உலகக் கிண்ண வரலாற்றை பேசும் ஹெட்ரிக்-விக்கெட்டுகள்!

1154
Espncricinfo

சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்த்தப்படும் சாதனைகள் கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியிலும், வீரர்கள் மத்தியிலும் அதிகம் உற்சாகத்தை ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்திருக்கிறன. அதிலும், உலகக் கிண்ணத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கும் சாதனைகள் என்றும் மாறாத சுவாரஷ்யத்தை ஏற்படுத்தக்கூடியன.

உலகக் கிண்ணத்துக்கு முன் மாலிங்கவுக்கு ஓய்வு

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வரும் இலங்கை …..

அதிலும், உலகக் கிண்ணம் நெருங்கும் இந்த தருணத்தில் உலகக் கிண்ணத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை நினைவுகூறும் போது, அதில் இனம்புரியாத பூரிப்பு எப்பொழுதும் இருந்துக்கொண்டேதான் இருக்கின்றது.

அந்த வரிசையில், இதுவரையில் நடைபெற்றுள்ள உலகக் கிண்ண தொடர்களில் பந்து வீச்சில் அசத்தி, ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்…  

சேடன் சர்மா (இந்தியா) – 1987 எதிர் நியூசிலாந்து

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சேடன் சர்மா, உலகக் கிண்ணத்தில் முதல் ஹெட்ரிக் விக்கெட்டை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை பெற்றவர்.

நான்காவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரினை (1987) இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தியிருந்தன. இந்த தொடரில் தங்களுடைய குழுநிலையின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடியது.

ICC

நாக்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன் போது, அபார பந்து வீச்சினை வெளிப்படுத்திய சேடன் சர்மா கென் ரதபோர்ட், இயன் ஸ்மித் மற்றும் எவன் செட்பீல்ட் ஆகியோரது விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி, உலகக் கிண்ண வரலாற்றில் முதல் ஹெட்ரிக்கினை கைப்பற்றினார்.

இதில், முக்கியமாக குறித்த மூன்று வீரர்களையும், சேடன் சர்மா போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சக்லைன் முஷ்டாக் (பாகிஸ்தான்) – 1999 எதிர் ஜிம்பாப்வே

உலகக் கிண்ணத்தின் முதல் ஹெட்ரிக் விக்கெட் பதியப்பட்டு 12 வருடங்களுக்கு பின்னர், இரண்டாவது ஹெட்ரிக் விக்கெட்டை பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக், 1999ம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் கைப்பற்றியிருந்தார்.

உலகக் கிண்ணத்தில் ஹெட்ரிக் விக்கெட்டை கைப்பற்றிய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்ற இவர், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை பதிவுசெய்தார்.

Espncricinfo

இங்கிலாந்தின் இலண்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 272 என்ற வெற்றியிலக்கினை நிர்ணியித்திருந்தது. பதிலுக்கு  துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி 123 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதன்போது பந்து வீச அழைக்கப்பட்ட சக்லைன் முஷ்டாக் பின்வரிசை வீரர்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து தனது ஹெட்ரிக்கை  பதிவு செய்து, அணியின் வெற்றியையும் உறுதிசெய்தார். இதன்போது, ஹென்ரி ஒலங்கா, ஹெடன் ஹக்ல் ஆகியோரை விக்கெட் காப்பாளர் ஸ்டம்பிங் மூலமாக ஆட்டமிழக்கச் செய்ய, பொமி ம்பாங்வாவினை LBW முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.  

சமிந்த வாஸ் (இலங்கை) – 2003 எதிர் பங்களாதேஷ்

உலகக் கிண்ண வரலாற்றிலும், சர்வதேச ஒருநாள் போட்டிகள் வரலாற்றிலும் போட்டியின் முதல் மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை (ஹெட்ரிக்) கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை இலங்கை அணியின் இடதுகை மித வேகப் பந்துவீச்சாளர் சமிந்த வாஸ் பெற்றுக்கொண்டார்.

2003ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை அணி, பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இலங்கை அணி பணித்தது.

இதன்படி, களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு தனது அபார பந்து வீச்சின் மூலம் தடுமாற்றத்தை வழங்கிய சமிந்த வாஸ், தன்னுடைய முதல் மூன்று பந்துகளில் ஹெட்ரிக்கினை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

Espncricinfo

முதல் பந்தில் ஹனான் சர்கார் போல்ட் முறையில் ஆட்டமிழக்க, இரண்டாவது பந்தில் மொஹமட் அஷ்ரபுல் சமிந்த வாஸிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். மூன்றாவது பந்தில், ஹெசனுல் ஹக், மஹேல ஜயவர்தனவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, சமிந்த வாஸ் ஹெட்ரிக்கினை கைப்பற்றினார்.

வேகப்பந்து வீச்சாளரை சுழல் பந்துவீச்சாளராக மாற்றிய சனத் ஜயசூரிய

இலங்கை அணியும், இந்திய அணியும்……..

ப்ரெட் லீ (அவுஸ்திரேலியா) – 2003 எதிர் கென்யா

2003ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தின் இரண்டாவது ஹெட்ரிக்கினை அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ப்ரெட் லீ பதிவு செய்தார்.

சமிந்த வாஸ் ஹெட்ரிக்கினை கைப்பற்றி 11 நாட்களுக்கு பின்னர் ப்ரெட் லீ தனது உலகக் கிண்ண ஹெட்ரிக்கினை பதிவுசெய்தார். டேர்பனில் நடைபெற்ற கென்யா அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது, நான்காவது ஓவரை வீசிய இவர், முதல் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

ICC

ப்ரெட் லீயின் பந்து வீச்சில் கென்யா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கென்னடி ஓடினோ போல்ட் முறையில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ப்ரிஜல் பட்டேல், ரிக்கி பொன்டிங்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக டேவிட் ஒபுயா யோர்க்கர் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழக்க ப்ரெட் லீயின் ஹெட்ரிக் பதிவானது.

லசித் மாலிங்க (இலங்கை) – 2007 எதிர் தென்னாபிரிக்கா

உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டு ஹெட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க கொண்டுள்ளார். இவர், தனது முதல் ஹெட்ரிக்கினை 2007ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் கைப்பற்றியிருந்தார்.

இதுவரையில் உலகக் கிண்ணத்தில் பெறப்பட்ட அதிசிறந்த ஹெட்ரிக்காக மாலிங்கவின் இந்த ஹெட்ரிக் விக்கெட்டுகள் பார்க்கப்படுகிறது. காரணம், மாலிங்க தொடர்ச்சியாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

லசித் மாலிங்க உலகக் கிண்ணத்தில் முக்கிய வீரராக அமைவார்: வாஸ்

அண்மைக்காலமாக ஐ.பி.எல். உள்ளடங்களாக உள்ளூர் போட்டிகளில்…….

மேற்கிந்திய தீவுகளின் ப்ரொவிடன்சில் நடைபெற்ற சுப்பர் 8  சுற்றுப் போட்டியில், இலங்கை அணி, தென்னாபிரிக்க அணியை எதிர்கொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 210 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயிக்க, தென்னாபிரிக்க அணி வெற்றியிலக்கை நெருங்கியது.

ICC

போட்டியில் 5 விக்கெட்டுகள் கைவசம் இருக்க, தென்னாபிரிக்க அணிக்கு 4 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டது. எனினும், பந்து வீச அழைக்கப்பட்ட மாலிங்க 45வது ஓவரின் இறுதி இரண்டு பந்துகளிலும், 47வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

ஷோன் பொல்லொக், என்ருவ் ஹோல், ஜெக் கலீஸ் மற்றும் மகாயா நிடினி ஆகியோரின் விக்கெட்டுகளை லசித் மாலிங்க தொடர்ச்சியாக வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெமார் ரோச் (மேற்கிந்திய தீவுகள்) – 2011 எதிர் நெதர்லாந்து

மேற்கிந்திய தீவுகள் அணியின் முதலாவது உலகக் கிண்ண ஹெட்ரிக்கினை வேகப்பந்து வீச்சாளர் கெமார் ரோச் 2011ம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது கைப்பற்றினார்.

மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயித்த 331 என்ற வெற்றியிலக்கினை நோக்கிய நெதர்லாந்து அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதன் போது பந்து வீசிய கெமார் ரோச் இறுதி மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி உலகக் கிண்ண ஹெட்ரிக்கினை தன்வசப்படுத்தினார்.

ICC

நெதர்லாந்து அணியின் பீட்டர் சீலார் மற்றும் பெர்னாட் லோர்ட்ஸ் ஆகியோரை LBW முறையில் ஆட்டமிழக்கச் செய்த ரோச், பெரன்ட் வெஸ்டிஜ்ஸ்கினை போல்ட் முறையில் வீழ்த்தி தனது முதலாவது உலகக் கிண்ண ஹெட்ரிக்கினை கைப்பற்றினார்.

லசித் மாலிங்க (இலங்கை) – 2011 எதிர் கென்யா

இலங்கை அணியின் மூன்றாவதும், 2011ம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் இரண்டாவதும், தன்னுடைய இரண்டாவதுமான உலகக் கிண்ண ஹெட்ரிக்கினை லசித் மாலிங்க 2011ம் ஆண்டு நடைபெற்ற கென்யாவுக்கு எதிரான போட்டியில் கைப்பற்றியிருந்தார்.

1996ம் ஆண்டு உலகக் கிண்ண அரையிறுதியில் நடந்தது என்ன?

இலங்கை கிரிக்கெட் அணியையும், இலங்கையையும் உச்சத்திற்கு கொண்டு சென்ற……….

கெமார் ரோச் பெப்ரவரி 28ம் திகதி உலகக் கிண்ண ஹெட்ரிக்கினை கைப்பற்ற, அடுத்த தினம் (மார்ச் 1) லசித் மாலிங்க தனது இரண்டாவது ஹெட்ரிக்கை பதிவுசெய்ததுடன், உலகக் கிண்ணத்தில் இரண்டு ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

ICC

முதல் ஹெட்ரிக் போன்று இரண்டு ஓவர்களில் மாலிங்கவின் ஹெட்ரிக் பெறப்பட்டிருந்தது. தன்னுடைய 7வது ஓவரின் இறுதிப் பந்தில் டன்மே மிஷ்ராவை ஆட்டமிழக்கச் செய்த இவர், தன்னுடைய எட்டாவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் பீட்டர் ஒன்கொண்டோ மற்றும் செம் கோச் ஆகியோரை போல்ட் முறையில் வீழ்த்தி இரண்டாவது உலகக் கிண்ண ஹெட்ரிக்கினை பதிவுசெய்தார்.

ஸ்டீவன் பின் (இங்கிலாந்து) – 2015 எதிர் அவுஸ்திரேலியா

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின், உலகக் கிண்ணத்தில் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

Espncricinfo

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2015ம் ஆண்டு உலகக் கிண்ண குழுநிலை போட்டியின் இறுதி ஓவரில், இறுதி மூன்று பந்துகளில் இந்த ஹெட்ரிக்கினை ஸ்டீவன் பின் கைப்பற்றியிருந்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தங்களது இன்னிங்ஸின் மூன்று பந்துகள் எஞ்சியிருக்க, 342 ஓட்டங்களை பெற்றிருந்தது.

எனினும், இறுதி மூன்று பந்துகளில் ஸ்டீவன் பின் பிரெட் ஹெடின், கிளேன் மெக்ஸ்வேல் மற்றும் மிட்சல் ஜோன்சன் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி ஹெட்ரிக்கினை கைப்பற்றினார்.

ஜே.பி. டுமினி (தென்னாபிரிக்கா)  – 2015 எதிர் இலங்கை

உலகக் கிண்ண வரலாற்றில் இறுதியாக ஹெட்ரிக் விக்கெட்டினை வீழ்த்தியவர் தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜே.பி. டுமினி. 2015ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான உலகக் கிண்ண காலிறுதிப் போட்டியில் வைத்து இந்த ஹெட்ரிக்கினை கைப்பற்றியிருந்தார்.

2015 உலகக் கிண்ண ஞாபகத்தை மீட்டெடுக்கும் சங்காவின் துடுப்பாட்ட சாதனை

குமார் சங்கக்கார, இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மறுக்கப்படாததும், மறக்கப்படாததுமான ஒரு பெயர். ……

குறித்த உலகக் கிண்ணத் தொடரில் பலம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசையாக இருந்த இலங்கை அணியை, தென்னாபிரிக்க அணி 133 ஓட்டங்களுக்கு சுருட்டியது.

Espncricinfo

இதில், இலங்கை அணி 114 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த போது ஜே.பி.டுமினி, அஞ்செலோ மெதிவ்ஸ், நுவான் குலசேகர மற்றும் தரிந்து கௌஷால் ஆகியோரினை அடுத்தடுத்து வெளியேற்றி உலகக் கிண்ண ஹெட்ரிக்கை தன்வசப்படுத்தினார். இந்த ஹெட்ரிக்கானது தென்னாபிரிக்க வீரர் ஒருவர் கைப்பற்றிய முதலாவது உலகக் கிண்ண ஹெட்ரிக்காகவும் பதிவாகியது.

இதன்போது, அஞ்செலோ மெதிவ்ஸ் டுமினியின் முதல் விக்கெட்டாக பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த குலசேகர, வந்த வேகத்திலேயே விக்கெட் காப்பாளரிடம் பிடி கொடுத்து அரங்கு திரும்ப, தரிந்து கௌஷாலும் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<