இலங்கை மகளிர் அணிக்கான புதிய தேர்வுக்குழு நியமனம்!

Women’s Cricket Selections Committee

374

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக ஹேமந்த தேவப்பிரிய தொடர்ந்தும் செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஹேமந்த தேவப்பிரியவின் ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளதுடன், இவரின் தலைமையின் கீழ் முன்னாள் வீராங்கனைகளான ரசஞ்சலி அல்விஸ், ஸ்ரீபாலி வீரகொடி மற்றும் திலகா குணரத்ன ஆகியோர் தேர்வுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை மாவட்ட மாணவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்களின் உதவி

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்வுக்குழு தங்களுடைய முதல் பணியாக எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடருக்கான இலங்கை குழாமை பெயரிடவுள்ளது.

புதிய தேர்வுக்குழு

  • ஹேமந்த தேவப்பிரிய (தலைவர்)
  • ரசஞ்சலி அல்விஸ்
  • ஸ்ரீபாலி வீரகொடி
  • திலகா குணரத்ன

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<