இனவெறிக்குள்ளாகிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

157

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடிய காலப்பகுதியில் பயிற்சியாளர்கள் பலரால் தான் இனவாத வசைகளுக்கு ஆளாகியதாக அந்ந அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மைக்கெல் கெர்பெரி பரபரப்பு குற்றசாட்டொன்றை முன்வைத்துள்ளார். 

அத்துடன், இங்கிலாந்து கிரிக்கெட்டில் கறுப்பின வீரர்கள் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்

அமெரிக்காவில் நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் பிளாய்ட பொலிஸ் அதிகாரி ஒருவரால் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு விளையாட்டு நட்சத்திரங்கள் பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.

திசரவும், நானும் களு என அழைக்கப்பட்டோம் – டெரன் சமி குற்றச்சாட்டு

இந்த நிலையில், குறித்த சம்பவத்துக்கு கடும் கண்டனங்களை மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவரான டெரன் சமி, கிறிஸ் கெய்ல் மற்றும் டுவைன் பிராவோ உள்ளிட்ட வீரர்கள் வெளியிட்டிருந்தனர்

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கெல் கெர்பெரி இங்கிலாந்து அணியில் இனவெறி இருப்பதாக அண்மையில் வெளியிட்ட கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,

“கிரிக்கெட் போட்டிகளில் இனவாதம் நிறைந்திருக்கிறது. போட்டிகளை நடத்தும் நிர்வாகிகள் இனவாதம் தொடர்பாக எந்த ஒரு பாகுபாடும் காட்டியதில்லை. இங்கிலாந்து அணிக்கு கறுப்பினத்தவர்களின் பங்கு தேவைப்படாது.

மேலும், இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகத்தின் உயர் பதவியில் கறுப்பினத்தவர் உண்டா? முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் கறுப்பினத்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதா? இங்கிலாந்து அணியில் முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் கறுப்பினத்தவர்கள் இல்லை” என்று குறிப்பிட்டார்

“இங்கிலாந்து அணி பயிற்சியாளர் குழுவை எடுத்துக்கொள்ளுங்கள். எத்தனை கறுப்பின பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். இதுவரை எத்தனை கறுப்பின தலைவர்கள் இருந்துள்ளனர்

உள்ளூர் போட்டியான கவுண்டி கிரிக்கெட் தொடரில் எத்தனை கறுப்பின தலைவர்கள் உள்ளனர்? ஒருவர் கூட இல்லை. இந்த பதவிகளுக்கெல்லாம் பொறுத்தமான கறுப்பினத்தவர்களை நான் அறிவேன். 

ஒரு உள்ளூர் அணிக்காக நான் விளையாடச் சென்றபோது என்னை மைதானத்தில் வேலை பார்க்கும் அதிகாரி ஒருவர் மோசமாகத் திட்டி காறித் துப்பினார். “உன்னை இருட்டில் பார்க்க முடியவில்லை. அந்தளவுக்குக் கறுப்பாக இருக்கிறாய்” என்று கூறி என்னைக் கீழே தள்ளி விட்டார். என்னால் அங்கு எதுவும் செய்ய முடியவில்லை. நான் நடந்ததை வெளியில் சொல்லாமல் அந்த அணிக்கான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினேன். நான் அந்த அணியின் பெயரை வெளியிட விரும்பவில்லை” என்று கூறினார்

இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

“இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் உள்ள பிரச்சினைகள் குறித்து நீங்கள் மொயின் அலி மற்றும் ஆடில் ஷீட்டிடம் கேட்டால், அவர்கள் வெளியே வந்து சொல்லப் போவதில்லை. ஏனென்றால் அவர்கள் தற்போது இங்கிலாந்து அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்

50 அல்லது 100 டெஸ்ட் போட்டிகளில் நான் இங்கிலாந்து அணிக்காக விளையாடவில்லை. ஆனால் நான் அவ்வாறு விளையாடியிருக்க வேண்டும் என மக்கள் நினைத்திருக்கலாம்

உண்மையில், நான் ஏன் என் வாழ்க்கையை இழந்தேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நான் இங்கிலாந்து அணிக்காக விளையாடியிருக்கலாம். ஆனால் என்னைத் திரும்பிப் பார்ப்பது யார் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என தெரிவித்தார்

இதனிடையே, மைக்கெல் கெர்பெரியின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்

இந்த விளையாட்டுக்குநீண்ட தூரம் செல்ல வேண்டும்என்றும்எங்கள் விளையாட்டை அனுபவிப்பதற்கான தடைகள் உள்ளனஎன்றும் ஏற்றுக்கொண்டது.

அத்துடன் இங்கிலாந்தில் நடைமுறையில் உள்ளரூனி விதிமீதான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் வெளியிப்படுத்தினர். ஒவ்வொரு விளையாட்டிலும் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் மூத்த நிர்வாகப் பதவிகளுக்காக மாவட்ட அளவில் நேர்காணல் செய்ய வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  

கிரிக்கெட் என்பது அனைவருக்கும் ஒரு விளையாட்டு என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம், ஆனால் எங்கள் விளையாட்டை அனுபவிப்பதில் சோகமான தடைகள் பல சமூகங்களுக்கு உள்ளன என்பதை புரிந்துகொள்கிறோம்

ஒரு விளையாட்டாக, குறிப்பாக கறுப்பின சமூகங்கள் தொடர்பாக, நாங்கள் முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தும் வரை நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்

இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய ஆமிர், ஹரிஸ் சொஹைல்

அதனால்தான் மைக்கெல் கெர்பெரி போன்ற வீரர்களின் குரல்கள் மிகவும் முக்கியமானவை என்று இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது

தற்போது 39 வயதான, ஆரம்ப துடுப்பாட்ட வீரரான மைக்கெல் கெர்பெரி, இங்கிலாந்து அணிக்காக 6 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியதுள்ளதுடன், சர்ரே, ஹேம்ப்ஷெயார் மற்றும் லீஸ்டர்ஷெயார் உள்ளிட்ட கழகங்களுக்காக விளையாடியிருந்தார்

அத்துடன், பிக்பேஷ் லீக் டி20 தொடரில் பேர்த் ஸ்கோட்சர்ஸ் அணிக்காக தொடர்ச்சியாக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இங்கிலாந்தின் கிரிக்கெட் வரலாற்றில் கடந்த வெள்ளிக்கிழமை இங்கிலாந்தின் பிரதான கவுண்டி அணிகளில் ஒன்றான சர்ரே கழகத்தின் தலைமைப் பயிற்சியாளராக ஆசிய மற்றும் கறுப்பினத்தைச் சேர்ந்த சிறுபாண்மை வீரரான விக்ரம் சோலன்கி நியமிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்

அன்டர்சனின் ஓய்வு அறிவிப்பை தள்ளிப்போட்ட கொரோனா

இதுஇவ்வாறிருக்க, எதிர்வரும் ஜுலை மாதம் நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இனவாதத்திற்கு எதிரான வாசகங்களை ஏந்துவோம் என்று சில வாரங்களுக்கு முன் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் தெரிவித்திருந்தார்

ஆனால், தற்போது இங்கிலாந்து அணி வீரரான மைக்கெல் கெர்பெரிக்கு எதிராக இனவாதம் வெளிப்படுவதிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய ஜேம்ஸ் அண்டர்சன், கிரிக்கெட் போட்டிகளின் போது நான் இதுவரை இனவாத பிரச்சினைகளை நேரில் கண்டது கிடையாது. நியூஸிலாந்தில் ஜொப்ரா ஆர்ச்சர் இனவாத பிரச்சினையைச் சந்தித்த போது நான் அங்கு இல்லை. இனவாதம் தொடர்பாக எனது அணியினர் பாதிக்கப்பட்டால் நான் குரல் எழுப்புவேன்” என உறுதியளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

எதுஎவ்வாறாயினும், இனவாதப் பிரச்சினை கிரிக்கெட் உலகில் தற்போது சூடு பிடிக்கத்த தொடங்கியுள்ளது. பல்வேறு வீரர்கள் ஆரம்ப காலத்தில் சந்தித்த இனவாத பிரச்சினைகளை தற்போது வெளியில் கொண்டு வருகின்றனர். இது கிரிக்கெட் உலகிற்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<