2018 ஆம் ஆண்டில் திறமையை வெளிப்படுத்திய மெய்வல்லுனர் வீரர்களை கௌரவிக்கும் வகையில் மொனாக்கோவில் நடைபெறவுள்ள 2018 IAAF தடகள விருதுகளுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், உலகின் சிறந்த தடகள வீரர் விருதுக்கான ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளின் இறுதிப் பட்டியலை உலக மெய்வல்லுனர் சம்மேளனம் (IAAF) வெளியிட்டுள்ளது.
IAAFஇன் புதிய விதிமுறைகளில் இருந்து தப்பிய இலங்கை வீரர்கள்
ஒலிம்பிக் மற்றும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களை…..
மூன்று வகையான வாக்களிப்பு நடைமுறையில் இறுதிப் பட்டியல் தேர்வு செய்யப்பட்டது. IAAF பேரவை மற்றும் IAAF குடும்பம் மின்னஞ்சல் ஊடாக தமது வாக்கை அளித்ததோடு IAAF சமூக ஊடக தளங்களில் இணையதளம் வழியேயும் ரசிகர்கள் வாக்களித்தனர். முடிவின் 50 வீதத்திற்கு IAAF பேரவை வாக்குகள் சேர்க்கப்பட்டதோடு IAAF குடும்ப வாக்குகள் மற்றும் பொதுமக்கள் வாக்குள் முடிவுகளில் தலா 25 வீதத்திற்கு எண்ணப்பட்டன. வாக்களிப்பு நவம்பர் 13 ஆம் திகதி முடிவுற்றது.
கிறிஸ்டியன் கோல்மன் – 100 மீற்றர்

காயங்கள் கோல்மனின் உள்ளக போட்டிப் பருவத்திற்கு இடையூறை ஏற்படுத்தியபோதும், மூன்று IAAF டயமொண்ட் லீக் போட்டிகளில் அவரால் வெற்றிகளை பெற முடிந்தது. இதில் பிரசல்ஸ் இறுதிப் போட்டியில் அவர் 100 மீற்றரை 9.79 வினாடிகளில் முடித்தார்.
ஆர்மண்ட் டுப்லன்டிஸ் – கோலூன்றிப் பாய்தல்

18 வயதான டுப்லன்டிஸ் டம்பாரேவில் 20 வயதுக்கு உட்பட்ட பட்டத்தை வென்றதோடு, பெர்லினில் நடைபெற்ற ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டியில் தனது உச்ச திறமையை வெளிக்காட்டி 6.05 மீற்றர் உயரம் பாய்ந்ததுடன், 20 வயதுக்கு உட்பட்ட தனது சொந்த உலக சாதனையையும் முறியடித்தார்.
எலியுட் கிப்சொக் – மரதன்

கடந்த ஏப்ரல் மாதம் லண்டன் மரதனில் பெற்ற வெற்றிக்கு பின்னர் கென்ய நாட்டைச் சேர்ந்த கிப்சொக் மிகப் பெரிய நகரில் நடைபெறும் மரதன் போட்டியில் பெறும் இரண்டாவது வெற்றியாகவும் இது இருந்தது. இதன்போது 2:04:17 காலத்தைப் பதிவு செய்து 32 வினாடிகளால் வெற்றி பெற்ற கிப்சொக் லண்டன் மரதனில் இரண்டாவது சிறந்த காலத்தையும் பதிவு செய்தார்.
கெவின் மயெர் – டெகத்லன்

அன்று கார் மெக்கானிக்; இன்று சாதனை வீரராக மாறிய மலையகத்தின் சண்முகேஸ்வரன்
மன நிம்மதியையும், சந்தோஷத்தையும் பெற்றுக்கொள்வதற்காக ஓடிக்…..
சகலதுறையில் திறமையை வெளிப்படுத்தும் பிரான்ஸ் நாட்டவரான மயெர், ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டியில் நீளம் பாய்தலில் மூன்று தவறுகளை இழைத்து டெகத்லோன் போட்டியில் இருந்து வெளியேறினார். என்றாலும் ஐந்து வாரங்களுக்கு பின் மீளெழிச்சி பெற்ற அவர் டாலெஜில் நடைபெற்ற டெகாஸ்டர் போட்டியில் 9126 புள்ளிகளுடன் உலக சாதனை படத்தார்.
அப்தர்ரஹ்மான் சம்பா – 400 மீற்றர் தடைதாண்டல்

23 வயதான அப்தர்ரஹ்மான் சம்பா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மற்றும் 4×400 மீற்றர் தடைதாண்டல் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றதோடு, ஒஸ்ட்ராவாவில் நடைபெற்ற IAAF கொண்டினன்டல் கிண்ணத்திலும் வெற்றி பெற்றார்.
>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<






















