ஹார்மனின் தலைமையில் இலங்கை வரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

153

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியாக ஹார்மன்பிரீத் சிங் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

இரண்டாவது T20I போட்டியில் போராடி வென்ற அவுஸ்திரேலியா!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் ஆடவுள்ள நிலையில், இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் ஒருநாள் மற்றும் T20I அணிக்குழாம்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீராங்கனையான மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலும் இருந்து ஓய்வினை அறிவித்த நிலையில், இலங்கை அணியினை எதிர்கொள்ளவுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினை T20I போட்டிகளிலும், ஒருநாள் போட்டிகளிலும் ஹார்மன்பிரீத் சிங் வழிநடாத்தவிருக்கின்றார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணம் இம்மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு, இந்த சுற்றுப்பயணத்தில் நடைபெறவுள்ள T20I போட்டிகளுக்காக தம்புள்ளை மைதானமும், ஒருநாள் போட்டிகளுக்காக கண்டி மைதானமும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் உப தலைவியாக அதிரடி துடுப்பாட்டவீராங்கனையான ஸ்மிரிதி மந்தானா நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். அதேவேளை இலங்கை சுற்றுப்பயணத்தில் அனுபவ வீராங்கனைகளான ஜூலான் கோஸ்வாமி மற்றும் ஸ்னேஹ் ரானா போன்றோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கீரினின் சதத்துடன் முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய A அணி வெற்றி

இதுதவிர ஜெமிமா ரொட்ரிக்கஸ் இந்திய அணியின் T20I குழாத்தில் மீண்டும் வாய்ப்பினை பெற்றிருக்க, ராதா யாதவ்விற்கும் T20I குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்திய ஒருநாள் குழாம் – ஹார்மன்பிரீத் சிங் (தலைவி), ஸ்மிரிதி மந்தனா (உப தலைவி), ஷெபாலி வர்மா, யாஷ்திகா பாட்டியா, S. மேக்னா, தீப்தி சர்மா, பூனம் யாதவ், ராஜேஸ்வரி காய்க்வாட், சிம்ரன் பாகதூர், ரிச்சா கோஸ், பூஜா வாஸ்தகார், மேக்னா சிங், ரேனுகா சிங், ஜெமிமா ரொட்ரிக்கஸ், ராதா யாதவ்

இந்திய T20I குழாம் – ஹார்மன்பிரீத் சிங் (தலைவி), ஸ்மிரிதி மந்தனா (உப தலைவி), ஷெபாலி வர்மா, யாஷ்திகா பாட்டியா, S. மேக்னா, தீப்தி சர்மா, பூனம் யாதவ், ராஜேஸ்வரி காய்க்வாட், சிம்ரன் பாகதூர், ரிச்சா கோஸ், பூஜா வாஸ்தகார், மேக்னா சிங், ரேனுகா சிங், தானியா பாட்டியா, ஹார்லின் டியோல்

T20I தொடர்

  • முதல் T20I போட்டி – ஜூன் 23 – தம்புள்ளை
  • இரண்டாவது T20I போட்டி – ஜூன் 25 – தம்புள்ளை
  • மூன்றாவது T20I போட்டி – ஜூன் 27 – தம்புள்ளை

ஒருநாள் தொடர்

  • முதல் ஒருநாள் போட்டி – ஜூலை 1 – கண்டி
  • இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜூலை 4 – கண்டி
  • மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜூலை 7 – கண்டி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<