கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுக்கு மத்தியில் ஐரோப்பாவின் முதல் பிரதான கால்பந்து லீக் தொடராக ஜெர்மனியின் புன்டஸ்லிகா போட்டிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படும் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி திரும்பிய ரொனால்டோ 14 நாள் சுய தனிமைப்படுத்தலில்
தனது தாய்நாடான போர்த்துக்கலில் இருந்து இத்தாலி திரும்பி இருக்கும் ஜுவன்டஸ்..
இந்தப் போட்டிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஜெர்மனி அரசு மற்றும் அதன் கூட்டாட்சி மாநிலங்கள் அனுமதி அளித்துள்ளன. எனினும் வியாழக்கிழமை (07) நடைபெறும் ஜெர்மனி கால்பந்து லீக்கின் (DFL) வழக்கமான மாநாட்டின்போதே போட்டி ஆரம்பிக்கும் திகதி நிர்ணயிக்கப்படவுள்ளது. இதில் போட்டிகள் ஆரம்பிப்பதற்காக முன்கூட்டிய திகதியாக மே 15 ஆம் திகதி கருதப்படுவதோடு மே 22 ஆம் திகதியும் பரிசீலனையில் உள்ளது.
புன்டஸ்லிகா தொடரில் இன்னும் ஒன்பது போட்டிகள் எஞ்சியிருப்பதோடு, வரும் ஜூன் 30 ஆம் திகதி இந்தப் பருவத்தை பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை ஜெர்மனியில் ஒன்றுகூடல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களுக்கு அரங்குகளில் அனுமதி அளிக்கப்பட மாட்டாது. இந்தத் தொடரில் பயேர்ன் முனிச் அணி 4 புள்ளிகளால் முதலிடத்தில் உள்ளது. பொருசியா டோர்ட்முண்ட் இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது.
இந்த முடிவுக்கு பெயார்ன் கழக தலைவர் கார்ல் ஹென்ஸ் நன்றி தெரிவித்தார். “புன்டஸ்லிகா பருவத்தை பூர்த்திசெய்ய வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்ததற்கு அரசியல்வாதிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பெரும்பாலும் மே நடுப்பகுதியில் நாம் போட்டிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். மைதானத்தில் ஆட்டத்தின் முடிவுகள் தீர்மானிக்கப்படுவதை அது உறுதி செய்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
“இன்றைய முடிவு புன்டஸ்லிகா மற்றும் புன்டஸ்லிகா 2 தொடர்களுக்கு நல்ல செய்தியாகும். ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்படுவது எவருக்கும் சாதகமான சூழல் அல்ல. இந்த பிரச்சினை சில கழகங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றபோதும், தற்போதைய வடிவில் லீக் போட்டிகளை முன்னெடுப்பதற்கு இதுவே ஒரே வழியாகும்” என்று ஜெர்மனி கால்பந்து லீக்கின் தலைமை நிறைவேற்று அதிகாரி கிறிஸ்டியன் செய்பெர்ட் குறிப்பிட்டார்.
“ஐரோப்பா மற்றும் உலகம் அனைத்தினதும் பார்வை எம் பக்கம் திரும்பும்” என்று ஜெர்மனி மற்றும் பெயர்ன் முனிச் அணிகளின் தலைவர் மானுவேல் நியேர் ஜெர்மனி ஒளிபரப்புச் சேவையான FAZ இற்கு புதன்கிழமை (06) கூறியிருந்தார். ஜெர்மனி கால்பந்து, சமூகத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும் கோல்காப்பளரான நியேர் சுட்டிக்காட்டினார்.
எனினும், ஜெர்மனியின் இரு கால்பந்து பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட 1,724 கொரோனா வைரஸ் சோதனைகளில் 10 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையிலேயே ஜெர்மனி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
ஜூன் மாதத்திற்குள் போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படாத பட்சத்தில் முதல் நிலை பிரிவின் பல அணிகளும் பொருளாதார ரீதியிலான நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் என்று ஜெர்மனி கால்பந்து லீக் எச்சரித்திருந்தது.
தம்மை கேலி செய்த நெய்மாருக்கு நன்றி கூறிய ஹாலன்ட்
ஜெர்மனியின் பொருசியா டொர்ட்முண்ட் வீரர் ஏர்லிங் ஹாலன்ட் கோல் பெறும்..
லீக் போட்டிகள் மே மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்படலாம் என்று ஜெர்மனி கால்பந்து லீக் முன்னர் அறிவித்ததற்கு அமைய வீரர்கள் கடந்த மாதம் தொடக்கம் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றினால் ஜெர்மனியில் 7,000க்கும் குறைவானவர்களே உயிரிழந்துள்ளனர். இது பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் உட்பட ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகளை விடவும் குறைவான உயிரிழப்பு எண்ணிக்கையாகும்.
ஐரோப்பாவில் பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து நாடுகள் தமது கால்பந்து பருவத்தை இரத்துச் செய்ததோடு இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து நாடுகள் ஜூன் மாதத்தில் போட்டிகளை மீண்டும் நடத்த எதிர்பார்த்துள்ளன.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<