தென்னாபிரிக்கா தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாம் அறிவிப்பு

Afghanistan vs South Africa 2024

45
Afghanistan vs South Africa 2024

தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் குழாத்திலிருந்து முக்கிய நீக்கமாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இப்ரஹீம் ஷர்தான் உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

>>இந்திய டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு

அதேநேரம் தொடர்ந்து அணியிலிருந்து உபாதை காரணமாக வெளியேற்றப்பட்டிருக்கும் முஜீப் உர் ரஹ்மான் தென்னாபிரிக்க தொடரிலும் இடம்பெறவில்லை.

முன்னணி வீரர்கள் இருவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள போதும், உபாதையிலிருந்து குணமடைந்துள்ள ரஷீட் கான் தென்னாபிரிக்க தொடரில் விளையாடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷீட் கான் அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்துள்ள இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அப்துல் மாலிக், டர்விஷ் ரஷூலி மற்றும் அல்லாஹ் மொஹமட் கஷான்பர் போன்ற வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 18ம் திகதி முதல் 22ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் குழாம்

 

ஹஸ்மதுல்லாஹ் சஹிடி (தலைவர்),  ரஹ்மட் ஷா, ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ், இக்ரம் அலிகில், அப்துல் மாலிக், டர்விஷ் ரஷூலி, அஷ்மதுல்லாஹ் ஒமர்ஷாய், மொஹமட் நபி, குல்பதீன் நயீப், ரஷீட் கான், நன்கயல் கரோடி, அல்லாஹ் மொஹமட் கஷான்பர், பஷல் ஹக் பரூகி, பிடல் சமி,  நவீட் ஷர்தான், பரீட் அஹ்மட் மலீக்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<