உலகக் கிண்ணத்தில் சிறந்த ஆரம்பத்தை பெறத் தவறியிருக்கும் இலங்கை

259

இலங்கை கிரிக்கெட் அணிக்கு இம்முறைக்கான உலகக் கிண்ணத்தில் சிறந்த ஆரம்பம் அமையவில்லை. தமது முதல் உலகக் கிண்ண போட்டியில் நியூசிலாந்து அணியினை எதிர்கொண்ட இலங்கை அணி, 10 விக்கெட்டுக்களால் மிகவும் மோசமான தோல்வியினை தழுவியிருக்கின்றது.

இலங்கை அணி, இம்முறைக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெல்ல எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றாக இல்லாத போதிலும் எதிரணிகளுக்கு சவால் தரும் ஆட்டத்தினை வெளிப்படுத்தும் என கூறப்பட்டிருந்தது.

பந்துவீச்சாளர்களின் அபாரத்தால் இலங்கையை வீழ்த்தினோம் – வில்லியம்சன்

இலங்கை அணியை வீழ்த்துவதற்கு பந்துவீச்சில் யுக்திகளைக் கையாண்டதாகவும்…

ஆனால், நியூசிலாந்து அணியுடனான தோல்வியின் பின்னர் கிரிக்கெட் விமர்சகர்கள் இலங்கை அணி இந்த உலகக் கிண்ணத்தில் ஒன்று, இரண்டு போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெறும் அல்லது எந்தவித வெற்றியும் இல்லாமல் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் என குறிப்பிடுகின்றனர்.

வீரர் தெரிவுகளில் ஏற்பட்ட சிக்கல்கள், அணித்தலைவர்களின் மாற்றம், நிர்வாக குழப்பங்கள், அடிக்கடி மாற்றப்பட்ட பயிற்சியாளர்கள், சக வீரர்கள் இடையில் ஒற்றுமையின்மை என பல்வேறு விடயங்கள் இலங்கை  அணியினை கடந்த காலங்களில் பாதித்தது.

இதேநேரம் கிரிக்கெட் விளையாட்டின் அடிப்படையில் இருந்து நோக்கும் போதும் இலங்கை அணி பெரிதாக எதனையும் சாதிக்கவில்லை. கடந்த 2018ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி அவற்றில் 6 போட்டிகளில் மாத்திரமே வெற்றியினை சுவைத்திருக்கின்றது.

இந்நிலையில் இலங்கை அணி இம்முறைக்கான உலகக் கிண்ணத் தொடரின் மூலம் புதியதோர் அத்தியாயத்தினை எதிர்பார்த்திருந்தது. ஆனால், அதற்கான ஆரம்பம் கிடைக்கவில்லை.  

இலங்கை அணியினை பொறுத்தவரையில் திறமைக்கு குறைவு இல்லை என்ற போதிலும் அதன் வீரர்கள் தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறுகின்றனர். இதுவே, இந்த உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்கு பெரிய சவாலாக இருக்கின்றது.

அதேநேரம் ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணியின் வெற்றியில்லாத் தன்மைக்கு காரணம் துடுப்பாட்டமாகும். ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி 50 ஓவர்களுக்கும் முழுமையாக துடுப்பாட தவறுகிறது. நியூசிலாந்து அணியுடனான உலகக் கிண்ண முதல் போட்டியில் இலங்கை அணி 29.2 ஓவர்களில் ஆட்டமிழந்து 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது இதற்கு சான்றாகும்.

தவறான துடுப்பாட்ட பிரயோகங்களே தோல்விக்கு காரணம் – திமுத் கருணாரத்ன

கார்டிப் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும், எமது வீரர்கள்…

ஆனால் இப்போது இலங்கை அணிக்கு ஒரே ஆறுதலாக இருப்பது அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மட்டுமே. ஒருநாள் போட்டிகளில் அனுபவம் குறைந்த கருணாரத்ன,  இலங்கை ஒருநாள் அணியின் தலைவராக மாறிய பின்னர் நல்ல முறையில் செயற்படுவதோடு, கார்டிப் போன்ற துடுப்பாடுவதற்கு கடினமான மைதானங்களில் பெறுமதியான ஓட்டக்குவிப்புக்களையும் மேற்கொண்டிருந்தார்.  

எனினும், கருணாரத்னவிற்கு இலங்கை அணியில் எதிர்பார்த்த துடுப்பாட்ட ஆதரவு கிடைக்கவில்லை. நியூசிலாந்து அணியுடனான உலகக் கிண்ண முதல் போட்டியில் குசல் பெரேரா மற்றும் திசர பெரேரா ஆகியோர் மட்டுமே கருணாரத்னவுடன் இணைந்து ஓரளவு நீண்ட நேரம் துடுப்பாடிய வீரர்களாக அமைந்தனர்.

இலங்கை அணிக்காக நியூசிலாந்து அணியுடனான போட்டியில் போராடிய திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்கள் குவித்திருந்ததோடு, உலகக் கிண்ண போட்டியொன்றில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இரண்டாவது துடுப்பாட்ட வீரராகவும் சாதனை படைத்திருந்தார்.

>>இலங்கை எதிர் நியூசிலாந்து – உலகக் கிண்ண போட்டியின் புகைப்படத் தொகுப்பு

“அது 300 ஓட்டங்கள் பெறும் ஆடுகளம் அல்ல, ஆக உங்களுக்கு வேறு போட்டித்திட்டம் வேண்டும்.”  

“உங்களுக்கு அங்கே எல்லாப் பந்துகளையும் அடித்தாட முடியாது, ஆக நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும், சில நேரங்களில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும், அவர்களும் சில நேரங்களில் நாம் நல்ல நிலையை அடையும் வாய்ப்பை தருவார்கள். அப்படியாக ஒருவாய்ப்பு கிடைக்கும் நிலையில் உங்களுக்கு ஓட்டங்கள் பெற முடியும். ஆனால் நாங்கள் அவர்கள் நன்றாக பந்துவீசியதாக நம்புகின்றேன்.” என திமுத் கருணாரத்ன கார்டிப் மைதானத்தில் நியூசிலாந்துடன் இடம்பெற்ற உலகக் கிண்ண முதல் போட்டி பற்றி கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.

உலகக் கிண்ணத் தொடரில் விளையாட இரண்டு நாட்களின் முன்னர் இலங்கை அணி, கார்டிப் மைதானத்தில் இருந்த புற்களின் அடர்த்தி தொடர்பில் திருப்தியுடன் இருக்கவில்லை. புற்கள் அடர்த்தியாக இருக்கும் மைதானத்தை  வழங்குவது தொடர்பில் ஐ.சி.சி. உடன் வாதிட முடியும். ஆனாலும் இவை உலகக் கிண்ணப் போட்டிகளாக போய்விட்டது.

Video – Losing is okay, but we need to put up a fight – Dimuth Karunaratne

Sri Lanka Captain Dimuth Karunaratne spoke on the team’s dismal performance in their…

இ்ப்படியான சவால்கள் இங்கிலாந்து மண்ணில் பொதுவானது என்ற போதிலும் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் கொண்ட அணிகளுக்கு எதிராக இலங்கை தம்மை தயார்படுத்தியிருக்க வேண்டும். அதேநேரம், நியூசிலாந்து அணி இலங்கை வீரர்களுடனான உலகக் கிண்ண முதல் போட்டியில் திறமையான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. இது இலங்கை அணிக்கு அடித்தாடும் துடுப்பாட்டம் கடினம் இல்லை என்பதை உணர்த்தியிருக்க வேண்டும்.

“நாம் மைதானத்தினை இரண்டு நாட்களுக்கு முன்னர் பார்வையிட்ட போது, அவர்கள் மைதானத்தில் உள்ள புற்களை குறைப்பார்கள் என நினைத்தோம். ஆனால் அவர்கள் அதே அளேவான புற்களை தொடர்ந்தும் வைத்திருந்தனர்.”

“உலகக் கிண்ணம் என்னும் போது, அனைவரும் அதிக ஓட்டங்கள் குவிக்கும் போட்டிகளையே எதிர்பார்ப்பார். எனவே, அடுத்து வரும் போட்டிகளில் அவர்கள் எமக்கு நல்ல ஆடுகளங்களை தருவார்கள் என எண்ணுகின்றேன்.” என கருணாரத்ன நியூசிலாந்து அணியுடனான போட்டி இடம்பெற்ற மைதானம் குறித்து பேசும்போது குறிப்பிட்டார்.

ஆனால் ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி, எவ்வளவு காலத்திற்கு தமது தோல்விகளுக்கு காரணங்களை சொல்லிக் கொண்டிருக்க போகின்றது?  நியூசிலாந்து அணி உலகக் கிண்ண முதல் போட்டியில் தமது பந்துவீச்சாளர்கள் மூலம் அச்சுறுத்தல் தந்தது உண்மைதான். ஆனால், இலங்கை அணியின் துடுப்பாட்டம் சுமாராகவே இருந்தது. ஏனெனில் இலங்கை அணியில் மூன்று வீரர்கள் மாத்திரமே இரு இலக்க ஓட்டங்களை பதிவு செய்தனர். இப்படியான விடயங்கள் நீங்கள் ஒரு இலங்கை ரசிகர் என்றால் உங்களுக்கு ஏமாற்றத்தையே தரும்.

இம்முறைக்கான உலகக் கிண்ணம் அணிக்கு ஒன்பது போட்டிகளை கொண்டிருப்பதால் உங்களது கெட்ட நாட்களை கடந்து நீங்கள் வந்துவிட வேண்டும். இங்கே திமுத் கருணாரத்ன தன்னால் சிறந்த ஒருநாள் போட்டி வீரராக மாற முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றார். அத்தோடு அவர் எதிர்காலத்தில் இலங்கை அணியின் சுவராக இருக்க முடியும் என்பதையும் அனைவருக்கும் காட்டியிருக்கின்றார். இது மட்டுமே இப்போதைக்கு நல்ல விடயமாக இருக்கின்றது.

மேற்கிந்திய தீவுகளின் வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்

This clip will only be available in Sri Lanka for viewing up to 3 days from the date of…

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<