இங்கிலாந்து செல்லும் இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி

Sri Lanka U19 Team Tour of England 2024

49

இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு நான்கு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

குறித்த இந்த தொடரானது எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கை பயிற்சியாளரின் ஆளுகையில் T20 உலகக் கிண்ணத்தில் கனடா

இலங்கை இளையோர் அணியின் வீரர்களுக்கு வெவ்வேறு ஆடுகள சூழ்நிலைகளில் விளையாடும் அனுபவத்தை கொடுப்பதற்காக இந்த தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளாக இலங்கை கிரிக்கெட் சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

இலங்கை மற்றும் இங்கிலாந்து இளையோர் அணிகள் ஜூன் 25ம் திகதி ஒருநாள் பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ளதுடன், அதனையடுத்து மூன்று ஒருநாள் போட்டிகள் ஜூன் 28, ஜூலை 01 மற்றும் ஜூலை 3ம் திகதிகளில் நடைபெறவுள்ளன. 

அதனைத் தொடர்ந்து நான்கு நாள் போட்டிகள் இரண்டும் ஜூலை 8ம் திகதியும், 16ம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன. இதில் ஒருநாள் போட்டிகள் செல்ம்ஸ்போர்டில் நடைபெறவுள்ளதுடன், முதல் நான்கு நாள் போட்டி வோர்ம்ஷ்லேவிலும், இரண்டாவது நான்கு நாள் போட்டி செல்டன்ஹமிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

போட்டி அட்டவணை 

  • ஜூன் 25 – ஒருநாள் பயிற்சிப்போட்டிலக்பேர்க் பல்கலைக்கழகம் 
  • ஜூன் 28 – முதல் ஒருநாள்செல்ம்ஸ்போர்ட் 
  • ஜூலை 01 – இரண்டாவது ஒருநாள்செல்ம்ஸ்போர்ட் 
  • ஜூலை 03 – மூன்றாவது ஒருநாள் –  செல்ம்ஸ்போர்ட் 
  • ஜூலை 08 – 11 –முதல் நான்கு நாள் போட்டிவோர்ம்ஸ்லே 
  • ஜூலை – 16 – 19 – இரண்டாவது நான்கு நாள் போட்டிசெல்டன்ஹம் 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<