போட்டியில் ஆப்கான் அணியினை செவ்வாய்க்கிழமை (25) எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 237/7 (50) சொஹைப் மலிக் 78(90), சர்பராஸ் அஹ்மட் 44(86), ஆசிப் அலி 30(21), ஜஸ்பிரிட் பும்ரா 29/2(10)

இந்தியா – 238/1 (39.3) சிக்கர் தவான் 114(100), ரோஹித் சர்மா 111(119)*

முடிவுஇந்திய அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி

 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<