திசரவும், நானும் களு என அழைக்கப்பட்டோம் – டெரன் சமி குற்றச்சாட்டு

1621

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய போது தான் நிறவெறி வசைக்கு ஆளானதாக மேற்கிந்திய தீவுகள் முன்னாள் அணித் டெரன் சமி அதிர்ச்சிப் புகார் தெரிவித்துள்ளார்.

இதன்படி. 2013, 2014ஆம் காலப்பகுதியில்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய போது இந்திய இரசிகர்களினால் தானும், இலங்கை வீரர் திசர பெரேராவும் களு என அழைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் ஆப்பிரிக்கஅமெரிக்கர் ஜோர்ஜ் பிளாய்ட் பொலிஸ் அதிகாரி ஒருவரால் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு விளையாட்டு நட்சத்திரங்கள் பலர் இனவெறிக்கு எதிராக குரல் எழுப்பியிருந்ததுடன், சமூக வலைத்தளம் மூலம் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

>> இங்கிலாந்து செல்ல அனுமதி வழங்கிய மே.தீவுகள் கிரிக்கெட் சபை

இந்த நிலையில், குறித்த சம்பவத்துக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்த டெரன் சமி, .சி.சி மற்றும் கிரிக்கெட் சபைகள் வாய்மூடி மௌனியாக இருப்பது ஏன்? நிறவெறிக்கு எதிராக இப்போது குரல் கொடுக்காவிட்டால் எப்போது கொடுக்கப் போகிறோம் என்று மனசாட்சியை தட்டி எழுப்பினார்

எனவே கிரிக்கெட் உலகமும் இனவெறிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என டெரன் சமி சில தினங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் .பி.எல் கிரிக்கெட்டில் நிறவெறி வசையை தன் மீதும் இலங்கை வீரர் திசர பெரேராவையும் நிறவெறி வசையினால் இந்திய இரசிகர்கள் அழைத்ததாக அவர் அதிர்ச்சிக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடும்போது என்னையும் திசர பெரேராவையும்Kaluஎன்று அழைப்பார்கள். இதன் அர்த்தம் பலசாலியான குதிரை அல்லது வலுவான கருப்பு மனிதன் என்கின்றனர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் அது வேறு அர்த்தம், இழி சொல் என்று தெரிந்தவுடன் கோபமடைந்தேன்.

களு என்ற வார்த்தை இந்தி மொழியில் கருப்பு நிறமாக உள்ளவர்களை நையாண்டி செய்வதற்காக பயன்படுத்தப்படும் சொல்லாகும். எனவே, இது இழிசொல்லாகத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதற்கு நிறைய கூற்றிட ஆதாரங்கள் உள்ளன என தனது இன்ஸ்டகிராமில் பதிவுசெய்துள்ளார்

2013, 2014ஆம் ஆகிய வருடங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய டெரன் சேமி தன்னை இவ்வாறு கேலி செய்தது சக வீரர்களா அல்லது இரசிகர்களா, எப்போது அது நடந்தது போன்ற விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே, சிங்கள மொழியிலும் களு என்ற சொல் இருப்பதுடன் அதன் பொருளும் கருப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<