Home Tamil மெண்டிஸின் அதிரடி வீண்; இரண்டாவது பயிற்சி ஆட்டத்திலும் இலங்கை தோல்வி

மெண்டிஸின் அதிரடி வீண்; இரண்டாவது பயிற்சி ஆட்டத்திலும் இலங்கை தோல்வி

ICC Cricket World Cup 2023

128
ICC Cricket World Cup 2023

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்காக விளையாடியிருந்த பயிற்சிப் போட்டியில் டக்வெத் லூயிஸ் முறையில் ஆப்கானிஸ்தான் 06 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>>உபாதைகளுக்கு முகங்கொடுத்துள்ள ஷானக, குசல் பெரேரா!

குவஹாட்டியில் இன்று (03) ஆரம்பமாகிய இந்தப் போட்டி மழையின் காரணமாக சற்று தாமதமாக தொடங்கியிருந்தது.  போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்கு வழங்கியிருந்தது.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணியின் ஆரம்ப வீரர்களில் ஏமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய திமுத் கருணாரட்ன 08 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். இதன் பின்னர் இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக 52 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்த நிலையில் பெதும் நிஸ்ஸங்க 30 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

தொடர்ந்த ஆட்டத்தில் இலங்கை அணியினை இப்போட்டியில் வழிநடாத்திய குசல் மெண்டிஸ் அதிரடியாக ஆடத் தொடங்கியதோடு வெறும் 59 பந்துகளில் சதம் விளாசியதோடு மொத்தமாக 87 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 19 பௌண்டரிகள் அடங்கலாக 158 ஓட்டங்களை எடுத்தார்.

எனினும் குசல் மெண்டிஸின் ஓய்வினை அடுத்து தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்த இலங்கை கிரிக்கெட் அணி 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 294 ஓட்டங்களை எடுத்தது. இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் சதீர சமரவிக்ரம 39 ஓட்டங்கள் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் மொஹமட் நபி 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.

>>உலகக் கிண்ண போட்டி வர்ணனையாளர்கள் அறிவிப்பு

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக மழையின் குறுக்கீடு ஆட்டத்தில் இருந்த காரணத்தினால் டக்வெத் லூயிஸ் முறையில் 42 ஓவர்களுக்கு 257 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கினை ஆப்கான் அணியானது ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் ரஹ்மாத் சாஹ்வின் துடுப்பாட்டங்களோடு அடைந்தது.

ஆப்கான் அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் வீரர்களில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 92 பந்துகளுக்கு 9 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 119 ஓட்டங்களை எடுக்க, ரஹ்மத் சாஹ் 82 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக 93 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

>>தனது பாடசாலைக்காக கிரிக்கெட் மைதானம் அமைக்கும் தினேஷ் சந்திமால்

இலங்கைப் பந்துவீச்சில் கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

Result


Afghanistan
261/4 (38.1)

Sri Lanka
294/10 (46.2)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Noor Ahmad b Abdul Rahman 30 38 5 0 78.95
Dimuth Karunaratne c Rahmanullah Gurbaz b Mujeeb ur Rahman 8 14 1 0 57.14
Kusal Mendis retired 158 87 19 9 181.61
Sadeera Samarawickrama b Rashid Khan 39 54 4 0 72.22
Charith Asalanka c Ibrahim Zadran b Mohammad Nabi 12 27 1 0 44.44
Dhananjaya de Silva c Rashid Khan b Naveen ul Haq 22 31 2 0 70.97
Dunith Wellalage c Rahmat Shah b Mohammad Nabi 0 1 0 0 0.00
Dushan Hemantha b Mohammad Nabi 5 13 0 0 38.46
Lahiru Kumara c Rashid Khan b Mohammad Nabi 1 7 0 0 14.29
Kasun Rajitha b Fazal Haq Farooqi 1 7 0 0 14.29
Dilshan Madushanka not out 0 0 0 0 0.00


Extras 18 (b 0 , lb 10 , nb 1, w 7, pen 0)
Total 294/10 (46.2 Overs, RR: 6.35)
Bowling O M R W Econ
Fazal Haq Farooqi 6.2 1 27 1 4.35
Mujeeb ur Rahman 7 1 25 1 3.57
Naveen ul Haq 7 0 41 1 5.86
Azmatullah Omarzai 3 0 40 0 13.33
Abdul Rahman 4 0 39 1 9.75
Noor Ahmad 4 0 26 0 6.50
Rashid Khan 7 0 42 1 6.00
Mohammad Nabi 8 0 44 4 5.50


Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz retired 119 92 8 9 129.35
Ibrahim Zadran c Dhananjaya de Silva b Kasun Rajitha 7 18 1 0 38.89
Rahmat Shah retired 93 82 10 3 113.41
Mohammad Nabi c Kusal Mendis b Lahiru Kumara 1 8 0 0 12.50
Najibullah Zadran not out 15 22 0 0 68.18
Azmatullah Omarzai not out 14 7 1 1 200.00


Extras 12 (b 2 , lb 5 , nb 0, w 5, pen 0)
Total 261/4 (38.1 Overs, RR: 6.84)
Bowling O M R W Econ
Kasun Rajitha 7 3 18 1 2.57
Dilshan Madushanka 7 0 38 0 5.43
Lahiru Kumara 6 0 58 1 9.67
Dunith Wellalage 8 0 61 0 7.62
Dhananjaya de Silva 3 0 15 0 5.00
Dushan Hemantha 6.1 0 58 0 9.51
Charith Asalanka 1 0 6 0 6.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<