பொலன்னறுவை மாவட்ட மாணவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்களின் உதவி

224

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்களின் ஒரு குழு பொலன்னறுவை மாவட்டத்தினைச் சேர்ந்த பாடசாலையொன்றின் மாணவர்களுக்கு அவர்களது கிரிக்கெட் விருத்திக்கு தேவையான உபகரணங்களை அன்பளிப்புச் செய்துள்ளது.

>>இந்திய டெஸ்ட் குழாத்துடன் இணையும் வேகப்பந்துவீச்சாளர்

அதன்படி பொலன்னறுவையில் கிரிக்கெட் விளையாட்டு வசதிகள் குறைவாகக் காணப்படும் அசேலபுர மஹாவித்தியாலய மாணவர்கள் தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்களிடம் இருந்து கிரிக்கெட் விளையாட்டுக்கு தேவையாக இருக்கும் உபகரணங்களை அன்பளிப்பாகப் பெற்றிருக்கின்றனர்.

இதேவேளை இந்த அன்பளிப்பு நிகழ்வின் போது தேசிய அணியின் கிரிக்கெட் வீரர்களான தசுன் ஷானக்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, அவிஷ்க பெர்னாண்டோ, பிரபாத் ஜயசூரிய, தனுஷ்க குணத்திலக்க மற்றும் துனித் வெல்லாலகே ஆகிய வீரர்கள் அசேலபுர மஹா வித்தியாலயத்திற்கு  விஜயம் மேற்கொண்டிருந்ததோடு, குறிப்பிட்ட பாடசாலை மாணவர்களுக்கு தங்களது ஆதரவினையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் வீரர்களின் உதவியைப் பெற்றிருக்கும் பாடசாலையானது அண்மையில் ஊடகம் ஒன்றின் வாயிலாக போதிய வசதிகள் இன்றி கிரிக்கெட் பயிற்சிகளில் ஈடுபடுவது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்தே தேசிய அணியின் வீரர்கள் வாயிலாக குறிப்பிட்ட பாடசாலைக்கு உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>டேவிட் வோர்னர் விடுத்துள்ள முக்கியமான வேண்டுகோள்!

கிரிக்கெட் வீரர்களுக்கு உபகரணங்களை அன்பளிப்புச் செய்யும் போது பேசியிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இந்த நிகழ்வின் குறிப்பிட்ட பாடசாலை மாணவர்கள் எதிர்காலத்தில் தேசிய கிரிக்கெட் அணியிலோ அல்லது 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியிலோ இணைவதற்கு அவர்களை ஊக்கப்படுத்தும் என குறிப்பிட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

செய்தி மூலம் – NewsWire

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<